சிறப்புச் செய்திகள்

5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தியது குற்றம் – சம்பிக்க ரணவக்க

கொரோனா வைரஸ் முடக்க நிலை காரணமாக வாழ்வாதாரத்தை இழந்தவர்களிற்கு 5000 ரூபாய் கொடுப்பனை வழங்குவதை நிறுத்தி, அரசாங்கம் கடுமையான குற்றத்தை புரிந்துவருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், 5000 ரூபாய் கொடுப்பனை ...

மேலும்..

இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனாவுக்கு எதிராக போராடுகிறது – இந்தியப் பிரதமர்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தின் கீழ் இலங்கை மிகச் சிறந்த முறையில் கொரோனா தொற்று பரவலுக்கு எதிராக போராடுகின்றது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று (சனிக்கிழமை) தொலைபேசியில் தொடர்புகொண்டு ...

மேலும்..

கொரோனா பரவலுக்கு மத்தியில் புதிதாகப் பரவும் நோய் – குழந்தைகளுக்கு எச்சரிக்கை

குழந்தைகள் மத்தியில் புதிய வகை நோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக வைத்தியர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் கவாசாகி (Kawasaki)  என்ற நோய் குழந்தைகள் மத்தியில் தற்போது பரவுவதால், பெற்றோர்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு Lady Ridgeway வைத்தியசாலையின் விசேட வைத்திய ...

மேலும்..

கேப்பாப்புலவில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் இருவருக்கு கொரோனா தொற்று

கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட 2 கடற்படையினரும் இன்று (சனிக்கிழமை) வெலிக்கந்த மருத்துவமனைக்கு சிகிச்சைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். முல்லைத்தீவு – கேப்பாப்புலவு, விமானப்படைத்தளத்தில் ...

மேலும்..

ஊரடங்கு சட்டம் குறித்த முக்கிய அறிவிப்பு

நாடுமுழுவதும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படவுள்ளது. குறித்த தினம் முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10.00 மணி முதல் அதிகாலை 4.00 மணி வரை அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ...

மேலும்..

நாட்டில் இன்றுமட்டும் 17 பேருக்கு கொரோனா தொற்று

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கை 1,085 ஆக அதிகரித்துள்ளது. இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் 416 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்றுவருகின்றனர் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மேலும்..

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளார் நிஸ்ஸங்க சேனாதிபதி

அவன்கார்ட் வழக்கு தொடர்பில் அதன் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி அரசியல் பழிவாங்கல்கள் குறித்து ஆராயும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. எதிர்வரும் 26 ஆம் திகதி காலை 10 மணிக்கு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. அவன்கார்ட் நிறுவனத்தை முறையற்ற விதத்தில் ...

மேலும்..

சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான திட்டமொன்றை தயாரிக்குமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு

வடக்கு மாகாண சுகாதாரத்துறையின் உடனடித் தேவைகளுக்கான முக்கியத்துவத்தின் அடிப்படையில் பூரணப்படுத்தப்பட்ட திட்டமொன்றை தயாரிக்குமாறு அம்மாகாண ஆளுநர் திருமதி. பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பணிப்புரை விடுத்துள்ளார். அத்துடன் தயாரிக்கப்படும் திட்டத்தினை படிப்படியாக செயற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாணத்தில் காணப்படும் மாவட்ட பொது வைத்தியாசலைகள், ...

மேலும்..

சுகாதார முறைகளைப் பேணி யாழில் இருந்து கதிர்காமம் நோக்கி யாத்திரை

யாழில் இருந்து கதிர்காமத்தை நோக்கிய யாத்திரையை ஆரம்பிக்க அனுமதி கிடைத்துள்ளதாக யாத்திரைக்கு தலைமை தாங்கும் சி.ஜெயசங்கரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “கொரோனோ வைரஸ் தாக்கத்தினால் ...

மேலும்..

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகள் – மக்கள் விசனம்

கல்முனை கண்ணகி கோயில் வீதியில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர். அண்மைக்காலமாக குறித்த வீதியின் அருகில் உள்ள வெற்று காணியில் இரவு வேளைகளில் இனந்தெரியாத நபர்களால் பெருமளவு கழிவுகள் வீசப்பட்டுள்ளன. இதனால் குறித்த காணியில் குப்பைகள் ...

மேலும்..

நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் – பொலிஸார்

நாளை ஞாயிற்றுக்கிழமையும் திங்கட்கிழமையும் ஊரடங்கு உத்தரவு அமுலில் உள்ள நிலையில் நாடு முழுவதும் 900 க்கும் மேற்பட்ட சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் விசேட கடமை நேரத்தின் அடிப்படையில் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் விசேட ரோந்து நடவடிக்கைகளும் ...

மேலும்..

ரணில் – சஜித் தரப்பின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடு!

பொதுத்தேர்தலின் பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியை அதன் கூட்டணியில் சேர்க்கும், ஆனால் அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களை வைத்திருப்பவர்களை தூக்கி எறியும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் அமரசேன தெரிவித்தார். “முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நவீன் திசாநாயக்க ஐக்கிய ...

மேலும்..

வெடுக்குநாரிஆலய நிர்வாகத்திற்கு எதிரான வழக்கு – நிர்வாகத்தினர் பிணையில் விடுதலை

வவுனியா – வெடுக்குநாரி மலை ஆலய நிர்வாகத்தினருக்கு எதிராக புதிய பிரிவின் கீழ் வவுனியா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நிர்வாகத்தினர் பிணையில் விடுவிக்கப்பட்டனர். வழக்கு தொடர்பான விசாரணைகள் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நீதிமன்றில் இடம்பெற்றது. இதன்போது ஆலய நிர்வாகத்தினர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தபோதிலும் ஏற்கனவே ...

மேலும்..

இதுவரை மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை தாண்டியது

இலங்கையில் இதுவரை 51 ஆயிரத்துக்கு 94 பேருக்கு கொரோனா வைரஸை கண்டறியும் பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் இந்தப் பணியகத்தினால் 1,970 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுவே நாள் ஒன்றுக்கு மேற்கொள்ளப்பட்ட அதிகளவிலான பரிசோதனை என ...

மேலும்..

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் 41 பேர் வீடுகளுக்கு திரும்பினர்

இலங்கை விமானப்படையின் கண்காணிப்பின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 41 பேர் வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் குறித்த தனிமைப்படுத்தலை நிறைவு செய்து இன்று (சனிக்கிழமை) காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர் என விமானப்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. மேலும் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தமைக்கான சான்றிதழ்களும் இதன்போது அவர்களுக்கு வழங்கி ...

மேலும்..