சிறப்புச் செய்திகள்

நாடு முழுவதும் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் 680 மில்லியன் செலவில் விசேட வசதி – கல்வி அமைச்சர்

பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அனைத்து பாடசாலைகளிலும் வெப்பநிலையை கண்டறியும் சாதனங்கள், கைகளை சுத்தம் செய்வதற்கான வசதிகள் மற்றும் விசேட அறைகள் ஆகியவை அமைக்கப்படும் என கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பள்ளிகளுக்கு ...

மேலும்..

வவுனியா தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அழைத்துச் செல்லப்பட்ட கடற்படை வீரர்கள்

வவுனியா பம்பைமடு இராணுவ முகாம் மற்றும் பெரியகட்டு இராணுவ முகாம் போன்ற கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு 276 கடற்படை வீரர்கள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு 40க்கும் மேற்பட்ட பேருந்துகளின் மூலம் இவ்வாறு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் வவுனியா ...

மேலும்..

பொலிஸாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை

பாறுக் ஷிஹான்   கொள்ளை தொடர்பிலான விசாரணைக்கு பொலிஸாருக்கு  ஒத்துழைப்பு வழங்க மறுத்தவருக்கு  சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று எச்சரிக்கை செய்துள்ளது. கடந்த 15.5.2020 அன்று அம்பாறை மாவட்டம் காரைதீவு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நள்ளிரவு முதல் அதிகாலை வரையான காலப்பகுதியில்  ரூபா 11 இலட்சம் ...

மேலும்..

ராஜிதவுக்கு விடுதலை வேண்டி சஜித் தரப்பு நடத்திய ஆர்ப்பாட்டம் குறித்து விசாரணை!

வெள்ளை வான் கடத்தல் ஊடகவியலாளர் மாநாடு தொடர்பான வழக்கில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாஸ உள்ளிட்ட தரப்பினரால் களுத்துறை நகரில் நடத்தப்பட்ட எதிர்ப்பு ...

மேலும்..

தேர்தலை நடத்துவது எப்படி? கட்சிகளிடம் ஆலோசனை கேட்கின்றார் தேசப்பிரிய!

நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக  சுகாதாரப் பிரிவினரோடு கலந்துரையாடி முடிவெடுக்கவுள்ளமையால் பிரசாரப் பணிகள் கைக்கொள்ளப்பட வேண்டிய  முறை குறித்த அரசியல் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய - எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது ...

மேலும்..

கொரோனா போரை வென்ற பின்பே பாடசாலைகள் மீளத் திறக்கப்படும்! – கல்வி அமைச்சர் தெரிவிப்பு

"கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் வெற்றியீட்டியதன் பின்னரே பாடசாலைகள் மீளத்திறக்கப்படும்" என்று கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கொரோனாவுடனான போராட்டத்தை முடித்து நாங்கள் பாடசாலைகளை மீளத் திறப்போம். மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்குக் கொண்டு வருவோம். போராட்டத்தின் ஆரம்பமும் போராட்டத்தின் முடிவும் ...

மேலும்..

உயர்நீதிமன்றத்துக்கு சவால்விட்டு மைத்திரி போல் அவமானப்படாதீர் – கோட்டாவுக்கு மங்கள அறிவுரை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போல் இந்நாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் உயர்நீதிமன்றத்துக்குச் சவால்விட்டு அவமானப்பட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்." - இவ்வாறு முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். நாடாளுமன்றத்தை மீளக் கூட்டுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டாலும் தாம் கூட்டப்போவதில்லை என்று நேற்றுமுன்தினம் நடைபெற்ற ...

மேலும்..

ராஜபக்ச அரசுக்கு பொன்சேகா எச்சரிக்கை!

"சர்வதேச அமைப்புகளை அல்லது சர்வதேச நிறுவனங்களைச் சீண்டும் வகையில் ராஜபக்ச அரசு செயற்பட்டால் அவர்கள் மட்டுமல்ல முழு நாடுமே விபரீத விளைவுகளைச் சந்திக்க வேண்டிவரும்." - இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் ...

மேலும்..

நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு நீதிமன்றம் உத்தரவிட முடியாது! – மஹிந்த அணி சொல்கின்றது

"உயர்நீதிமன்றத்தில் எதிரணியினரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களின் பிரகாரம் நாடாளுமன்றத்தை மீளக்கூட்டுமாறு ஜனாதிபதிக்கு நீதிமன்றம் உத்தரவிட முடியாது." - இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "ஜனாதிபதியின் நாடாளுமன்றக் கலைப்பு வர்த்தமானி அறிவிப்பையும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஜூன் 20ஆம் திகதி ...

மேலும்..

மத்தள, இரத்மலானை, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு விமான நிலையங்களில் சேவைகள் மீள ஆரம்பம்

கட்டுநாயக்க விமான நிலையத்தைத் தொடர்ந்து மத்தள, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு மற்றும் இரத்மலானை விமான நிலையங்களில் பயணிகள் சேவைகளை விரிவுபடுத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என விமான சேவைகள் அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நாட்டுக்குள் பரவுவதைத் தடுக்கப் பல மாற்று நடவடிக்கைகளில் அரசு ...

மேலும்..

முப்படையினரில் 612 பேர் கொரோனாவுக்கு இலக்கு! – 600 பேர் கடற்படையினர்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 612 பேர் முப்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. அவர்களில் 600 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தரைப்படையினர் எனவும், ஒருவர் விமானப் படையைச் சேர்ந்தவர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். கொரோனாவால் ...

மேலும்..

வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள்! தேவையான வசதிகளை வழங்க வேண்டும் என மஹிந்தவிடம் சங்கா, மஹேல நேரில் வலியுறுத்து

"வடக்கு, கிழக்கில் திறமையான விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்க வேண்டும்." - இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோர் கூட்டாகக் கோரிக்கை விடுத்தனர். பிரதமர் மஹிந்த ராஜபக்வுடன் நேற்று நடத்திய சந்திப்பின்போதே ...

மேலும்..

மத்திய கிழக்கு நாடுகளில் 350 இற்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா தொற்று

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் 350 இற்கும் அதிகமான இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. அதிகமான நோயாளிகள் ஐக்கிய அரபு எமிரகத்திலேயே பதிவாகியுள்ளனர். அங்கு 200 இற்கும் அதிகமான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ...

மேலும்..

கிழக்கில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பாதுகாக்க பாதுகாப்பு அமைச்சின் தலைமையில் ஜனாதிபதி செயலணி

கிழக்கு மாகாணத்தில் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை முறையாக மதிப்பீடுசெய்து பாதுகாப்பதற்கு பாதுகாப்பு செயலாளரின் தலைமையில் ஜனாதிபதி செயலணியொன்றை அமைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் அழிவடைவது குறித்து பல்வேறு தரப்பினர் விடயங்களை முன்வைத்து வருகின்றனர் என்றும் ...

மேலும்..

கடந்த 24 மணி நேரத்தில் ஊரடங்கு உத்தரவை மீறிய 541 பேர் கைது

ஊரடங்கு உத்தரவை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 541 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். மேலும் இந்த காலப்பகுதியில், 138 வாகனங்களையும் பொலிஸார் பொறுப்பேற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலையடுத்து, கடந்த மார்ச் மாதம் ...

மேலும்..