சிறப்புச் செய்திகள்

கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 16 பேர் பூரண குணமடைந்தனர்

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியிருந்த மேலும் 16 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 620 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களில் 13 கடற்படையினர் உள்ளடங்கும் நிலையில், குணமடைந்த ...

மேலும்..

கிளிநொச்சியில் பொலிஸ் விடுதி மீது மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி காயம்

கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் விடுதி மீது பாரிய மரம் முறிந்து விழுந்ததில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வீசிவரும் கடும் காற்றினால் பல்வேறுப்பட்ட பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இந்நிலையில், நேற்று (வியாழக்கிழமை) மாலை இராமநாதபுரம் பொலிஸ் ...

மேலும்..

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

அம்பாறை –  கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை பெண்மனி ஒருவர் பெற்றெடுத்துள்ளார். பிரவச வலி என தெரிவித்து, 28 வயதுடைய கோமாரி பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் நேற்று (வியாழக்கிழமை)  குறித்த பகுதியிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ...

மேலும்..

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது – மகிந்த சமரசிங்க

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தன்னை பலசாலியாக காண்பிப்பதற்கு முயல்கின்றது என முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலிருந்து முன்னாள் அமைச்சர் மகிந்த சமரசிங்க நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அவர் இந்த விடயத்தினைக் கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனக்கு அரசியல் செல்வாக்கு இல்லாத நிலையிலும் ...

மேலும்..

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!

பொதுத்தேர்தல் நடாத்துவதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான பரிசீலனை இன்று(வெள்ளிக்கிழமை) ஐந்தாவது நாளாகவும் ஆரம்பமாகியுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இந்த மனுக்கள் நான்காவது நாளாக நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனையடுத்து, இன்று காலை 10 ...

மேலும்..

சீரற்ற வானிலை – 20 ஆயிரத்து 265 பேர் பாதிப்பு!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 5 ஆயிரத்து 356 குடும்பங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்து 265 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதுடன், ...

மேலும்..

ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர்

கொரோனா தொற்று காரணமாக ரஷ்யாவில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளனர். ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து இவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்துவரும் விசேட திட்டத்திற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும்..

கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு!

ஊரடங்கு சட்டத்தினால் கொழும்பில் நிர்க்கதிக்குள்ளான மேலும் இரண்டாயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். கொழும்பு தெற்கு பொலிஸ் பிராந்தியத்தில் தற்காலிகமாக தங்கியிருந்தவர்களே இவ்வாறு நேற்று சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளை சேர்ந்தவர்கள் ...

மேலும்..

மட்டக்களப்பில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீயில் எரிந்து நாசம்

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பாசிக்குடா பிரதேசத்தில் சுமார் நான்கு ஏக்கர் காடு தீப்பற்றி எரிந்துள்ளதாக கல்குடா பொலிஸார் தெரிவித்தனர். பாசிக்குடா முருகன் ஆலய வீதியிலுள்ள அரச காணியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கல்குடா கிராம சேவை அதிகாரி க.கிருஷ்ணகாந் ...

மேலும்..

கொரோனாவினால் இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் – பேராசிரியர் சிறிமால் அபயரட்ண

கொரோனா வைரஸ் காரணமாக இலங்கையில் வறுமை நிலை அதிகரிப்பது தவிர்க்க முடியாத விடயம் என கொழும்பு பல்கலைகழகத்தின் பொருளியல் பேராசிரியர் சிறிமால் அபயரட்ண தெரிவித்துள்ளார். வறுமையை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசாங்கத்தின் கடமை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நகரப்பகுதிகளில் வாழும் வறிய மக்களே இவ்வாறு ...

மேலும்..

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படாது என அறிவிப்பு!

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இதுகுறித்த அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எந்தவொரு சமையல் எரிவாயு உற்பத்தி நிறுவனமும் எரிவாயுவின் விலையை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கையை ...

மேலும்..

5000 ரூபாய் கொடுப்பனவை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுக்கவில்லை – மகிந்த தேசப்பிரிய

அரசாங்கத்தின் 5000 ரூபாய் நிதி உதவியை நிறுத்துமாறு தாம் ஒருபோதும் வேண்டுகோள் விடுக்கவில்லை என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எனினும் 5000 ரூபாய் கொடுப்பனவு தொடர்பான குற்றச்சாட்டுகள் அரசியல் தன்மை கொண்டவையாக காணப்பட்டதால் குறிப்பிட்ட திட்டத்தினை அரசியல் கட்சியோ ...

மேலும்..

நாளை இரவு முதல் செவ்வாய்கிழமை வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் நாளை(சனிக்கிழமை) இரவு முதல் எதிர்வரும் செவ்வாய்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஊடகப்பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ள ஊரடங்கு எதிர்வரும் செவ்வாய்கிழமை அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. அத்துடன், ...

மேலும்..

அம்பாறையில் கடலரிப்பைத் தடுப்பதற்கு நடவடிக்கை

அம்பாறை நிந்தவூர் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கடலரிப்பைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக நிந்தவூர் பிரதேச சபையின் பதில் தவிசாளர் வை.எல்.சுலைமாலெவ்வை தெரிவித்தார். தற்போது வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் ஒரு வாரமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால், நிந்தவூர் பகுதியில் பாரிய கடலரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடலரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை இன்று (வெள்ளிக்கிழமை) காலை பார்வையிட்டதன் பின்னர் ...

மேலும்..

இலங்கை போக்குவரத்து சபையை கட்டியெழுப்ப ஜனாதிபதியிடமிருந்து முன்மொழிவுகள்

இலங்கை போக்குவரத்து சபையை, இலாபமீட்டும் முன்னணி நிறுவனமாக மாற்றுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்மொழிவுகளை முன்வைத்துள்ளார். திறைசேரியிலிருந்து நிதி ஒதுக்கப்படுவதற்கு பதிலாக திறைசேரிக்கு நிதியை பெற்றுக்கொடுக்கும் அரச நிறுவனமாக இலங்கை போக்குவரத்து சபையை மாற்ற முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். இலங்கை போக்குவரத்து சபையின் ...

மேலும்..