சிறப்புச் செய்திகள்

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சி அடையாது – தம்மிக பெரேரா

கல்வி இல்லாமல் எந்த நாடும் வளர்ச்சியடைய முடியாது என முன்னாள் அமைச்சர் தம்மிக பெரேரா தெரிவித்துள்ளார். கண்டியில் கல்வி நிலையம் ஒன்றினை திறந்துவைத்து அங்கு உரையாற்றும் போதே தம்மிக பெரேரா இதனை குறிப்பிட்டுள்ளார். ஆயிரக்கணக்கான மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு அண்மையில் குறித்த ...

மேலும்..

மதுபானசாலையை அகற்றுமாறுகோரி பொதுமக்கள் போராட்டம்!

யாழ்ப்பாணம் – உடுப்பிட்டி சந்தியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலையை அகற்றுமாறு கோரி அப்பகுதி மக்களால் போராட்டமொன்று இன்று காலை முன்னெடுக்கப்பட்டது. குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் பாடசாலைகள், ஆலயம் என்பன இருப்பதனால் உடனடியாக மதுபானசாலை அகற்றுமாறும், அவ்வாறு மதுபான சாலை அகற்றப்படாவிட்டால் ...

மேலும்..

50 இலட்சம் பந்தயம் : உண்மையை வெளிப்படுத்திய தயாசிறி

கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தன்னை நீக்குவதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண 50 இலட்சம் பந்தயம் கட்டியதாக தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கத்திடம் இருந்து பதவிகளையும் வரங்களையும் பெற்றுக் கொண்ட ஒரு குழுவினர், கட்சியை சீரழிப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். இவர்கள் நயவஞ்சகமாகவும் ...

மேலும்..

அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்! -ஆளுநர் செந்தில்அறிவுரை-

”அரசால் தடைவிதிக்கப்பட்ட வலைகளைப் பயன்படுத்த வேண்டாம்” என மீனவர்களுக்கு ஆளுநர் செந்தில் செந்தில் தொண்டமான்  அறிவுரை வழங்கியுள்ளார். திருகோணமலையில் சட்ட விரோத மீன்பிடிக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்றைய தினம்  மீனவர்களால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்பிரச்சினை தொடர்பில் இன்று ஆளுநர் அலுவலகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் ...

மேலும்..

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்குச் சொந்தமான ஒரு ஏக்கர் காணி இராணுவத்தினரால் விடுவிப்பு

2009 இற்கு பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த கிளிநொச்சி மத்தியக் கல்லூரிக்குச் சொந்தமான காணியில் ஒரு ஏக்கர் காணி வியாழக்கிழமை (14) இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி டிப்போச் சந்திக்கருகில் இரத்தினபுரம் வீதி பக்கமாக இக் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.  காணி விடுவித்தலுக்கான ஆவணத்தை இராணுவ ...

மேலும்..

நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் மீதான வழக்கு விசாரணை பெப்ரவரி 15 இல்!

பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உட்பட சிலர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பெப்ரவரி 15ஆம் திகதி மீள விசாரணைக்கு எடுக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராகவிருந்தபோது சட்டவிரோதமாக ...

மேலும்..

குருந்தூர் மலையில் பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு என தொடரப்பட்ட வழக்கு : கஜேந்தரன், வினோ தலா ஒரு லட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுதலை : ஜனவரி 11க்கு வழக்கு ஒத்திவைப்பு

முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் மேற்கொள்ளப்பட்ட பௌத்த வழிபாடுகளுக்கு இடையூறு விளைவிக்கப்பட்டதாக கல்கமுவ சந்தபோதி தேரர் உள்ளிட்ட பௌத்த துறவிகளால் தொடரப்பட்ட வழக்கில், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வராசா கஜேந்திரன், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் தலா ஒரு இலட்சம் ரூபாய் ஆட்பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், ...

மேலும்..

ஓய்வு பெற்ற மருத்துவர்களை கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம்!

ஓய்வு பெற்ற மருத்துவர்களை திரும்ப கடமைக்கு அழைப்பதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது. இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். இதன்படி தற்போது நிலவும் வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் சேவையில் ...

மேலும்..

புகையிரதத்தில் மோதி யானை உயிரிழப்பு

மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி யானை ஒன்று நேற்று புதன்கிழமை (13) இரவு  உயிரிழந்துள்ளது. வெலிகந்த மற்றும் பூனானி புகையிரத நிலையங்களுக்கு இடையில் இரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் இடம்பெற்ற ...

மேலும்..

சமாதான நீதிவானுக்கான நியமன கடிதங்கள் நுவரெலியாவில் வழங்கல்

கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் சிபாரிசு மூலமாக சமாதான நீதிவானுக்கான நியமனக் கடிதங்களை அண்மையில் நுவரெலிய மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் அவர் உரியவர்களுக்கு கையளித்தார். அதன்படி, ஹற்றன் வலயக் கல்வி பணிமனையின் ஆசிரியர் ஆலோசகர்களான அருணாச்சலம் தமயந்தி, சிவபாலசுந்தரம் கலைவாணி, ...

மேலும்..

விவசாயிகளின் பிரச்சினை குறித்து மட்டக்களப்பில் கூடி கலந்தாய்வு!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் மாவட்ட செயலகத்தில்  புதன்கிழமை இடம்பெற்றது. இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக விவசாய செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு கலந்துரையாடப்பட்டன. இந்தக் கலந்துரையாடலின் ...

மேலும்..

அரசை வீழ்த்துவதற்காக நாட்டை காட்டிகொடோம்! உதய கம்மன்பில திட்டவட்டம்

அரசாங்கத்தை வீழ்த்த உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்போம். ஆனால் அதற்காக சர்வதேச மட்டத்தில் நாட்டையும், இராணுவத்தினரையும் காட்டிக் கொடுக்கமாட்டோம். உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலுக்கு சர்வதேச விசாரணை அவசியம் என்று குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். எதுல்கோட்டை பகுதியில் உள்ள ...

மேலும்..

இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்துக்கும் இடையிலான உறவை மேம்படுத்த திட்டம்! புதிய உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக் தெரிவிப்பு

இரு நாடுகளின் நாடாளுமன்றங்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விருத்தி செய்வதற்கு தான் எதிர்பார்ப்பதாக ஐக்கிய   இராச்சியத்தின்   உயர்ஸ்தானிகர் அண்ட்ரூ பெட்ரிக்   சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியத்தின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகராகப் புதிதாக நியமிக்கப்பட்ட அண்ட்ரூ பெட்ரிக் மற்றும் ...

மேலும்..

எரிபொருள்களளின் விலையை நாளாந்தம் அடுத்த வருடம் முதல் மாற்றத் திட்டமாம்! அமைச்சர் காஞ்சன கூறுகிறார்

எரிபொருள் விலையை நாளாந்தம் மாற்றும் முறைமையை அடுத்த வருடம் முதல் அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். பெற்றோலிய கூட்டுத்தாபன விநியோகஸ்தர்கள் சங்கத்துடன் இடம்பெற்ற சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அமைச்சில் நடைபெற்ற இச்சந்திப்பில், ...

மேலும்..

சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம்!

  இணுவில், கோண்டாவிலைச் சேர்ந்த லயன் துரை பிரணவச்செல்வன் இன்று (வியாழக்கிழமை) யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இராமநாதன் கண்ணன் முன்னிலையில் சமாதான நீதிவானாக சத்தியப் பிரமானம் செய்துகொண்டார். இவர் பிரபல தொழிலதிபர் ஆவார். யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகம், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கம் ...

மேலும்..