சிறப்புச் செய்திகள்

13 ஆவது திருத்தம் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என்பது நிதர்சனமாகிறது! ஈ.பிடி.பியின் ஊடக பேச்சாளர் ஸ்ரீரங்கன் எடுத்துரைப்பு

அழிந்துபோயிருந்த 13 ஆவது திருத்தச்சட்டம் பேசாப்பொருளாகியிருந்த நிலையிலும் தொடர்ச்சியாக நாடாளுமன்றத்திலும் அறிக்கைகள் மூலமும் தமிழர்களின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டம்தான் தீர்வை நோக்கிய ஆரம்பப்படி என நாம் வலியுறுத்திவந்தது நிதர்சனமாகி வருவதாக ஈழ மக்கள் ஜநாயகக் கட்சியின் ஊடக ...

மேலும்..

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்துக்குப் புதியநிர்வாகம் தெரிவு!

  தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் பொதுச்சபைக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வைத்தியசாலை புற்றுநோய் சிகிச்சைப்பிரிவு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் புதிய நிர்வாகசபைத் தெரிவும் நடைபெற்றது. தலைவராக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஏ.தேவநேசனும் செயலாளராக ஊடகவியலாளர் லயன் சி.ஹரிகரனும் பொருளாளராக ...

மேலும்..

இஸ்ரேல் யுத்தத்தை நிறுத்த உலக நாடுகள் முன்வருக! ரவூப் ஹக்கீம் சபையில் வலியுறுத்தல்

உலகில் எந்த நாட்டிலும் இடம்பெறாத அளவுக்கு இஸ்ரேல் யுத்தக் குற்றத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதனை தடுத்து நிறுத்துவதற்கு சர்வதேச நாடுகளுக்கு முடியாமல் போயிருக்கிறது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கான வரவு ...

மேலும்..

ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் சூத்திரதாரிகளையும் பாதுகாப்பவர்களையும் மக்கள் நன்கறிவார்கள்! காவிந்த ஜயவர்தன கூறுகிறார்

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, தமது உறவுகள் ஏன் கொல்லப்பட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட எம் மக்கள் இன்றும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால், தீர்வு கிடைக்கவில்லை. நான்கரை ஆண்டுகளுக்குப் பின்னர் குண்டுத்தாக்குதல் ஏன் நடத்தப்பட்டது, யாருக்காக நடத்தப்பட்டது என்பதையும், தற்போது அவர்களைப் ...

மேலும்..

பஷில், கோட்டாபயவின் குடியுரிமையை நீக்க இரு கால்களையும் உயர்த்தி ஆதரவளிப்பேன் டிலான் பெரேரா பகிரங்கம்

பொருளாதாரப் படுகொலையாளிகளை உயர்நீதிமன்றம் அடையாளப்படுத்தியுள்ளது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடியுரிமையை இரத்து செய்யும் கீழ்த்தரமான யோசனைக்கு ஒருபோதும் ஆதரவு வழங்கமாட்டேன். ஏனெனில் அவர் நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார்.பஷில்,கோட்டாபய உட்பட ஏனையோரது குடியுரிமையை  நீக்கும் யோசனைக்கு இரு கைகள் அல்ல இரு கால்களையும் உயர்த்தி ஆதரவு ...

மேலும்..

ஜனாதிபதி ரணில் – கிரேக்க பிரதமருக்கு இடையில் இருதரப்பு கலந்துரையாடல்

டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாநாடான COP 28இல் பங்கேற்கச் சென்றிருக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் கிரேக்க பிரதமர் கிர்யாகோஸ் மிட்ஸுடாகிஸ் (Kyriakos Mitsotakis) ஆகியோருக்கு இடையிலான இருதரப்பு சந்திப்பு நேற்று (01) நடைபெற்றது. இரு நாடுகளுக்கும் ...

மேலும்..

சமலின் இரட்டை வேட நடத்தைக்கு சஜித் சபையில் கடும் எதிர்ப்பு

சிறப்புரிமை மீறல் சம்பவம் நடந்தால் உடனடியாக அந்த விவகாரத்தை ஒழுக்கவியல் மற்றும் சிறப்புரிமைக் குழுவுக்கு அனுப்புவது சபாநாயகரின் பொறுப்பாகும். ஆனால், சபாநாயகர் அதைச் செய்யாமல், அஜித் ராஜபக்ஷ தலைமையில் ஒரு குழு ஸ்தாபிக்கப்பட்டு, அந்த குழு ஒரு தீர்மானத்துக்கு வந்துள்ளது என்று ...

மேலும்..

கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் சிறுவன் மரணம்! சந்தேகம் வெளியிடும் பெற்றோர்

மட்டக்களப்பு கொக்குவில் பகுதியை சேர்ந்த ஆனந்ததீபன் தர்சான்ந் எனும் 15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கல்முனை சீர்திருத்த பாடசாலையில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார் என சிறுவனின் தந்தை தெரிவித்துள்ளார். கடந்த நவம்பர் 17ஆம் திகதி மணியொன்றை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கொக்குவில் ...

மேலும்..

அடுத்த மாதம் முதல் தடையில்லாது திரிபோஷா மா விநியோகிக்கப்படுமாம்! சுகாதாரத்துறை அமைச்சர் உத்தரவாதம்

சுகாதாரத் துறையில் காணப்படும் அடிப்படை பிரச்சினைகளை 2023 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார அமைச்சின் குழு நிலை விவாதத்தில் சுட்டிக்காட்டினேன். அதே பிரச்சினைகளை வியாழக்கிழமையும் சுட்டிக்காட்டுகிறேன். திரிபோஷா விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதையிட்டு கவலையடைய வேண்டும். திரிபோஷா பிரச்சினைக்காவது உடனடியாக தீர்வு காணுங்கள் ...

மேலும்..

உடுவில் மகளிர் கல்லூரி தேசியத்தில் சாதித்தது!

200 ஆவது ஆண்டில் தடம்பதிக்கும் உடுவில் மகளிர் கல்லூரி தனது சாதனைப் பயணத்தில் நீண்டகாலத்தின் பின் அகில இலங்கை தேசிய மட்டப்போட்டியில் தனி நடனத்தில் அபிசனா கோபிநாத் முதலிடம் பல்லிய குழுப்போட்டியில் முதலாமிடம் தனிவயலின் போட்டியில் கேதுசா யுவராஜ், அபிசனா கோபிநாத் ...

மேலும்..

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன் ஆரம்பமான இந்த நடை பயணம் சுமார் 450 கிலோமீற்றர்  தொலைவிலுள்ள தெய்வேந்திர முனையில் நிறைவடையவுள்ளமை ...

மேலும்..

கொக்குவில் நாமகள் வித்தி மாணவர்களுக்கு லயன்ஸ் கழகத்தால் பாடசாலை உபகரணம்!

கொக்குவில் நாமகள் வித்தியாலய மாணவர்கள் சகலருக்கும் லயன்ஸ் கழகத்தினரால் பாடசாலை உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன. கல்லூரி முதல்வரும் லயன்ஸ் கழக ஆளுநர் சபையின் ஆலோசகருமான லயன் ஜெ.ரஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாடசாலை உபகரணங்களை, மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம் பீற்றர், ...

மேலும்..

தோட்டப் பகுதிகளில் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்கான இரண்டு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கையின் தோட்டப் பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கான திட்டத்தின் 4 ஆம் கட்டத்தின் கீழ் இரண்டு ஒப்பந்தங்களில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் கைச்சாத்திட்டுள்ளது. இந்த ஒப்பங்கள் தேசிய வீடமைப்பு அதிகார சபை (NHDA) பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழு (SEC) ஆகியவற்றுடன் ...

மேலும்..

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வடமாகாண 7 ஆவது பட்டமளிப்பு விழா!

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகமும், தமிழ் இணையக் கல்விக்கழகமும் இணைந்து நடத்திய வடமாகாணத்தின் 7 ஆவது பட்டமளிப்பு விழா யாழ். சாவகச்சேரி 'பூமாரி மண்டபத்தில்' இடம் பெற்றது. இந்த நிகழ்வில், யாழ் பல்கலைக்கழக சைவ சித்தாந்தத்துறை முன்னாள் தலைவரும், இந்து நாகரிகத்துறை பேராசிரியருமான கலாநிதி ...

மேலும்..

யாழ்.சாவகச்சேரியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி!

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை  (28)காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அலுவலகத்தில் தண்ணீர் வராததால் தண்ணீர் தொட்டியை பார்ப்பதற்காக மேலே ஏறிய சந்தர்ப்பத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது. இதன்போது, நுணாவில் பகுதியைச் சேர்ந்த ...

மேலும்..