சிறப்புச் செய்திகள்

இலஞ்ச ஊழல் புதிய விசாரணை ஆணைக்குழு 15ஆம் திகதிக்கு பின்னர் நியமிக்கப்படும் – நீதி அமைச்சர்

தற்போதுள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு ஏதாவது பிழையான தீர்மானங்களை வழங்கி இருந்தால் அது தொடர்பாக தேடிப்பார்க்கும் பூரண அதிகாரம் புதிய  ஆணைக்குழுவுக்கு இருக்கிறது. 15ஆம் திகதியில் இருந்து புதிய ஊழல் எதிர்ப்பு சட்டம் செயல்வலுப்பெற்ற பின்னர், அரசியலமைப்பு சபையின் அனுமதிக்கமைய இலஞ்ச ...

மேலும்..

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும் என்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

இலங்கை குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டுமென்பதை சனல் 4 உறுதிப்படுத்துகிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது : இலங்கையில்குறைந்தது 350 பேரைக் கொன்ற 2019 ஈஸ்டர்குண்டுத் தாக்குதலுக்குப் பின்னால் ...

மேலும்..

கிளிநொச்சி தருமபுரம் பாடசாலை வளாகத்தில் தீ : பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசம்

கிளிநொச்சி தர்மபுரம் மத்திய கல்லூரியின் பாடசாலை வளாகத்தில் பின்புறத்தில் ஞாயிற்றுக்கிழமை (10) விசமிகளால் தீவைக்கப்பட்டதன் காரணமாக பெறுமதி மிக்க பல மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளன. குறித்த தீ பரவலை பாடசாலை பழைய மாணவர்கள் அதிபர் ஆசிரியர் பொலிஸார் மற்றும் கரைச்சிபிரதேச சபையின் தீயணைப்பு ...

மேலும்..

கஹவத்தை சம்பவத்திற்கு அமைச்சர் ஜீவன் கடும் கண்டனம் : உடனடியாக வீட்டை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை !

கஹவத்தை சம்பவத்திற்கு கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான் உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளார். அத்துடன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளதுடன் குறித்த குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் உண்மையை வெளிப்படுத்த சி.ஐ.டி. மற்றும் ரி.ஐ,டி. யின் முன்னாள் பிரதானிகளுக்கு இடமளிக்க வேண்டும் – ஹக்கீம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தேர்தல் வெற்றி ஒன்றை இலக்குவைத்து, நீண்டகாலமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வந்தது என்பது வெளிப்பட்டுள்ள சம்பவங்கள் மூலம் ஊகித்துக்கொள்ள முடியுமாகிறது. அத்துடன் குற்றப்புலனாய்வு துறை மற்றும் பயங்கரவாத விசாரணை பிரிவு முன்னாள் பிரதானிகள் வெளியில் வந்து உண்மையை தெரிவித்தால் ...

மேலும்..

பாடசாலை மூலதனசந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடுகள் ஆகும்! ராஜீவ பண்டாரநாயக்க பெருமிதம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவின் அடிப்படையில் நாடளாவிய ரீதியில் 100 பாடசாலைகளில் நிறுவப்பட்டுள்ள மூலதன சந்தை சங்கங்கள் எதிர்காலத்துக்கான முதலீடாகும் என கொழும்பு பங்கு பரிவர்த்தனையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ பண்டாரநாயக்க தெரிவித்தார். நிதி  தொடர்பான கல்வியறிவை மேம்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான ...

மேலும்..

இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் எவையும் வெற்றிபெறவில்லை! உண்மையை எடுத்துக்கூறினார் மைத்திரி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் வெற்றியடையவில்லை எனவும் சனல் 4 வெளிக்கொணர்வு தொடர்பில் சுயாதீனமான சர்வதேச விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட முன்னாள் ஜனாதிபதி ...

மேலும்..

குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நல்லாட்சி அரசு நாட்டின் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது!  சரத் வீரசேகர சாடல்

குறுகிய அரசியல் நோக்கத்துக்காகவே நல்லாட்சி அரசாங்கம் தேசிய பாதுகாப்பை காட்டிக் கொடுத்தது. பயங்கரவாதி சஹ்ரானை கைது செய்து முறையாக விசாரணை செய்திருந்தால் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலை தடுத்திருக்கலாம். குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு நல்லாட்சி அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற ...

மேலும்..

குற்றவாளிகளே தாம் செய்த குற்றத்தை விசாரிப்பதன்மூலம் தீர்வுகாண முடியாது! கஜேந்திரகுமார் சுட்டிக்காட்டு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் பின்னணியில் ராஜபக்ஷக்களே உள்ளனர் என்பது தற்போது அம்பலமாகியுள்ளது. உள்ளக விசாரணைகள் மூலம் தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மைகளை வெளிக்கொணர முடியாது. குற்றம் சாட்டப்பட்ட ராஜபக்ஷ தரப்பினரே நாடாளுமன்றத்தில் தெரிவு குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொள்வது என்பது குற்றவாளி ...

மேலும்..

அமைச்சுப் பதவி தருவதாக பல தடவை ஜனாதிபதி எனக்கு அழைப்பு விடுத்தார்! மனம்திறந்தார் தயாசிறி ஜயசேகர

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனக்கு அமைச்சுப் பதவியை தருவதற்காக பல தடவைகள் அழைப்பு விடுத்தார் என நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஆனால் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியை ஏற்கத் தான் தயாராக இல்லை என பண்டுவஸ்நுவர பிரதேசத்தில் ...

மேலும்..

நீர்வழங்கல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

  ஐக்கிய நாடுகளின் விசேட செயற்திட்டத்துக்கான ஸ்தாபனத்தின் தெற்காசியாவின் பணிப்பாளர் சார்லஸ் காலனன் மற்றும் விசேட செயற்திட்ட முகாமையாளர், செயற்திட்ட மேலாளர் ஆகியோருக்கும் நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. குறித்த கலந்துரையாடல் தோட்ட ...

மேலும்..

சாய்ந்தமருது லீடர் அஸ்ரப் வித்தியாலயம் சிறுவர் தடகள போட்டியில் அபார சாதனை

  நூருல் ஹூதா உமர் கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது கோட்ட மட்டத்திலான சிறுவர் விளையாட்டு போட்டியில் சாய்ந்தமருது கமுஃகமுஃ லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலயம் சார்பாக கலந்து கொண்ட தரம் 3 , தரம் 4 , தரம் 5 ஆண், பெண், ...

மேலும்..

விசேட பயிற்சி பெற்ற புதிய சுகாதார ஊழியர்களுக்கு சான்றிதழ் வழங்கல்!

  நூருல் ஹூதா உமர் அண்மையில் கிழக்கு மாகாண சபையல் பலநோக்கு அபிவிருத்தி செயலணி ஊழியர்கள் 886 பேருக்கு வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்குட்பட்ட அலுவலகங்களுக்கு நியமிக்கப்பட்ட சுகாதார ஊழியர்கள் 161 பேருக்கான நான்கு நாள் விசேட பயிற்சியை ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதல் ஜனாஸாக்கள் தகனம் குறிப்பாக சர்வதேச விசாரணை வேண்டும்! ஜனாதிபதி செயலணி முன்னாள் உறுப்பினர் கோரிக்கை

  நூருல் ஹூதா உமர் ஈஸ்டர் தாக்குதல் மற்றும் கொரோனா ஜனாஸாக்கள் தகனம் தொடர்பாக சர்வதேச விசாரணை அவசர தேவையாக உள்ளது. அந்தத் தேவையை நிறைவேற்றும் அதே வேளையில், 'தேசிய பாதுகாப்பு தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு' மற்றும் 'ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழு' ...

மேலும்..

கல்முனையில் ‘சிசுபல சமாஜ சத்காரய’ வேலைத்திட்டம்: மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்!

  நூருல் ஹூதா உமர் கல்முனை சமுர்த்தி மகா சங்கத்தின் ஏற்பாட்டில் கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவின் கீழ்வரும் கிராம உத்தியோகத்தர் பிரிவிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 345 மாணவர்களுக்கான இலவச பாடசாலை அப்பியாசக் கொப்பிகள் வழங்கும் ஆரம்ப நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலக கேட்போர் ...

மேலும்..