சிறப்புச் செய்திகள்

சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் அபிவிருத்தியில் லயன்ஸ் கழகம் பங்களிப்பு

  நூருல் ஹூதா உமர் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது இயங்கி வரும் கண் சிகிச்சை பிரிவை சர்வதேச லயன்ஸ் கழகத்தின் உதவியுடன் மேலும் விஸ்தரிப்பது சம்பந்தமான கலந்துரையாடல் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குத் தேவையான அன்பளிப்புகளை வழங்குதல் மற்றும் மர நடுகை ...

மேலும்..

புத்தளம் கத்தாரின் பேட்மிண்டன் போட்டி: மாவனல்லை சாஹிரியன்ஸ் அணி வெற்றி!

  நூருல் ஹூதா உமர் கத்தாரில் உள்ள இலங்கையர்களுக்காக புத்தளம் அசோசியேஷன் கத்தார் ஏற்பாடு செய்த ஆண்கள் இரட்டையர் பேட்மிண்டன் போட்டி சீசன் 1 போட்டி ஆல்பா கேம்பிரிட்ஜ் பாடசாலை விளையாட்டு அரங்கில் புத்தளம் அசோசியேஷன் கத்தார் தலைவர் புர்ஹான் தலைமையில் நடைபெற்றது. இப்போட்டியில் 18 ...

மேலும்..

கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியுமாம்! பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் கருத்து

கல்வியியலாளர்களும் அரசியலுக்கு பிரவேசித்தால் மாத்திரமே அரசியலில் மாற்றத்தைக் கொண்டு வர முடியம். இளைஞர்கள் உயர் கல்வி கற்றல் - காலத்தின் தேவையாகும். கல்வி எழுச்சி ஊடாகவே சிறந்த சமூகத்தை கட்டியெழுப்ப முடியும். பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளரும் அமேசன் உயர் கல்வி நிறுவனத்தின் பணிப்பாளருமான இல்ஹாம் ...

மேலும்..

இலங்கை நீதித்துறையில் நம்பிக்கை இல்லை – சர்வதேச விசாரணை வேண்டும்

இலங்கையின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்துள்ள நிலையில் சத்துருக்கொண்டான் படுகொலைக்கு சர்வதேச நீதிப்பொறிமுறையொன்றை பெற்றுத்தருமாறு சத்துருக்கொண்டான் படுகொலை நினைவேந்தல் குழு கோரிக்கையை முன்வைத்துள்ளது. சத்துருக்கொண்டான் படுகொலையின் 33வது ஆண்டு நினைவு தினம் நேற்று பனிச்சையடி சந்தியில் உள்ள நினைவுத்தூபியில் முன்னெடுக்கப்பட்டது. இதுவரையில், மூன்று ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பாக ...

மேலும்..

சர்வதேச விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாரில்லை

இலங்கையில் குற்றமிழைக்கும் படையினரும், அரசியல்வாதிகளும் என்றும் தண்டிக்கப்படுவதில்லை. இந்த செயற்பாடு மாறும் வரையில், ஜனநாயக ரீதியில் இலங்கை செயற்பட போவதில்லை என பிரித்தானியாவை தளமாகக் கொண்ட மனித உரிமை ஆலோசகர் அலன் கீனன் தெரிவித்துள்ளார். இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அவர் வெளியிட்டுள்ள ...

மேலும்..

இரத்தினபுரி வெள்ளந்துரை தோட்ட குடியிருப்பு உடைக்கப்பட்டமையால் பரபரப்பு

இரத்தினபுரி கஹவத்தை பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளந்துரை பகுதியிலுள்ள தொழிலாளியொருவரின் குடியிருப்பு தோட்ட நிர்வாகத்தினால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் அனுமதி பெற்ற பின்னரே குறித்த குடியிருப்பு உடைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் உடையிலுள்ள விசமிகள் தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த நிலையில் தொடர்ந்தும் பெருந்தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புகள் ...

மேலும்..

தோட்ட நிர்வாகத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

தமக்கான தொழில் உரிமை மற்றும் பாதுகாப்பை வழங்குமாறு வலியுறுத்தி பொகவந்தலாவ, டியன்சின் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொகவந்தலாவ பெருந்தோட்ட நிறுவனத்தின் நிர்வாகத்துக்குட்பட்ட டியன்சின் தோட்டத்தில், தேயிலை மலையில் வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளியொருவர், திடீரென வழுக்கி விழுந்துள்ளார். இதனால் அவருக்கு கை, கால்களில் காயம் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கொண்டு அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தை கொண்டு நாட்டிலுள்ள தலைவர்கள் அரசியல் இலாபம் பெற முயற்சிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என தமிழீழ விடுதலை இயக்கம் அமைப்பின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா தமிழ் ஈழ விடுதலை ...

மேலும்..

கிண்ணியாவில் குடிநீர் தட்டுப்பாடு! : பவுஸர் மூலம் விநியோகிக்கப்பட்ட குடிநீரை பெற முண்டியடிக்கும் மக்கள்!

திருகோணமலை, கிண்ணியா பகுதியில் கடந்த மூன்று தினங்களாக குடிநீரின்றி மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், இன்று சனிக்கிழமை (09) அப்பகுதியில் உள்ள மக்களுக்கு 6000 லீற்றர் கொள்ளளவு கொண்ட பவுஸர் மூலமாக குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை ...

மேலும்..

இந்திய பொலிவுட் திரைப்பட நிறுவனங்களின் தயாரிப்பாளர்கள் இலங்கை வருகை

கடந்த பல ஆண்டுகளாக இந்திய, ஐரோப்பிய மற்றும் ஹாலிவுட் சினிமாக்களுக்காக இலங்கையை படப்பிடிப்பு தளமாக விளம்பரப்படுத்தி வருகிறோம்.தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம் மற்றும் இதர துறைசார் பங்குதாரர்கள் உட்பட சர்வதேச திரைப்பட தயாரிப்பாளர்கள் இலங்கையை தங்களின் சிறந்த திரைப்பட இடமாக தெரிவுசெய்ய ஊக்குவிப்பதற்காக ...

மேலும்..

வடக்கு கிழக்கில் காணியற்றோருக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க ஏற்பாடு! ஸ்ரீ ரங்கேஸ்வரன் தெரிவிப்பு

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதிகளில் இரும்பு திருட்டுக்களில் ஈடுபட்டு வரும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் கோரவுள்ளதாக ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவிளாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ...

மேலும்..

‘நடந்தாய் வாழி வழுக்கை ஆறு’ குளங்களை பார்வையிடுவதற்கு நடைபயணம் யாழில் ஆரம்பம்!

'நடந்தாய் வாழி வழுக்கை ஆறு' எனும் தொனிப்பொருளில் வழுக்கியாற்றின் வழிதோறும் உள்ள குளங்களை காணும் ஒரு நடைபயணம் சனிக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. சனிக்கிழமை காலை 8 மணிக்கு யாழ். தெல்லிப்பழையில் இருந்து ஆரம்பமான இந்த பயணம் அராலி நோக்கி சென்றது. இந்த பயணத்தில் யாழ்ப்பாண ...

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கை கடத்த மறைத்து வைக்கப்பட்ட 6 கிலோ ஐஸ் போதையுடன் பெண் உள்ளிட்ட நால்வர் கைது!

இலங்கைக்குக் கடத்துவதற்காக இந்தியாவின் வேதாளை மீனவ கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் மறைத்து  வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருள்களுடன் பெண்  ஒருவர் உட்பட நான்கு பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களிடமிருந்த இந்திய மதிப்பில் 6 கோடி ரூபா பெறுமதியான 6 கிலோ ஐஸ் போதைப்பொருள்களும் ...

மேலும்..

கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை: கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் கைது!

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வத்திராயன் பகுதியில் சுமார் 600 லீற்றர் கோடா மற்றும் கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகின்ற பொருள்கள் என்பன மருதங்கேணி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்படி சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது - மருதங்கேணி ...

மேலும்..

தெற்காசியாவின் கல்வி மையமாக இலங்கை மாற்ற முயற்சிப்போம்! சுரேன் ராகவன் திடசங்கற்பம்

அந்த நோக்கத்திற்காக, புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் அறிவுசார் சுதந்திரத்தை உருவாக்கவும், அனைத்துப் பல்கலைக்கழகங்களையும் சமூகத்துடன் உறவை ஏற்படுத்தவும், பல்கலைக்கழகங்களை சர்வதேசமயமாக்கவும் முன்மொழிந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் உயர் கல்வி இராஜாங்க ...

மேலும்..