சிறப்புச் செய்திகள்

செல்வம் எம்.பிக்கு கிடைத்தது பிணை!

சுதந்திர தினத்தை அரசுக்கு எதிரான கரிநாளாக பிரகடனப்படுத்தி பேரணியில் பங்களித்தனர் என பொலிஸாரால் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதன் எம்.பி புதன்கிழமை மதியம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முன்னிலையான நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார். கடந்த பெப்ரவரி 4 ஆம் ...

மேலும்..

சபிரி அடுக்குமாடி குடியிருப்புத்திட்ட பணிகளை பூர்த்தி செய்யுமாறு பிரசன்ன ரணதுங்க பணிப்பு

தங்காலை, மொரட்டுவ மற்றும் ரன்பொகுனுகம பிரதேசங்களை மையமாகக் கொண்ட சபிரி அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்தின் பணிகளை இந்த வருடத்துக்குள் பூர்த்தி செய்யுமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபைக்கு பணிப்புரை வழங்கினார். இந்த மூன்று ...

மேலும்..

தேசிய புலனாய்வு இயக்குநர் பதவியிலிருந்து சுரேஸ் சாலேயை உடன் பதவிநீக்கவேண்டும்! விஜித ஹேரத் வலியுறுத்து

தேசிய புலனாய்வு பிரிவின் இயக்குநர் சுரேஸ் சாலேயை உடனடியாக பதவி நீக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள தேசிய மக்கள் சக்தி, பிள்ளையானிற்கு எதிராக பக்கச்சார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் வெளியாகியுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே தேசிய ...

மேலும்..

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவத்துக்கு சத்தியமூர்த்தியே பொறுப்புக்கூற வேண்டும்! வைகிறார் முன்னாள் திடீர் மரண விசாரணை அதிகாரி

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 8 வயது சிறுமியினது கையின் ஒரு பகுதி அகற்றப்பட்டமை தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவரையும் பொதுவெளியில் பகிரங்கப்படுத்த வேண்டும் என்பதுடன் இதற்கு வைத்தியசாலை பணிப்பாளர், வைத்தியர் சத்திய மூர்த்தியே பொறுப்பேற்க வேண்டும் எனவும் யாழ். போதனா வைத்தியசாலையின் முன்னாள் ...

மேலும்..

லசந்தவை விரைவில் கொலை செய்க  என கோட்டா எம்மிடம் தெரிவித்தார்!  ஆசாத் மௌலானா கூறுகிறார்

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவை நாய் என தெரிவித்து அவரை கொலை செய்யவேண்டும் என கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார் என  தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் முன்னாள் பேச்சாளர் ஆசாத் மௌலானா சனல் 4 இற்குத் தெரிவித்துள்ளார். மிக் விமான கொள்வனவில் ...

மேலும்..

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டுள்ள சம்பவம்: முறையான விசாரணைகள் நடத்தப்படவேண்டும்!  சாள்ஸ் நிர்மலநாதன் வலியுறுத்து

யாழ். வைத்தியசாலையில் 8 வயது சிறுமியொருவரின் இடது கை சத்திர சிகிச்சை மூலம் அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் சுகாதார அமைச்சரிடம் வலியுறுத்தினார். சிறுமியின் கை அகற்றப்பட்ட ...

மேலும்..

யுத்த வைராக்கியத்துடன் சனல் – 4 செயற்படுகிறது! நாமல் ராஜபக்ஷ கூறுகிறார்

செனல் 4 யுத்த வைராக்கியத்துடன் செயற்படுகிறது. கொள்கைக்கு அப்பாற்பட்டு, சந்தர்ப்பவாத அரசியலில் ஈடுபட வேண்டிய தேவை எமக்கில்லை. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் விசாரணைகள் அரசியலுக்காக பயன்படுத்தப்படும்  வரை பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயம் கிடைப்பது சாத்தியமற்றது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ...

மேலும்..

சனல் 4 காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் – அகிம்சா விக்கிரமதுங்க

சனல் 4 வெளியிட்டுள்ள  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் குறித்த காணொளியை அனைத்து இலங்கையர்களும் பார்க்கவேண்டும் என படுகொலை செய்யப்பட்ட பத்திரிகையாளர் லசந்த விக்கிரமதுங்கவின்  மகள் அகிம்சா  தெரிவித்துள்ளார் டுவிட்டர் பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த உண்மைகளை அம்பலப்படுத்தும் சனல்4  இன் ...

மேலும்..

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்ட ஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி

நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (05) கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது, கருவாடு உற்பத்தியில் ஈடுபடும் தரப்பினர், தாங்கள் நீர்கொழும்பு களப்பு மற்றும் கடற்கரையை அண்டிய பகுதிகளில் கருவாடு உற்பத்தியில் ஈடுபட்டு ...

மேலும்..

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவம் : பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள் – எஸ்.எம்.மரிக்கார்

ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டவர்கள் நிச்சயம் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவார்கள். செனல் 4 வெளியிட்டுள்ள காணொளியை தொடர்ந்து புலனாய்வு பிரிவின் பிரதானி சுரேஷ் சலே மீது பழியை சுமத்தி தப்பித்துக்கொள்ள ஒருதரப்பினர் முயற்சிக்கிறார்கள். ராஜபக்ஷர்களின் ஆட்சியில் கொலை, ...

மேலும்..

225 உறுப்பினர்களும் அழிய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானதே – காவிந்த ஜயவர்தன கடும் விசனம்

நாட்டு மக்கள் குறித்து அவதானம் செலுத்தாமல் அரசாங்கத்தை பாதுகாக்க ஆளும் தரப்பினர்கள் செயற்படுவார்களாயின் 225 பாராளுமன்ற உறுப்பினர்களும் அழிவடைய வேண்டும் என மக்கள் குறிப்பிடுவது நியாயமானது. பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை தோற்கடிக்கப்படலாம். தோற்கடிக்கப்படுவது நம்பிக்கையில்லா பிரேரணை அல்ல, மக்களின் எதிர்பார்ப்பு என்பதை ...

மேலும்..

திரிபோலி என்ற கொலைக்குழுவை உருவாக்குமாறு கோட்டாபய எங்களை கேட்டார் -ஆசாத் மௌலானா

னும் அவ்வேளை எனது தலைவராக காணப்பட்ட பிள்ளையானும்  கோட்டாபய ராஜபக்சவை சந்தித்த வேளை  அவர் திரிபோலி என்ற கொலைகுழுவை உருவாக்குமாறு கேட்டுக்கொண்டார் என  ஆசாத்மௌலானா சனல் 4 வீடியோவில் தெரிவித்துள்ளார். திறமைசாலிகளை தெரிவு செய்து இணைந்து செயற்படுங்கள் என கோட்டாபய கேட்டுக்கொண்டார், ஆகவே ...

மேலும்..

பிள்ளையான் எதிரணி உறுப்பினரல்ல – நளின் பண்டார

இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எதிர்க்கட்சி உறுப்பினர் என்று நினைத்துக்கொண்டு மஹிந்தானந்த அளுத்கமகே கருத்துரைக்கிறார். பிள்ளையானின் ஊடக செயலாளராகவே அன்ஷிப் அசாத் மௌலானா செயற்பட்டார் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (06) இடம்பெற்ற ...

மேலும்..

மன்னாரில் ஹோட்டல் குளியலறை உபகரணங்களை திருடிய இருவர் கைது : 5 லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் மீட்பு!

மன்னார் - தலைமன்னார் பிரதான வீதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் ஹோட்டல் ஒன்றின் குளியல் அறைகளில் இருந்து திருடப்பட்ட ஒரு தொகுதி குளியலறை உபகரணங்களுடன் 2 சந்தேக நபர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை (5) மன்னார் பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் ...

மேலும்..

ஒட்டுசுட்டானில் உழவு இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் இரு இளைஞர்கள் பலி : உழவு இயந்திர உரிமையாளர் உட்பட இருவர் கைது

முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒட்டுசுட்டான், மாங்குளம் வீதியில் 21ஆவது கிலோ மீட்டர் கல்லுக்கு அருகில், வீதியில் நின்ற உழவு இயந்திரத்தின் மீது மோட்டார் சைக்கிள் வேகமாக வந்து மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த ...

மேலும்..