சிறப்புச் செய்திகள்

தோல்வி பயத்தால் அரசாங்கம் தேர்தலை நடத்தாது : உதய கம்பன்பில!

தோல்வி பயம் காரணமாக அரசாங்கம் தேர்தலை நடத்தாது என நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்பன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ரணில் விக்ரமசிங்கவும் அவருடைய மாமாவான ஜே.ஆர்.ஜயவர்தனவும் தேர்தல் நடத்தாமல் ...

மேலும்..

யாழ்.சில்லாலையில் கொடூர விபத்து: இளைஞர் உயிரிழப்பு

யாழ் சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரிக்கு அண்மையில், நேற்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞர் பயணித்த மோட்டார் சைக்கிளானது வேக கட்டுப்பாட்டை இழந்து தொலைத்தொடர்பு கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளதாகவும், இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் ...

மேலும்..

யாழில் கஞ்சாவுடன் சிக்கிய இளைஞர் கைது!

யாழ்ப்பாணம், பண்ணைப் பகுதியில் நேற்று (03) இரவு சுமார் 765 கிராம் கஞ்சாவுடன் மண்டைத்தீவுப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்தே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இது குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸ் ...

மேலும்..

அவிசாவளையில் நடைபெற்ற இலவச மருத்துவ முகாம்!

அகில இலங்கை தனியார் மருந்தக உரிமையாளர் சங்க கொழும்பு மாவட்ட கிளையினால் அவிசாவளை,வகரத்தனசார மகா வித்யாலயத்தில் இலவச மருத்துவ முகமொன்று அண்மையில் முன்னெடுக்கப்பட்டது. சுமார்  10 க்கும் மேற்பட்ட வைத்தியர்கள், தாதிமார்கள் பங்கேற்ற  இந்நிகழ்வில் மூக்கு கண்ணாடி வழங்குதல், மருத்துவ பரிசோதனைகள் மற்றும் ...

மேலும்..

2023 A/L பரீட்சையை ஒத்திவைக்குமாறு எதிர்கட்சித் தலைவர் வலியுறுத்து

எதிர்வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள 2023ம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சையை பிற்போடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார். இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களின் உரிமைகளையும் நடைமுறைச் சூழலையும் புறக்கணிக்கும் வகையில் பரீட்சை திணைக்களம் செயற்படுவதாக ...

மேலும்..

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பளார் த. சத்தியமூர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் சம்பவம் தொடர்பாக உடனடி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்றும் இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாது என்றும் உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார அமைச்சுக்கு தொலைபேசி ...

மேலும்..

புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம்

முல்லைத்தீவில்  மண்டோஸ் புயலால் பாதிக்கப்பட்ட 40 மீனவர்களுக்கு தலா 45,000 பெறுமதியான மீன்பிடி உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (04) முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் கண்காணிப்பு அலுவலர் சூ.செ.ஜான்சன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ...

மேலும்..

யாழில் வெற்றிநடைபோடும் “புஷ்பக 27”

  ஈழத்தில்  தயாரிக்கப்பட்ட தமிழரின் தொன்மையைத்  தேடி செல்லும் முதல் விண்வெளித்திரைப்படமான “புஷ்பக 27” யாழ் ராஜா திரையரங்கில், நேற்று முன்தினம் திரையிடப்பட்டது. சத்தியா மென்டிசின் திரைக்கதையில், காரை சிவநேசனின் இயக்கத்தில்  உருவான இத்திரைப்படத்தினைக் காண ஏராளமான மக்கள்  திரையரங்கிற்குப் படையெடுத்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ...

மேலும்..

படகில் சென்று தமிழகத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தீர்மானம்!

இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை கண்டித்து இந்தியாவுக்கு படகு மூலம் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாக யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தினர் அறிவித்துள்ளனர். யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளனத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இது ...

மேலும்..

வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகளில் நோயாளர்களுக்கு உணவு வழங்கும் நடவடிக்கை நிறுத்தப்பட்டுள்ளது. உணவு வழங்குனர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவுகள் பல மாதங்களாக வழங்கப்படாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட சுகாதார அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். வைத்தியசாலைக்கு உணவு வழங்குவதற்கான டெண்டர்கள் அதிக விலைக்கு ...

மேலும்..

முல்லைத்தீவில் விழிப்புணர்வு பேரணி

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இன்று சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. Au lanka நிறுவனத்தினர் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்துடன் இணைந்து இவ் விழிப்புணர்வு பேரணியினை முன்னெடுத்திருந்தனர். இதில் பிரதேச செயலாளர் எஸ்.ஜெயகாந் , முல்லைத்தீவு மாவட்ட சட்ட வைத்திய ...

மேலும்..

பொறுப்பற்ற வகையில் செயற்படும் அமைச்சர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவோம் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

அமைச்சரவை அமைச்சர்கள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை நாங்கள் கொண்டு வருவோம். ஒருசில அமைச்சர்கள் பொறுப்புக்களை மறந்து எதிர்கால அரசியல் வலுப்படுத்திக் கொள்ள அதிக கவனம் செலுத்தியுள்ளார்கள் என பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுவர்தன ...

மேலும்..

சேற்றில் புதைந்து உயிருக்குப் போராடும் யானை : மீட்கும் பணிகள் தீவிரம்! – வவுனியாவில் சம்பவம்

வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் 5 வயது மதிக்கத்தக்க யானையொன்று சேற்றினுள் புதையுண்ட நிலையில், அதனை மீட்கும் நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக வனஜீவராசிகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, வவுனியா மாமடு குளத்தின் நீரேந்து பகுதியில் மாடு மேய்க்க சென்ற கிராமவாசி ஒருவர், ...

மேலும்..

ஹம்பாந்தோட்டையில் Sinopec நிலையம்

ஹம்பாந்தோட்டையில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய சுத்திகரிப்பு நிலையத்தில் ‘Sinopec’ ‘ நிறுவனம் முதலீடு செய்யவுள்ளதாகவும், அதற்கான திட்ட முன்மொழிவு அடுத்த வாரம் சமர்ப்பிக்கப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இலங்கை எரிபொருள் விநியோக நிறுவனம் மற்றும் சினோபெக் சுத்திகரிப்பு ...

மேலும்..

நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு

நாட்டைப் பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பு எனவும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்தி நாடுகளைக் கட்டியெழுப்ப முடியாது எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் வருடாந்த மாநாடு தொடர்பில் கட்சி அமைப்பாளர்களுக்கு அறிவிக்கும் கூட்டத்தில் ...

மேலும்..