சிறப்புச் செய்திகள்

இனவாதத்தைத் தூண்டி நாட்டை யுத்தத்துக்குள் தள்ளும்செயற்பாடுகள் உடன் நிறுத்தவேண்டும்!  அத்துரலிய ரத்ன தேரர்  கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் மரபுரிமைகளுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளை உடன் நிறுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி விட்டு நாட்டில் மீண்டும் யுத்தத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளை அரசாங்கம் உடனடியாக தடுக்க வேண்டும். அது அனைவரது பொறுப்பாகும் என  நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் ...

மேலும்..

மலையகக் கதைகளின் காட்சி என்னும் கண்காட்சி ஆரம்பம்!

நுண்கலைத்துறை மற்றும் கலை வட்டத்தின் ஏற்பாட்டில் 'சொர்க்கத்தின் சுமை – மலையகக் கதைகளின் காட்சி' எனும் தலைப்பில் கண்காட்சி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் நுண்கலைத்துறை காட்சிக்கூடத்தில் புதன்கிழமை மாலை ஆரம்பித்த கண்காட்சியை ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை காலை 9 மணி ...

மேலும்..

இந்திய இளைஞர்களிடம் பாடம் கற்கவேண்டுமாம்!  விமல் வீரவன்ஸ கூறுகிறார்

எம்முடைய இளைஞர் சமுதாயமும் இந்திய இளைஞர் சமுதாயத்திடம் பாடம் கற்றுக்கொள்ள வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இந்த விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில் - இந்தியாவின் இந்த திட்டத்துக்காக பில்லியன் கணக்கான நிதி செலவாகும் ...

மேலும்..

யாழில் 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா

யாழ் மாவட்ட கூட்டுறவு சபையினால் இன்று 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழா சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார். அத்துடன் இந்நிகழ்வின் போது போட்டிகள் ...

மேலும்..

வவுனியாவில் 187 பேருக்கு உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு!

சிங்கப்பூர் மகாகருண பௌத்த சங்கத்தின் ஏற்பாட்டில் வவுனியாவில் 187 பேருக்கான உதவித் திட்டங்கள் நேற்று முன்தினம் (22)  வழங்கி வைக்கப்பட்டன. வவுனியா, ஈரப்பெரியகுளம் பகுதியில் உள்ள பௌத்த பொது நோக்கு மண்டபத்திலேயே  குறித்த நிகழ்வு இடம்பெற்றது. பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு ...

மேலும்..

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் மன்னாரில் பாரிய பேரணிக்கு அழைப்பு

சர்வதேச காணாமால் ஆக்கப்பட்டவர்கள் தினத்தினை முன்னிட்டு, எதிர்வரும் 30ஆம் திகதி மன்னாரில் பாரிய பேரணி ஒன்றினை முன்னெடுக்க காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அறிவித்துள்ளனர். யாழ். ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை தெரிவித்துள்ளனர். மன்னார் சதோச புதைக்குழியில் இருந்து, ...

மேலும்..

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மூவர் இந்தியாவில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் இலங்கையைச் சேர்ந்த மூவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். கசின் குமார், அமில நுவான் மற்றும் ரங்க பிரசாத் ஆகியோரும் இவர்களுக்கு பெங்களூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு எடுத்த பரமேஷ் என்ற நபரும் கைது ...

மேலும்..

வடமராட்சியில் கொடூர விபத்து: 14 வயது சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், வடமராட்சி, கொற்றாவத்தை பகுதியில் இன்று நண்பகல் டிப்பரொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 14 வயதான சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்தில் மேலும் ஒரு இளைஞர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று ...

மேலும்..

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு ஏற்படவுள்ள ஆபத்து : கல்வி அமைச்சர் சுசில்!

ஆசிரியர் தொழிலை விட்டுசென்றவர்களுக்கு பதிலாக பட்டதாரிகளையும் ஓய்வுபெற்ற ஆசிரியர்களையும் நியமிப்பதற்கான அதிகாரத்தை விரைவில் மாகாண சபைகளுக்கு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே ...

மேலும்..

சீன கப்பல் இலங்கை வருவதற்கு முன்னர் இலங்கை வருகின்றார் இந்திய பாதுகாப்பு அமைச்சர்

அடுத்த மாதம் இலங்கை வரவுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், திருகோணமலைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. திருகோணமலையில் பெட்ரோலியப் பொருட்களை மாற்றுவதற்காக இரு நாடுகளையும் இணைக்கும் குழாய் திட்டத்தை அமைக்கும் இறுதி நோக்கத்துடன் இந்தியா முதலீடுகளை மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் எதிர்வரும் செப்டம்பர் 2 ...

மேலும்..

இரண்டு நிலங்களையும் இணைப்பதற்கு முன்னர் சிறுபான்மை சமூக மனங்களை ஒன்றிணைக்குக! முஷாரப் எம்.பி. கோரிக்கை

பெரும்பான்மை சமூகத்தின் நடவடிக்கைகளுக்கு விமர்சனம் செய்கின்ற நாம் சிறுபான்மை சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளை எடுத்துள்ளோம் என நாடாளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபின் கேள்வியெழுப்பியுள்ளார். நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில் - வடக்கு, கிழக்கு ஒருங்கிணைவு ஒப்பந்தத்தில் முஸ்லீம் சமூகமும் ...

மேலும்..

பௌத்த துறவிகளின் அடாவடிகள் இனமுறுகலுக்கு வழிவகுக்குமாம்! பா.அரியநேத்திரன் எச்சரிக்கை

இலங்கையில் உள்ள பௌத்த துறவிகள் சிலரின் அடாவடித்தனம் இனமுறுகலுக்கு தூபம் இடுகின்றது, இதனை உடனடியாக அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை எனில் மீண்டும் 1983, ஜூலை கலவரம் போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற ...

மேலும்..

கொவிட் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வேன் – அமைச்சர் கெஹலிய சபையில் ஹக்கீமுக்கு பதில்

கொவிட் தொழிநுட்ப குழுவின் நடவடிக்கைகள் மற்றும் அதன் தீர்மானங்கள் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறேன். அதன் பிரகாரம் கொவிட் தொற்றில் மரணித்தவர்களின் சடலங்களை எரிப்பதற்கு எடுத்த தீர்மானம் தொடர்பாகவும் ஆராய்ந்து அது தொடர்பான அறிக்கையை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பேன் என சுகாதார ...

மேலும்..

6 இலட்சம் பயனாளர்களுக்கு வெள்ளி முதல் நலன்புரி கொடுப்பனவு – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க

ஆறு இலட்சத்து 44 ஆயிரத்து 783 பயனாளர்களுக்கு வெள்ளிக்கிழமை (25) முதல் கடந்த ஜூலை மாதத்துக்கான நலன்புரி கொடுப்பனவு பிரதேச செயலக பிரிவுகள் ஊடாக வழங்கப்படும். அஸ்வெசும நலன்புரித் திட்டத்தில் முதல் கட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு இம்மாதத்துக்குள் கொடுப்பனவுகளை வழங்க எதிர்பார்த்துள்ளோம் ...

மேலும்..

குருந்தூர் மலை விவகாரம் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும் : அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? – வேலுகுமார் கேள்வி

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பில் பயிற்சி பெற்றவர் நாட்டில் உள்ளார் என அரசாங்கத்தின் பொறுப்பு வாய்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குருந்தூர் மலை விவகாரம் இலங்கையில் மீண்டும் இனவாத கலவரத்தை தோற்றுவிக்கும் என இந்திய புலனாய்வு பிரிவினர் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சியதிகாரத்தை கைப்பற்ற மக்களை பலியாக்க வேண்டாம் ...

மேலும்..