சிறப்புச் செய்திகள்

50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் வடக்கு மாகாணத்தில் வெளியேற்றம்! சுகாதார பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தகவல்

  வடக்கு மாகாணத்தில் ஒருவருடத்தில் 50 வைத்தியர்களும் 20 தாதியர்களும் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என வட மாகாண சுகாதார பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். வவுனியா வைத்தியசாலையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் ...

மேலும்..

அரசின் நீண்டகால நிகழ்ச்சி நிரலிற்கு மறவன்புலோ சச்சி துணைபோகிறார்! அம்பிகா சற்குணநாதன் சாட்டை

சிவசேனையின் மறவன்புலோ சச்சிதானந்தன்  குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து அரசாங்கம் முன்னெடுக்கும் தந்திரோபாயத்தை நடைமுறைப்படுத்துவதற்கு உதவுகின்றார் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் சாடியுள்ளார். ருவிட்டர் பதிவில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு ...

மேலும்..

பாலித ரங்கே பண்டார யாழ்ப்பாணம் விஜயம்!

யாழ்ப்பாண மாவட்டத்துக்கு சனிக்கிழமை hலை விஜயம் செய்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நல்லூர் கந்தசுவாமி கோவில் மற்றும் ஆரியகுளம் நாக விகாரை ஆகிய மதஸ்தலங்களுக்கு சென்று  வழிபாடுகளில் ஈடுபட்டார். இதனையடுத்து, யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள தமது ...

மேலும்..

ரணில் விக்கிரமசிங்கவால் மாத்திரமே நாட்டை முன்னோக்கி நகர்த்தமுடியும்!  விஜயகலா மகேஸ்வரன் இறுமாப்பு

ரணில் விக்கிரமசிங்கவால்  மாத்திரமே நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லமுடியும் என யாழ். மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின்  அமைப்பாளரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய தேசியக் கட்சி அலுவலக திறப்பு விழாவில் கலந்துகொண்டு சிறப்பு ...

மேலும்..

ஜெரோம் பெர்னாண்டோவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கள்! பெற்றோர் மன்னிப்பு கோரினர்

சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் தனது மகனின் கருத்துக்களுக்காக மன்னிப்பு கோரியுள்ளனர். ஓமல்பே  சோபித தேரரை அவரது அலுவலகத்தில் சந்தித்து ஜெரோம் பெர்னாண்டோவின் பெற்றோர் தமது மகனின் கருத்துக்களுக்காக மன்னிப்புக் கோரியுள்ளனர். ஏனைய மதங்கள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை ஜெரோம் பெர்னாண்டோ தெரிவிப்பதைக் ...

மேலும்..

கிழக்கில் வாழும் சமூகங்களின் அடையாளங்களை பிரதிபலிப்பதாக மாகாணக் கொடியை அமைக்குக! கிழக்கு ஆளுநருக்கு ஹரீஸ் எம்.பி. வேண்டுகோள்

  நூருல் ஹூதா உமர் கிழக்கு மாகாணத்தில் வாழும் மக்களின் கலாசார விடயங்களை உள்ளடக்கியதாக கிழக்கு மாகாண சபையின் கொடி சீர்செய்யக் கோரி முன்னாள் இராஜாங்க அமைச்சரும், ஸ்ரீ.ல.மு.கா. பிரதித் தலைவருமான நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் ...

மேலும்..

13ஆவது திருத்தத்தை எதிர்க்க பொதுஜன பெரமுனவுக்கு தார்மீக உரிமை இல்லை – நிமல் லன்சா

அதிகாரப்பகிர்வு தொடர்பில் இரட்டை நிலைப்பாட்டைக் கொண்டுள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு, அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தி நாட்டிலுள்ள அனைத்து மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்கும் போது அதற்கு எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்கு தார்மீக ...

மேலும்..

யாழில் பெண் வேடத்தில் வீடுகள், வாகனங்கள் மீது தாக்குதல் ; 9 பேர் கைது

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பெண்களின் ஆடைகளை அணிந்தவாறு வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்த வன்முறைக் கும்பலைச் சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நபர்களை கொலை செய்ய எத்தணித்தனர் என்ற குற்றச்சாட்டின் கீழ் 9 பேரும் சனிக்கிழமை (19) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ...

மேலும்..

மலவாசலில் மறைத்து தங்க ஜெல் கரைசலை கொண்டு சென்ற முச்சக்கரவண்டி சாரதி விமான நிலையத்தில் கைது

இந்தியாவின் மும்பைக்கு செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்த முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை (18) கைதுசெய்யப்பட்டுள்ளார். சுமார் 2 கோடியே 50 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க ஜெல் கரைசல் அடங்கிய 03 கெப்ஸியூல்களை ...

மேலும்..

அமெ. – இலங்கை ஒத்துழைப்புடன் நிறைவடைந்த இந்தோ – பசுபிக் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மன்றம்!

அமெரிக்காவின் இந்தோ - பசிபிக் கட்டளையின் அனுசரணையுடன் இலங்கை கடற்படையால் ஓகஸ்ட் 14ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை நடத்தப்பட்ட 12 ஆவது வருடாந்த இந்தோ - பசிபிக் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் ஆசிய-பசுபிக் பிராந்தியம் முழுவதுமுள்ள சுற்றுச்சூழல் ...

மேலும்..

21 லட்சம் ரூபா சிகரெட்டுக்களுடன் விமான நிலையத்தில் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக சிகரெட்டுக்களை நாட்டுக்கு கடத்தி வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்த விமானத்திலேயே கைதுசெய்யப்பட்ட நபர் வருகை தந்துள்ளார். இவரிடமிருந்து மீட்கப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி சுமார் 21 லட்சத்து 40 ஆயிரம் ...

மேலும்..

இனத்தை ஒருங்கிணைக்கும் தளமே சனசமூக நிலையம்! முன்னாள் தவிசாளர் நிரோஷ் கூறுகிறார்

கிராமங்களின் உட்கட்டமைப்பு அபிவிருத்தியில் புலம்பெயர்ந்தவர்களும் தாயகத்தில் வாழ்பவர்களும் ஒன்றிணைந்து பயணிப்பது இனத்தின் நலன்களை மையப்படுத்திய உத்தியாகும் என வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவித்தார். அச்சுவேலி மத்திய சனசமூக நிலையத்;துக்கான அடிக்கல் நாட்டும் வைபவம் வெள்ளிக்கிழமை காலை ...

மேலும்..

கனடா இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராகச் செல்லத்துரை நியமனம்!

இலங்கையை மீண்டும் சுபீட்சமான பொருளாதார வளமிக்க நாடாக மாற்றுவதை நோக்காக் கொண்டு கனடாவிலுள்ள முதலீட்டாளர்களை இலங்கையில் தமது முதலீடுகளை மேற்கொள்வதற்காக முதலீட்டு ஊக்குவிப்பு  இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகமவால்,  கனடா -  இலங்கை வர்த்தக அமைப்பின் தலைவராக செல்லத்துரை நியமிக்கப்பட்டார். இந்த நியமன ...

மேலும்..

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்தப் போவதில்லை நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல திட்டவட்டம்

வீதி அபிவிருத்தி அதிகார சபையை தனியார் மயப்படுத்த போவதில்லை.நட்டமடையும் அரச நிறுவனங்களை மறுசீரமைப்பதால் அரச சேவையாளர்களின் தொழில் உரிமைகளுக்கு பாதிப்பு ஏற்படாது. மனித வள முகாமைத்துவம் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது என நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல ...

மேலும்..

சவால்களைக் கடந்து குருந்தூரில் பொங்கல்: தொடர்ந்தும் வழிபாடுகள் முன்னெடுக்கப்படும்! ரவிகரன் பெருமிதம்

பொலிஸார் மற்றும் சாந்தபோதி தேரர் ஆகியோருடைய குழப்ப முயற்சிகளைக் கடந்து குருந்தூர்மலையில் சிறப்பாக பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அதேவேளை தொடர்ந்தும் இந்தப் பொங்கல் வழிபாடுகள் குருந்தூர்மலையில் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். குருந்தூர்மலையில் இடம்பெற்ற பொங்கல் ...

மேலும்..