சிறப்புச் செய்திகள்

யாழில் சிதைவடைந்த நிலையில் குழந்தையின் சடலம் மீட்பு

யாழ்ப்பாணம், ஆறுகால்மடம் பகுதியில் குழந்தையொன்றின் தலையுடன் கூடிய சிதைவடைந்த  சடலம் ஒன்று நேற்றைய தினம் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறமாக குறித்த குழந்தையின் சடலம் இனங்காணப்பட்டு, வீட்டின் உரிமையாளரால்  பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை கைப்பற்றியுள்ளதுடன்  ...

மேலும்..

உதைபந்தாட்ட தொடரில் சாதனை படைத்த வீரர்கள் கௌரவிப்பு!

வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட தொடரில் வரலாற்றுச் சாதனை படைத்த மன்னார், இலுப்பைக்கடவை தமிழ் மகா வித்தியாலய பாடசாலை வீரர்களை கௌரவிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. வடமாகாண படசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட 18 வயதுப் பிரிவு ஆண்களுக்கிடையிலான உதைபந்தாட்ட ...

மேலும்..

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை முறைகேடாகப் பயன்படுத்தவில்லை : அமைச்சர் அநுராத!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் 40 பேர் மட்டுமே சிறைச்சாலைகளில் உள்ளார்கள் என போதே நீதிமன்ற, சிறைச்சாலை அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அநுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் ...

மேலும்..

வெள்ளவத்தையில் நடந்த துயரம் – தமிழ் இளைஞன் மரணம்..T

வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் 8 மாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெள்ளவத்தை பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.   வெள்ளவத்தை பொலிஸார் கட்டடத்தில் இருந்து கீழே விழுந்தவர் சிகிச்சைக்காக ...

மேலும்..

ஜப்பான் அரசினால் யாழிற்கு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பு

ஜப்பான் அரசின் நிதியனுசரனையுடன் ஜப்பானிய தூதுவராலயத்தினால் மூளாய் கூட்டுறவு வைத்தியசாலைக்கு இரண்டு நோயாளர் காவு வண்டிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. மூளாய் கூட்டுறவு வைத்தியசாலையில் இன்றைய தினம் இந்நிகழ்வு இடம்பெற்றது.\ இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் மிசுகொசி மற்றும் அவரது தூதரக அதிகாரிகள் இணைந்து இதனை ...

மேலும்..

வாணி வித்தியாலய பாடசாலை மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பால் கற்றல் உதவி!

  பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு அப்பாடசாலையின் அதிபர் ச.சண்முகரத்தினம் தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 10.00 மணியளவில் பாடசாலையின் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பாடசாலையின் பகுதித்தலைவர் திருமதி தனபாலசிங்கம், ஆசிரியர்களான திருமதி ப. சிவக்குமார், திருமதி. எஸ். ...

மேலும்..

ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ளான் மாணவர்கள் கற்கை பூர்த்தி செய்தோருக்கு சான்றிதழ்!

நூருல் ஹூதா உமர் அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் மற்றும்  அக்கரைப்பற்று பிரதேச செயலக முஸ்லிம் கலாசார அலுவல்கள் பிரிவு இணைந்து ரமழான் மாதம் அக்கரைப்பற்று பெரியபள்ளிவாசலில் நடாத்திய 'ஆசிர்வதிக்கப்பட்ட ரம்ளான் மாணவர்கள்' கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் ...

மேலும்..

சிறுவர் கழகங்களிலிருந்து தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா

நூருல் ஹூதா உமர் சாய்ந்தமருது - 12 ஆம் பிரிவைச் சேர்ந்த மெகா சிறுவர் கழகத்தின் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான ஒரு நாள் கல்விச்சுற்றுலா இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகம், அம்பாறை ஓட்டுத் தொழிற்சாலை, சீனி உற்பத்தி தொழிற்சாலை, சிறுவர் பூங்கா போன்ற ...

மேலும்..

தென்கிழக்குப் பல்கலைக்கு கல்வி அமைச்சால் சான்றிதழ்!

கல்வி அமைச்சால் கடந்த புதன்கிழமை அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த வரவேற்பு மண்டபத்தில் நடத்தப்பட்ட பரிசளிப்பு நிகழ்வில் வைத்து கல்வி அமைச்சால் செறிவூட்டல் கற்றல், கற்பித்தல் மற்றும் மதிப்பீடு மற்றும் ஆங்கில மொழி திறன்களை மேம்படுத்துதல் அபிவிருத்தி திட்டத்தை வெற்றிகரமாக முடித்ததற்காக இலங்கை ...

மேலும்..

மத்திய  அமைச்சர்களின் கையாலாகாத்தனத்துக்கு உதாரண புருஷர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா! சாணக்கியன் எம்.பி. கிண்டல்

மத்திய அரசாங்கத்தின் அமைச்சுப் பதவிகளை வைத்துக்கொண்டு மக்களின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது என்பதற்கு நல்லதோர் உதாரணம் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா. தமிழ் அமைச்சராக இருந்த போதும் மூன்றில் இரண்டு பகுதி கடல் வளம் கொண்ட வடக்கு மற்றும் கிழக்கு வாழ் ...

மேலும்..

இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி பட்டறை

நூருல் ஹூதா உமர் மனித மேம்பாட்டு அமைப்பு ஸ்ரீலங்கா மற்றும் வை.எம்.எம்.ஏ. மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டிலும் டைடன் ஆசியன் கல்வி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பிலும் புனித சென்ஜோன்ஸ் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் இளைஞர் யுவதிகளுக்கு முதலுதவி பயிற்சி பட்டறை நடைபெற்றது. மனித மேம்பாட்டு அமைப்பின் பணிப்பாளரும், ...

மேலும்..

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது குறித்து கொரியா இணக்கம்!

கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா பிரதிநிதிகள் இணக்கம்  தெரிவித்துள்ளனர். கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் புதன்கிழமை (09) சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி ஆலைகளை அமைப்பது தொடர்பில்,கொரியா ...

மேலும்..

கல்முனை மாநகர நிதி மோசடி : கைதான இருவருக்கும் விளக்கமறியல்

கல்முனை மாநகர நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவருக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. குறித்த வழக்கு புதன்கிழமை(9) கல்முனை நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம் சம்சுதீன் குறித்த வழக்கு ...

மேலும்..

பொருளாதார நெருக்கடி மிக நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது – செகான்

இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மிகநீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டபொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதற்கான ஊக்கியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ள நிதி இராஜாங்க அமைச்சர் செஹான்சேமசிங்க இந்த சீர்திருத்தங்களை இலங்கையின் பொருளாதார பலவீனங்களுக்கு முடிவுகட்டும் எனவும்  தெரிவித்துள்ளார். இலங்கையில் முதலீடு தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் ...

மேலும்..

முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு அருகில் வாகன தரிப்பிடம் அமைக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தை அண்மித்த பகுதிகளில் வாகன தரிப்பிடம் இல்லாததனால் நீதிமன்றத்துக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாகக் கூறி, நீதிமன்றத்தின் அருகில் வாகன தரிப்பிடமொன்றை அமைக்குமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் A31 பிரதான வீதியில் ...

மேலும்..