பிரதான செய்திகள்

அரசாங்க சதிக்கு எதிர்ப்பு தெரிவித்த மருத்துவ மாணவர்கள்

மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் கொழும்பு விஹாரமகாதேவி பூங்காவிற்கு அருகில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் ஊடாக இலவசக்கல்வி மற்றும் இலவச சுகாதாரம் என்பவற்றை விற்பதற்கு அரசாங்கம் சதி செய்வதாக தெரிவித்து மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தினால் இன்று ...

மேலும்..

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு போராட்டம் முன்னெடுப்பு

சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுப்பப்பட்டுள்ளது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் மாலை 3 மணியளவில் யாழ். ஊடக அமையத்தின் ஏற்பாட்டில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்களின் ஆசிரியர்கள் உள்ளிட்டவர்கள் ...

மேலும்..

நடு வீதியில் திடீரென தீப்பற்றிய முச்சக்கரவண்டி

நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக முச்சக்கர வண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இச்சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. நோட்டன் பிரிட்ஜ் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கி பயணம் மேற்கொண்ட போதே முச்சக்கர வண்டி தீ ...

மேலும்..

கொத்து உள்ளிட்ட சில உணவுகளின் விலை குறைப்பு

எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ள நிலையில்  உணவு பொருட்கள் சில்வற்றின் விலைகளை குறைக்க அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைய கொத்து மற்றும் ப்ரைட் ரைஸ் ஆகிய உணவுகளின் விலை 20 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் ஹர்ஷன ருக்ஷான் தெரிவித்துள்ளார். சிற்றுண்டிகளின் ...

மேலும்..

அம்பாறையில் இரு பேருந்துகள் மோதி விபத்து

அக்கரைப்பற்று – அம்பாறை பிரதான வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்ஓயா பாலத்திற்கு அருகில் இன்று (03)  பிற்பகல்  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான  பேருந்து மற்றும் பாடசாலை சேவை ...

மேலும்..

நீலப் பொருளாதார மாநாட்டில் இரா. சாணக்கியன்

இந்தோனேசியாவில் அண்மையில் இடம்பெற்ற  நீலப் பொருளாதார மாநாட்டில் மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இரா. சாணக்கியன் பங்கேற்றுள்ளார். ஜகார்த்தாவில் Jakarta Futures Forum என்னும் தலைப்பில் இடம்பெற்ற குறித்த மாநாட்டில் கடல் சூழல் மற்றும் பல்லுயிர் பெருக்கத்தை பாதுகாத்தல், கடல் ...

மேலும்..

சுவாமி விபுலானந்தரின் 132 ஆவது ஜனன தினம் மட்டக்களப்பில் அனுஸ்டிப்பு

வெளிநாட்டில் உள்ளவர்களை நம்பியிருந்தால் எமது நாடு வளம்பெறாது, தொழில்நுட்பம் சார்ந்து உழைக்க கற்றுக்கொண்டு சொந்தக்காலில் நிற்கவேண்டும் அதற்காக மாணவர்கள் பயிற்சியளிக்கப்பட வேண்டும் என்ற கருத்தினை சுவாமி விபுலானந்தர் வலியுறுத்திவந்துள்ளதாக மட்டக்களப்பு இராம கிருஸ்ணமிசனின் பொது முகாமையாளர் ஸ்ரீமத் சுவாமி நீல மாதவானந்தா ...

மேலும்..

கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் சடலம் – தாய் கைது

கற்பிட்டி- கண்டல்குடா பகுதியில் உள்ள வீட்டின் கிணற்றில் வீசப்பட்ட இரண்டரை மாத குழந்தையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாத்திமா சைமா எனும் பெண் குழந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது. நேற்று (02) அதிகாலை 4 மணியளவில் பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு ...

மேலும்..

மட்டக்களப்பில் இந்திய உதவி சத்திர சிகிச்சை பிரிவு  விரைவில் திறக்கப்படும்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இந்திய அரசாங்கத்தினால் நிர்மாணிக்கப்பட்டுவரும் சத்திர சிகிச்சை பிரிவு  விரைவில் திறக்கப்படும் என மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் க.கலாரஞ்சனி தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா விஜயம் மேற்கொண்டிருந்த போதே ...

மேலும்..

இல்மனைற் அகழ்வை நிறுத்த கோரி இராஜங்க அமைச்சர் தலைமையில் எதிர்ப்பு ஊர்வலம்

மட்டக்களப்பு வாகரையில் நில அபகரிப்பை தடுப்போம் நிலத்தை காப்போம் என்ற தொனிப் பொருளில் இராஜங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தலைமையில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் மாபெரும் கவனயீர்பு ஆர்பாட்ட ஊர்வலம் ஒன்றில் ஈடுபட்டிருந்தனர். குறித்த எதிர்ப்பு ஊர்வலம் நேற்று (02) வாகரை கண்டலடி ...

மேலும்..

லாப் எரிவாயு குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல் எரிவாயுவின் விலையும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 275 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்படி  12.5 கிலோ கிராம் லாப்ஸ் சமையல் எரிவாயு சிலிண்டரின்  புதிய ...

மேலும்..

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகளின் தேசிய அடையாள அட்டை குறித்த முக்கிய அறிவிப்பு

க.பொ.த (சா/த) பரீட்சார்த்திகள் தமதுக தேசிய அடையாள அட்டைளைப் பெறுவதற்காக பத்தரமுல்லையில் உள்ள ஆட்பதிவு திணைக்களத்தின் பிரதான அலுவலகம் உட்பட ஏனைய சில அலுவவலகங்கள் நாளை மதியம் வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய பத்தரமுல்லை பிரதான அலுவலகம் ,காலி, குருநாகல், வவுனியா மற்றும் ...

மேலும்..

யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணராக யோ.கஜேந்திரன்

யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக மருத்துவர் யோ.கஜேந்திரன் இன்று முதல் பதவியேற்றுள்ளார். யாழ் போதனா வைத்தியசாலை மகப்பேற்று, பெண் நோயியல் வைத்திய நிபுணராக இதுவரை பதவி வகித்த வைத்தியர் சிறிதரன் கொழும்பு டி சொய்சா மருத்துவமனைக்கு இடமாற்றம் ...

மேலும்..

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. இந்த வருடத்திற்கான 1ம் தவணையின் 2ம் கட்டத்தை நிறைவுறுத்தி இந்த விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த நிலையில் முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கற்றல் ...

மேலும்..

எதிர்க்கட்சித் தலைவருக்கும் நோர்வே தூதுவருக்கும் இடையில் விஷேட சந்திப்பு

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய நிலைமை ...

மேலும்..