பிரதான செய்திகள்

ஆசிரியர்களுக்கு சின்னம் சூட்டல்!

எம்.எப்.றிபாஸ் அக்கரைப்ற்று கல்முனை மாவட்ட சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் சாரணர்த்துறையில் கலைக்கூறு ஒன்று முடித்த ஆசிரியர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு அக்கரைப்பற்று அஸ்ஸிறாஜ் மாகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. மாவட்ட சாரண ஆணையாளர் எம்.ஐ.உதுமாலெவ்வை தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மாவட்ட சாரணர் சங்கத்தின் தவிசாளர் ...

மேலும்..

திருமலை சிறைச்சாலையில் நூலக நடமாடும் சேவை!

(ஹஸ்பர் ஏ.எச்) திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகத்தால் திருகோணமலை சிறைச்சாலை கைதிகளுக்கான நூலக நடமாடும் சேவையும் சிறைச்சாலை நூலகத்திற்கு ஒரு தொகுதி புத்தகங்கள் கையளிக்கும் நிகழ்வும் புதன்கிழமை காலை திருகோணமலை சிறைச்சாலையில் இடம்பெற்றது. நிகழ்வில் நடமாடும் நூலக சேவை பற்றியும் நூலகம் பற்றியும் ...

மேலும்..

கிளிநொச்சி மாவட்ட   ஒருங்கிணைப்பு குழு!

கிளிநொச்சி மாவட்ட மாசி மாதத்துக்கான ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் வியாழக்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. மேற்படி கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் உள்ள தமிழ் பிரதேசங்கள் புறக்கணிப்பு! நாடாளுமன்ற உறுப்பினர் கலையரசன் காட்டம்

( வி.ரி.சகாதேவராஜா) இம்முறை அரசு நிதி பகிர்ந்தளிப்பில் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேசங்கள்  புறக்கணிக்கப்பட்டிருக்கின்றன. இதனை நான் வன்மையாக ஆட்சேபிக்கின்றேன் என்று அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார். அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தின் பின்னர் அவர் கருத்துரைக்கையில் - காலாகாலமாக ...

மேலும்..

நிகழ்நிலை காப்புச்சட்டம் சட்டரீதியிலேயே அனுமதி! ஆஷு மாரசிங்க கூறுகிறார்

நிகழ்நிலை காப்புச்சட்டம் நாடாளுமன்றத்தில் சட்டத்துக்கு முரணாக அனுமதிக்கப்படவில்லை. அத்துடன் குறித்த சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்திட்டதில் இருந்து அது நாட்டின் சட்டமாகும். அதனால் சமூகவலைத்தளம் மூலம் யாருக்கு எதிராகவும் பொய் பிரசாரங்கள் மேற்கொண்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என ...

மேலும்..

மாற்றுத்திறனாளி வாழ்வாதார மேம்பாட்டுக்கு சுயதொழில் உபகரணங்கள் வழங்கி வைப்பு! கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் வழிகாட்டுதலின் பேரில் சமூக சேவைகள் அமைச்சு நடத்திய மாற்றுத்திறனாளிகளைக் கௌரவிக்கும் நிகழ்வு மட்டக்களப்பில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சுய தொழில் உபகரணங்களும், பொழுதுபோக்குக்காக அவர்களின் வீடுகளுக்கு எல்.ஈ.டி. தொலைக்காட்சிகளும் செந்தில் தொண்டமானால் வழங்கி ...

மேலும்..

ஒவ்வொரு கிராமத்தையும் மேம்படுத்த வேண்டுமாம்! இதுவே அரசின் கொள்கை என்கிறார் பிரசன்ன

குளிரூட்டப்பட்ட அறைகளிலிருந்து கொண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுக்கும் கொள்கையிலிருந்து தற்போதைய அரசாங்கம் இல்லை என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். மக்களின் கருத்துக்களை உள்வாங்கி மக்களின் தேவைகளைக் கருத்திற் கொண்டே அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாக அவர் வலியுறுத்தியுள்ளார். அதற்கேற்ப ...

மேலும்..

முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவச பாடப்புத்தகம், சீருடை துணி வழங்கி வைப்பு

(அஸ்ஹர் இப்றாஹிம்) வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்ட கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டுக்கான இலவச பாடப்புத்தகங்கள் மற்றும் பாடசாலை சீருடைக்கான துணிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு வெலிஓய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் ...

மேலும்..

யாழ் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி விபத்து : குழந்தை உட்பட இருவர் பலி ! ஒருவர் படுகாயம்

யாழ்ப்பாணம் இணுவில் பகுதியில் புகையிரதத்துடன் வேன் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் இன்று புதன்கிழமை (14) மாலை இடம்பெற்றுள்ளது. வேனில் பயணித்த மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி குழந்தை உட்பட ...

மேலும்..

நயினாதீவில் கஞ்சா மீட்பு!

நயினாதீவில் 20 கிலோ மற்றும் 140 கிராம் கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது - நயினாதீவு  கடற்கரையில் கஞ்சா இருப்பதாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு கடற்படையுடன் இணைந்து விரைந்த விசேட ...

மேலும்..

தேசிய கீதம், தேசிய கொடிக்கான முக்கியத்துவம் மன, உடல் ரீதியாக இருப்பது அவசியமான ஒன்று! அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அறிவுரை

தேசிய கீதம் பாடப்படுகின்ற சந்தர்ப்பங்களில் மாணவர்கள் அதன் மீது அதிகளவான கவனத்தையும் மரியாதையையும் செலுத்துவது அவசியம்  என  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். அச்சுவேலி புனித திரேசா பெண்கள் கல்லூரியில் இடம்பெற்ற பிரிவெனா மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் மற்றும் பாடசாலை ...

மேலும்..

மட்டு மாவட்டத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான முதலாவது ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம்!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் இவ்வாண்டிற்கான முதலாவது  ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றது. இதன்போது கடந்த ஆண்டு இம்மாவட்டத்தில் 9953.11 மில்லியன் ரூபா செலவில் நடைமுறைப்படுத்தப்பட்ட 1162 ...

மேலும்..

சாய்ந்தமருது இளம் தொழிலதிபர் நீதிக்கான மையத்தால் கௌரவிப்பு!

  (எஸ்.அஷ்ரப்கான்) இந்தியா, திருச்சியில் சிறந்த வர்த்தக முகாமைத்துவ பணிப்பாளர்களுக்கான ஆசிய விருது - 2023, பெற்ற நீதிக்கான மைய்யத்தின் பொருளாளர், இளம் தொழிலதிபர் அப்துல் அஸீஸ் அஷ்ரஃப் அலி நீதிக்கான மைய்யத்தால் கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வு நீதிக்கான மைய்யத்தின் தலைவர் சட்டமுதுமாணி ஷஃபி எச். இஸ்மாயில் ...

மேலும்..

லொறி – ஓட்டோ மோதி விபத்து! ஒருவர் பலி

  குளியாப்பிட்டி - உடுபத்த பிரதேசங்களுக்கு இடையில் பல்லேவெல பகுதியில் இயந்திர கோளாறு காரணமாக வான் ஒன்று லொறியின் உதவியுடன் இழுத்துச்செல்லப்பட்ட நிலையில் குறித்த லொறியானது ஓட்டோவுடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை இந்தச் இடம்பெற்றுள்ளது. விபத்தின் போது ஓட்டோவில் ...

மேலும்..

முன்னால் திரும்பிய மோட்டார் சைக்கிளை முட்டி தள்ளி வீதியை விட்டு விலகி காணிக்குள் புகுந்தது அரச பஸ்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி - ஏ. 9 வீதி, நாவற்குழி பகுதியில் இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 4.15 மணியளவில் இடம்பெற்றது. ஏ9 வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் திரும்ப முற்பட்டபோது பின்னால் பயணித்த அரச பஸ் அதனை முட்டி ...

மேலும்..