பிரதான செய்திகள்

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பசும்பால் விற்பனை நிலையம்!

நூருல் ஹூதா உமர் இலங்கை, கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் நலன் கருதி 'ஆரோக்கியா பாலகம்' எனும் பெயரிலான பசும்பால் மற்றும் பால்சார் உற்பத்திகளின் விற்பனை நிலையம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது. பல்கலைக்கழக பதிவாளர் அ.பகிரதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், உபவேந்தர் ...

மேலும்..

கணையான்  மீன் இனங்கள் அம்பாறையில் பெருக்கெடுப்பு

பாறுக் ஷிஹான் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக  அதிகளவான  கணையான்  மீன் இனங்கள்   அம்பாறை மாவட்டத்தின்   பிராந்திய  ஆற்றோரங்களில்  பிடிபடுகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏற்பட்ட மழை வெள்ளம் காரணமாக கடலை நோக்கி ஓடும் நீரோடைகள் ஆறுகளில் இருந்து   ...

மேலும்..

கல்முனை ஆதார வைத்தியசாலையில்   உலக தொழுநோய் தின நிகழ்வுகள்!

( வி.ரி.சகாதேவராஜா) கல்முனை  ஆதார வைத்தியசாலையில் தொழுநோய் தினத்தினையொட்டி செவ்வாய்க்கிழமை வைத்தியசாலையின் கேட்போர்கூடத்தில் தொழுநோய் தின நிகழ்வு நடைபெற்றது. வைத்தியசாலையின் தோல் நோய் பிரிவினரின் ஏற்பாட்டில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டாக்டர். இரா. முரளீஸ்வரன் தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது இந் நிகழ்வின் பிரதம ...

மேலும்..

கல்முனை இஸ்லாமாபாத் வித்தி பொங்கல் பெருவிழா நிகழ்வு!

(எம்.எஸ்.எம்.ஸாகிர்) கல்வி அமைச்சின் சுற்று நிரூபத்தை அடிப்படையாகக் கொண்டு பல்லின சமய கலாசார நிகழ்வுகளை மாணவர்களின் மத்தியில் அறிமுகப்படுத்தும் எண்ணக்கருவிற்கமைவாக கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் ஆலோசனை வழிகாட்டல் பிரிவால் பொங்கல் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் ...

மேலும்..

இளங்கவி விபுல சசிக்கு கலைஞர் சுவதம் விருது!

  வி.ரி.சகாதேவராஜா அம்பாறை மாவட்ட இலக்கிய விழாவில் காரைதீவைச் சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் இளம் கவிஞர் மனோகரன் சசிப்பிரியன்(விபுலசசி) அவர்களுக்கு கலைஞர் சுவதம் விருதை அம்பாறை மாவட்ட செயலாளர் சிந்தக அபேவிக்கிரம வழங்கிக் கௌரவித்தார்.

மேலும்..

கிழக்கு பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் பெரு விழா!

  வி.ரி.சகாதேவராஜா கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தைப்பொங்கல் தின விழா கோலாகலமாக நடைபெற்றது.

மேலும்..

பேராதனைப் பல்கலையில் தைப்பொங்கல் பெருவிழா!

  வி.ரி.சகாதேவராஜா பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவபீட மாணவர்கள் குறிஞ்சிக்குமரன் ஆலயத்தில் தைப்பொங்கல் தின விழாவை நடத்தினர். இந்த நிகழ்வில் இன, மத பேதங்கடந்து பல மாணவர்கள் பங்குகொண்டமை குறிப்பிடத்தக்கது.

மேலும்..

தென் கிழக்குப் பல்கலைக்கழக 16 ஆவது பொதுப் பட்டமளிப்பு!

  பாறுக் ஷிஹான் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 16 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக ஒலுவில் வளாக மாநாட்டு மண்டபத்தில் பெப்ரவரி மாதம் 10 ஆம் திககதி சனிக்கிழமை, 11 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாள்களும் நடைபெறவுள்ளதாக, தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பதில் ...

மேலும்..

இரண்டு பிரதேச செயலகங்களுக்கான ஒருங்கிணைப்புகுழு கூட்டம் நடந்தது

  மண்முனை மேற்கு வவுணதீவு மற்றும் மண்முனைப்பற்று ஆரையம்பதி போன்ற பிரதேச செயலக பிரிவுகளுக்கான பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர் சிவ.சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்றது. இவ்விரு பிரதேச செயலக பிரிவுகளுக்குமான 2024 ஆம் ஆண்டிற்கான முதலாவது பிரதேச ஒருங்கிணைப்புக் ...

மேலும்..

அம்பாறை மாவட்டத்தில் சிறப்பாக செயற்பட்ட பிரதேச செயலகங்களுக்கு உயரிய கௌரவம்

  நூருல் ஹூதா உமர் ஸ்ரீலங்கா இஸ்லாமிக் ரிலீப் நிறுவனம், அம்பாறை மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட பிரதேச செயலகங்களில் இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் மூலம் விதவைகள் மற்றும் பெண்களை வழிநடத்தும் குடும்பத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் மூன்று வருடங்களாக வெற்றிகரமான முறையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இலங்கையில் நிலையான வாழ்வாதாரத்தின் ...

மேலும்..

குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை கட்சி முன்னிலையில் அமரவைப்பதை ஏற்கேன்! சரத் பொன்சேகா காட்டம்

தயா ரத்நாயக்க இராணுவ அதிகாரி என்பதால் அவரை கட்சியில் இணைத்துக் கொள்வதாக இருந்தால் கோட்டாபய ராஜபக்ஷவையும் கட்சியில் இணைத்துக் கொள்ள முடியும்.பொருளாதார நிபுணர் என்று குறிப்பிட்டுக் கொண்டு அஜித் நிவார்ட் கப்ராலையும் கட்சியில் இணைத்துக் கொள்ளமுடியும். குப்பைத் தொட்டியில் போட வேண்டியவர்களை ...

மேலும்..

கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் புதிய மாணவர்கள் வரவேற்கும் நிகழ்வு

  (எஸ்.அஷ்ரப்கான்) கல்முனை சபா ஆரம்ப பாடசாலையின் பிரியாவிடை மற்றும் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகள் அதிபர் மர்லியா பர்ஷாத் தலைமையில் பாடசாலையில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது. இங்கு மாணவர்களின் கலை; கலாசார நிகழ்வுகள் இடம் பெற்றதுடன், பாடசாலையின் புதிய மாணவர்களின் வரவேற்பும் முதலாம் ஆண்டுக்குச் ...

மேலும்..

மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் : அமைச்சர் மனுஷ!

நாட்டைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவே என அரசியல் கட்சி தலைவர்கள் தொடர்ந்து கூறிவந்தாலும், மக்களைக் காப்பாற்றுவதற்கான இறுதிச் சந்தர்ப்பமே இதுவென அமைச்சர் மனுஷ நாணாயக்கார தெரிவித்துள்ளார். தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் ஏற்பாட்டில் நடமாடும் சேவை நிகழ்ச்சியின் அங்குரார்ப்பண நிகழ்வு ...

மேலும்..

முஜாபர் ரஹ்மான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை சிரிப்பை வரவழைக்கின்றது!

ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக மாற்றவே கண்ணீர்ப்புகைத்  தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார். சுற்றுலாத்துறை அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”கட்டுக்கடங்காத ஒழுக்கமற்ற மக்களை ஒழுக்கமுள்ளவர்களாக ...

மேலும்..

தனியாருக்கு நெல் கொள்வனவு அனுமதி : கமக்காரர் அமைப்புக்கள் விசனம்!

நெல் சந்தைப்படுத்தல் சபையை விடுத்து தனியாருக்கு நெல் கொள்வனவு செய்வதற்கு அனுமதிப்பது என்பது தொடர்பான விவசாய அமைச்சரின் கருத்தானது மனவேதனையளிப்பதாக இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளன செயலாளர் முத்து சிவமோகன் தெரிவித்தார். கிளிநொச்சியில் இன்று நடாத்திய ஊடக சந்திப்பிலேயே குறித்த விடயத்தை தெரிவித்தார். ...

மேலும்..