பிரதான செய்திகள்

நுவரெலியா கிரகரி வாவியில் ஆணின் சடலம் மீட்பு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுவரெலியா - பதுளை பிரதான வீதியில் உள்ள கிரகரி வாவியில் இன்று சனிக்கிழமை (27) காலை சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர். கிரகரி வாவியில் படகு சவாரியில் ஈடுபடுவோர் சடலமொன்று மிதப்பதாக பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

சிறீதரனின் ஐக்கிய அழைப்புக்கு விக்னேஸ்வரன் பச்சைக்கொடி : ஒன்றிணைவது காலத்தின் கட்டாயமெனவும் தெரிவிப்பு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கு விடுத்துள்ள அழைப்பிற்கு தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் பச்சைக்கொடி காண்பித்துள்ளார். சிறீதரன் விடுத்துள்ள அழைப்பு தொடர்பில் அவர் ...

மேலும்..

அவிசாவளையிலிருந்து திருகோணமலைக்கு சுற்றுலா சென்ற வேன் விபத்து : 8 பேர் படுகாயம்

திருகோணமலை - சேருநுவர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தங்கநகர் பகுதியில் வெள்ளிக்கிழமை (26) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியிலேயே இந்த விபத்து ...

மேலும்..

நாரம்மலயில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் மூவர் உயிரிழப்பு : ஒருவர் காயம் !

நாரம்மல - கிரியுல்ல பிரதான வீதியின் கிவுல்கல்ல வளைவுக்கு அருகில் இன்று சனிக்கிழமை (27)  காலை இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை, இந்த விபத்தில் காயமடைந்த நபர் ஒருவர் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் ...

மேலும்..

கிளிநொச்சியில் கஞ்சா கடத்தல் : 4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது, இருவர் தப்பியோட்டம்

யுத்திய நடவடிக்கையின் போது நேற்று வெள்ளிக்கிழமை (26) கிளிநொச்சியில்  மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில் லொறியொன்றில் கடத்தி செல்லப்பட்ட  4 கிலோ கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். லொறியொன்றில் கஞ்சா கடத்தி செல்லப்படுவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு  கிடைத்த தகவலையடுத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்துக்கு அமெரிக்கா எதிர்ப்பு – ரஸ்யா ஆதரவு!

இலங்கையின் சர்ச்சைக்குரிய நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் புவிசார் அரசியல் மோதலில் சிக்குண்டுள்ளது. இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தை கண்டித்துள்ள அதேவேளை ரஸ்யா வரவேற்றுள்ளது. நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் முற்றிலும்  ஓர் உள்நாட்டு விடயம் என  இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் ...

மேலும்..

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரனே ஒன்றிணைக்க வேண்டுமாம்! கோருகிறது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

சிதறிக்கிடக்கும் தலைமைத்துவத்தை சிறீதரன் ஒன்றிணைக்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் நிமால் விநாயகமூர்த்தி வலியுறுத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள சிவஞானம் சிறீதரனுக்கு அவர் அனுப்பிய வாழ்த்துச் செய்தியிலேயே இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், நிலத்திலும் ...

மேலும்..

சனத் நிஷாந்தவின் மறைவு முழு நாட்டுக்கும் பேரிழப்பு! மஹிந்த ராஜபக்க்ஷ அனுதாபம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மறைவு எமது கட்சிக்கு மாத்திரமல்ல முழு நாட்டுக்கும் பேரிழப்பு. புத்தளம் மாவட்டம் சிறந்த தலைமைத்துவத்தை இழந்து விட்டது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் ...

மேலும்..

அரசுக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலைகளாக மாற்றியமைக்க தீர்மானம்!

அரசாங்கத்துக்கு சொந்தமான இரண்டு கட்டடங்களை சிறைச்சாலை கட்டடங்களாக மாற்றியமைக்க நீதி, சிறைச்சாலைகள் நடவடிக்கை மற்றும் அரசமைப்பு மறுசீரமைப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது. சிறைச்சாலைகளில் தற்போது ஏற்பட்டுள்ள அதிக நெருக்கடிகளுக்கு தீர்வாகவே இந்த நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதேவேளை, நாட்டில் ...

மேலும்..

மூன்று பில்லியன் ரூபா இலாபத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம்! லிற்றோ நிறுவனம் அறிவிப்பு

மூன்று பில்லியன் ரூபா இலாப வருமானத்தை திறைச்சேரிக்கு செலுத்தியுள்ளோம். பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டிருந்த லிற்றோ நிறுவனம் தற்போது இலாபமடைந்துள்ளது என லிற்றோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்தார். கொழும்பில் உள்ள லிற்றோ நிறுவனத்தின் காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு ...

மேலும்..

எம்முடன் இணைந்து பயணிக்க சிறீதரன் முன்வருதல் வேண்டும் சுரேஷ் பிரேமச்சந்திரன் பகிரங்கம்

  ஐக்கியத்தை விரும்பும் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவர் எம்முடன் கைகோர்த்துப் பயணிப்பதற்கு வரவேற்கின்றோம் என்று ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் சார்பில் அதன் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு - புதிய ...

மேலும்..

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பாக சட்டமா அதிபர் திணைக்களம் ஆராயவில்லை! கலாநிதி ஜயம்பதி விக்கிரமரட்ண கருத்து

நிகழ்நிலை பாதுகாப்பு சட்ட மூலம் முதலில் வர்த்தமானியில் வெளியானவேளை சட்டமா அதிபர் திணைக்களம் அதனை ஆராயவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி  ஜயம்பதி விக்கிரமரட்ண தெரிவித்துள்ளார். கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் 15 ஆம் திகதி முதலில் இந்த சட்டமூலம் வர்த்தமானியில் வெளியானது. நாங்கள் ...

மேலும்..

புத்தளம், கற்பிட்டி கடலில் சட்ட விரோதமாக சங்குகள் பிடித்த மூவர் கைது

புத்தளம் , கற்பிட்டி கடலில் சட்டவிரோதமான முறையில் சங்குகள் பிடித்த குற்றச்சாட்டில் மூவர் நேற்று வியாழக்கிழமை (25) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் புத்தளம் , கற்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 12 முதல் 48 வயதுக்குட்பட்டவர்களாவர். இலங்கை கடற்படையினரால் கற்பிட்டி கடற்பரப்பில் செய்யப்பட்ட சோதனையின்போது சந்தேகத்திற்கு ...

மேலும்..

“மன்னார் தீவை கடலுக்குள் அமிழ்த்தாதே” : சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு வலியுறுத்தி மன்னாரில் போராட்டம்

மன்னாரில் இடம்பெற்று வருகின்ற சுற்றுச்சூழலை அழிக்கும் சட்ட விரோத செயற்பாடுகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்; மக்கள் நலமாக வாழ நாட்டின் வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பவற்றை வலியுறுத்தி மன்னாரில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது. அத்தோடு, மன்னாரில் இடம்பெற்று வரும் பாரிய களிமண் அகழ்வு மற்றும் உயர்மின்வலு காற்றாடிகள் அமைக்கும் திட்டங்கள் ...

மேலும்..

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு விபத்தில் இளைஞர் பலி!

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று வியாழக்கிழமை (25) இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்தனர் . உழவு இயந்திரமும் சிறியரக பட்டா ரக வாகனமும் மோதி விபத்துக்குள்ளானதில் வள்ளிபுனம் பகுதியை சேர்ந்த 28 வயதுடைய இளைஞரே உயிரிழந்துள்ளார் ...

மேலும்..