பிரதான செய்திகள்

வவுனியா வடக்கு கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்துக்கான குடிநீர் தாங்கி திறந்துவைப்பு

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின்தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நீண்ட காலத்துக்குப் பின்னர் தீர்வு காணும் வகையில் குடிநீர் தாங்கி அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, கோயில்புளியங்குளம் மஹா விஷ்ணு ஆலய பிரதம குரு சிவஸ்ரீ ஜெ.மயூர குருக்களின் நிதிப் பங்களிப்பில் வவுனியா ஊடகவியலாளர்களால் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கி பாடசாலை அதிபர் முன்னிலையில் ...

மேலும்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முடிவெடுப்பது ரணிலோ பாராளுமன்றமோ அல்ல – ரில்வின் சில்வா

ஜனாதிபதி தேர்தலை ஆணைக்குழுவைத் தவிர வேறு எவரும் தீர்மானிக்கத் தேவையில்லையென்று தேர்தல் ஆணைக்குழு அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் இரு தடவைகள் ஊடகங்களுக்கு கூறியுள்ள என களுத்துறை மாவட்ட மீனவர் மாநாட்டில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர்  ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ...

மேலும்..

இளையராஜாவின் மகள் பவதாரணியின் பூதவுடல் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்பட்டது : சகோதரியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த இலங்கை வந்த யுவன்

மறைந்த பின்னணி பாடகியான பவதாரணியின் பூதவுடல் இன்று (26) பிற்பகல் 1.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து  ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் UL 127 என்ற விமானத்தினூடாக சென்னைக்கு கொண்டு செல்லப்பட்டது. இசைஞானி இளையராஜாவின் மகளும், மறைந்த பின்னணி பாடகியுமான பவதாரணியின் பூதவுடலை பார்ப்பதற்காக ...

மேலும்..

யாழ்ப்பாணத்து வருகையை வரவேற்கும் வல்வை வளைவு

யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை நோக்கி செல்லும் வீதியில் 'யாழ்.வல்வை வளைவு' வலிகாமத்தை வடமராட்சியில் இருந்து பிரித்து இரு இடங்களையும் எல்லைப்படுத்துகின்றது. மேலும், வடமராட்சிக்கு வருவோரை யாழ்.வல்வை வளைவு வரவேற்று நிற்கின்றது. ஏ9 வீதி வழியே யாழ்ப்பாணம் செல்லும் போது யாழ்.வளைவு நம்மை வரவேற்பதை இது ...

மேலும்..

தமிழரசின் புதிய தலைவருக்கு மன்னாரில் பெரும் வரவேற்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை வரவேற்கும் முகமாக மன்னாரில் வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது. நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வரவேற்பு நிகழ்வானது, வியாழக்கிழமை மாலை 4.30 ...

மேலும்..

இலங்கையின் சுதந்திர தினம் சிங்களவர்களுக்கும் கரிநாளே – யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என அழைப்பு விடுத்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், சிங்கள மக்களுக்கும் கரிநாள் என்பது பொருத்தமானதே என தெரிவித்தனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்தபோதே பல்கலைக்கழக மாணவர் ...

மேலும்..

சனத் நிஷாந்த இல்லத்திற்குசென்று இரங்கல் தெரிவித்தார் ஜனாதிபதி!

வாகன விபத்தில் உயிர் நீத்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் இல்லத்திற்கு வியாழக்கிழமை காலை சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். இராஜாங்க அமைச்சரின் திடீர் மரணத்தையிட்டு அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஜனாதிபதி இரங்கல் தெரிவித்தார்.

மேலும்..

சனத் நிசாந்தவின் மரணம் தொடர்பில் சமூக வலைத் தளங்களில் அவதூறு! விசாரணைகள் ஆரம்பம்

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக ஊடகங்களில் எதிர்மறையான பதிவுகள் வெளியாகி வருகின்றன எனவும் அவற்றை ...

மேலும்..

அரச வளங்களை கொள்ளையடித்தவர்களை   எமது அரசில் சட்டத்தின் முன் நிறுத்துவோம்! சஜித் பிரேமதாஸ சபதம்

வற் வரியை அறவிடமால், அரச வளங்களைத் திருடிய திருடர்களை சட்டத்தின் முன் நிறுத்தி கொள்ளையிட்ட பணத்தை மீள பெற்றுக்கொள்ள வேண்டும்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த திருடர்கள் அனைவரும்  சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அனைத்து வித தண்டனைகளும் வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் ...

மேலும்..

ஆசிரியர்களின் பற்றாக்குறைக்கு பெப்ரவரி இறுதிக்குள் தீர்வாம்! அமைச்சர் சுசில்  உத்தரவாதம்

நாடு முழுவும் நிலவிவரும் ஆசிரியர் பற்றாக்குறை பிரச்சினையை எதிர்வரும் பெப்ரவரி மாதம் இறுதியாகும்போது தீர்த்துக்கொள்ள முடியுமாகும். அதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் விசேட கூற்றொன்றை முன்வைத்து எதிர்க்கட்சித் தலைர் சஜித் பிரேமதாஸ முன்வைத்த ...

மேலும்..

மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயம் வடக்கு மாகாணத்தில் அமையுமாம்! அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவிப்பு

வடக்கு மாகாணத்தை அடிப்படையாகக் கொண்டு மீன்பிடித்துறை சார் முதலீட்டு வலயத்தை ஆரம்பிப்பதற்கு சீன நிறுவனமொன்றுடன் விசேட பேச்சு இடம்பெறவுள்ளதாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் ...

மேலும்..

தமது சொந்தக் காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வடக்கு மக்கள்! சாணக்கியன் வேதனை

தங்களது சொந்த காணியில் இராணுவம் விவசாயம் செய்வதை வேலியால் பார்க்கும் வட பகுதி மக்களின் நிலை யாருக்கும் வரக்கூடாது என  நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அமர்வில் கேள்விபதிலின் போது  பாதுகாப்பு அமைச்சரிடம் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இவ்விடயம் தொடர்பாக ...

மேலும்..

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை எமது அரசில் இரத்துச்செய்வோம்! ஹர்ஷ டி சில்வா உறுதி

நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு 98 சதவீதமான மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். எமது ஆட்சியில் இந்த சட்டமூலம் முழுமையாக இரத்து செய்யப்படும். ஜனநாயகம் நாடாளுமன்றத்துக்குள் உள்ளதா, வெளியில்  உள்ளதா என்பது தெளிவாகியுள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி ...

மேலும்..

அரச அதிகாரிகளின் தவறுகளால் முதலீட்டாளர்கள் இலங்கைக்குத் திரும்பவும் வராமல் போகலாமாம்! அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறுகின்றார்

அருவக்காலு குப்பைத் திட்டம் செயற்பாடுகள் எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இறுதிக்கட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்தார். முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு முறையான ...

மேலும்..

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு!

பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான நிஹால் தல்துவ பிரதி பொலிஸ் மா அதிபராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். இதன்படி, குற்றப் பிரிவில் கடமையாற்றுவதற்கு மேலதிகமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நிஹால் தல்துவ தொடர்ந்தும் பணியாற்றுவார். பதில் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கடிதத்தின்படி, ...

மேலும்..