இலங்கை செய்திகள்

அதிக வீசா கட்டணம் அறவிடும் நாடக பதிவான இலங்கை

புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் கடிதம் ஒன்றைக் அனுப்பி சுட்டிக்காட்டியுள்ளனர்.இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க ...

மேலும்..

2022ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் வெளியீடு

2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சையின் மீள் மதிப்பீட்டு பெறுபேறுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டுள்ளன. மீள் மதிப்பீட்டுக்காக 49,312 பரீட்சார்த்திகள் விண்ணப்பித்துள்ளதாகவும், 250,311 விடைத்தாள்கள் மீள் மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான http://www.doenets.lkஅல்லதுhttp://www.results.exams.gov.lk மூலம் பெறுபேறுகளை ...

மேலும்..

மாணவர்களை ஈர்க்குமாறால் தாக்கிய பிக்கு

வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் குறித்த விகாரையின் விகாராதிபதி கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத ...

மேலும்..

ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவளிப்பேன் – இராஜாங்க அமைச்சர் லோகன்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர், லோகன் ரத்வத்தே, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு இயன்றவரை ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளார். பொலன்னறுவை மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்ற மகாவலி குடியிருப்பாளர்களுக்கு உறுமய வேலைத்திட்டத்தின் கீழ் காணி உறுதிகள் வழங்கும் ...

மேலும்..

சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்ட மாடுகள் மீட்பு

யாழ் - நெடுந்தீவில் சட்டவிரோதமான முறையில் கொண்டுசெல்லப்பட்டு மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. யாழ் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இன்று ஒரே நாளில் இரண்டாவது இடத்தில் மாடுகள் மீட்கப்பட்டுள்ளது. நெடுந்தீவில் இருந்து முறைகேடாக மாடுகள் கொண்டு வரப்படுவதாக கிடைத்த தகவலை அடுத்து ...

மேலும்..

நெடுந்தீவில் இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறி 

நெடுந்தீவு பிரதேச இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி இலங்கை சமுத்திரவியல் பல்கலைகழகத்தின் நீச்சல் பயிற்சிநெறியினை நெடுந்தீவு பிரதேசத்தில் நடாத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறித்த பயிற்சி 18 நாட்களை கொண்டதாக உள்ளதுடன் இதன்போது பங்குபற்ற விரும்புவர்கள் தமது விபரங்களை எதிர்வரும் மே 06 திகதிக்கு ...

மேலும்..

கல்முனையில் பெண்களுக்கான தலைமைத்துவ பயிற்சி

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவிற்க்குட்பட்ட பெண்களுக்கு தலைமைத்துவ பயிற்சி ஒன்று கல்முனை வடக்கு பிரதேச செயலக கேட்போர்கூடத்தில் இன்று இடம்பெற்றது. தேசிய இனங்களுக்கிடையிலான நட்பு ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த தலைமைத்துவ பயிற்சி பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் முரசொலிமாறன் ...

மேலும்..

பொது மன்னிப்பில் விடுதலையான 44 இலங்கையர்கள்

வெவ்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் ஐக்கிய அரபு இராச்சியத்தின் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 44 இலங்கையர்களுக்கு பொது மன்னிப்பின் கீழ் விடுதலை வழங்கப்பட்டுள்ளது. புனித நோன்பு பெருநாளை முன்னிட்டு, அரச உத்தரவின் பேரில் குறித்த இலங்கையர்கள் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அபுதாபியில் உள்ள இலங்கைத் ...

மேலும்..

பொலிஸ் பொறுப்பதிகாரி மீது தாக்குதல்

பதியத்தலாவ பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி தாக்குதல் ஒன்றில் காயமடைந்த நிலையில் பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பெண் ஒருவருடன் திருமணத்துக்கு அப்பாலான தொடர்பினை கொண்டிருந்தமையினால் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் ...

மேலும்..

ஈரானிய ஜனாதிபதியின் உரைக்கு எதிர்ப்பு வெளியிட்ட முஸ்லிம் பெண்கள் அமைப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஈரானிய ஜனாதிபதி செயிட் இப்ராஹிம் ரைசி கொழும்பிலுள்ள முன்னணி பள்ளிவாசலில் உரையாற்றியபோது வெளியிட்டதாக கூறப்படும் வெறுக்கத்தக்க வார்த்தைப் பிரயோகம் குறித்து மனித உரிமைகள் ஆர்வலரான பெண் ஒருவர் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இலங்கை-அமெரிக்க முஸ்லிம் பெண்கள் நம்பிக்கை மற்றும் ...

மேலும்..

வெப்பத்தில் வெடித்து சிதறிய கைதொலைபேசி

ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது. சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வாகனம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிக வெப்பத்தால் குறித்த தீ பிடிப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.  

மேலும்..

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய் மூலம் எண்ணெய் – திட்டம் விரைவில்

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நிலத்தடி குழாய்கள் மூலமாக எண்ணெய் வழங்கும் திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தெரிவித்துள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோர் ஒன்றிணைந்து இன்று திருகோணமலை ...

மேலும்..

அவசரமாக அவுஸ்திரேலியாவில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து லண்டன் நோக்கிப் பயணித்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் அவசர மருத்துவ உதவி காரணமாக ஆஸ்திரியாவின் வியன்னா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது. தரையிறங்கிய விமானம் மீண்டும் பயணிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளது. தனது பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு ...

மேலும்..

ஒலிபெருக்கிகள் சத்தத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை

வவுனியா மாவட்டத்தில் க. பொ. த சாதாரண பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் சமய வழிபாட்டுத் தளங்களிலும், பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது மாணவர்களுக்கு இடையூறாக இருப்பதாக சுகாதார பிரிவினர், நகரசபை, பொலிஸ் திணைக்களம், மாவட்ட செயலகம் ...

மேலும்..

புங்குடுதீவில் 60 மின்விளக்குகள் பொருத்தப்பட்டது

புங்குடுதீவில் 60 வீதி மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது. சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் ஏற்பாட்டில் புங்குடுதீவில் இருள் சூழ்ந்து காணப்பட்டிருந்த வீதிகளில் வேலணை மின்சார சபையினரால் 60 மின் விளக்குகள் பொருத்தப்பட்டன . அத்துடன் ஏற்கனவே கடந்தகாலங்களில் பொருத்தப்பட்டு பழுதடைந்து காணப்பட்டிருந்த முப்பது மின்விளக்குகளும் ...

மேலும்..