இலங்கை செய்திகள்

ப்ளூடூத் ஸ்பீக்கரில் பயணித்த ஐஸ் போதைப்பொருள்

ப்ளூடூத் ஸ்பீக்கரில் (Bluetooth speaker) மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்/ . கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவர் மட்டக்குளி பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் இவரிடமிருந்து ...

மேலும்..

அமெரிக்க டொலரில் ஏற்பட்ட மாற்றம்

கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில், இன்று  அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் ...

மேலும்..

மனித எலும்பு கூட்டு அகழ்வு பணிகள் நிறைவு

யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பாக இன்று காலை ஆரம்பிக்கப்பட்ட அகழ்வு பணிகள் மதியத்துடன் நிறைவுக்கு வந்தது. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு ...

மேலும்..

போலி தொலைபேசி அழைப்புகள் தொடர்பில் எச்சரிக்கை

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் தெரிவித்து வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் ...

மேலும்..

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமணம்

இரு மாகாணங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கமைய தென் மாகாண ஆளுநராக லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளார். அதேவேளை, வடமேல் மாகாண ஆளுநராக நஸீர் அஹமட் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

மேலும்..

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களால் இன்று தொழிற்சங்க போராட்டம்

அனைத்து பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களும் தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டத்தை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதற்கமைய இன்று நண்பகல் 12 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்படும் என அதன் இணைத் தலைவர் தம்மிக்க எஸ்.பிரியந்த குறிப்பிட்டுள்ளார்.கல்வி சாரா ஊழியர்களின் ...

மேலும்..

பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா?

எரிபொருள் விலை குறைப்புடன் பேருந்து கட்டணம் குறைக்கப்படுமா? இல்லை? என்பது தொடர்பில் இன்று அறிவிக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 30ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டதுடன், இதன்போது டீசலின் விலை 30 ...

மேலும்..

மே தினத்தில் உயர்த்தப்பட்ட சம்பளம் மறுநாள் முறியடிப்பு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை அதிகரிப்பதாக அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், தற்போதைக்கு அதனை நிறைவேற்ற முடியாது என இலங்கை பெருந்தோட்ட கம்பனிகள் சங்கம் தெரிவித்துள்ளது. உற்பத்திச் செலவு அதிகரிப்பால் சம்பளத்தை உயர்த்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதன் பேச்சாளர் ரொஷான் ராஜதுரை தெரிவித்துள்ளார். நிர்ணய சபையின் ...

மேலும்..

கிரிக்கெட் மட்டையால் சிறுவன் உயிரிழப்பு

இரு பாடசாலை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற வாக்குவாதத்தில் ஒரு மாணவர் மற்றைய மாணவனின் தலையில் கிரிக்கெட் மட்டையால் தாக்கியதில், தாக்கப்பட்ட மாணவன் உயிரிழந்துள்ளார். நாவலப்பிட்டி - மொன்டகிரிஸ்டோ பகுதியில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியின் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர் 13 வயதுடைய பாடசாலை மாணவர் ...

மேலும்..

புங்குடுதீவில் எலும்பு கூட்டு எச்சங்கள் – ஆரம்பமாகும் அகழ்வு பணிகள்

புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் நாளைய தினம் வியாழக்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் ...

மேலும்..

கிலோ கணக்கில் பீடி இலைகள் – நான்கு பேர் கைது

(கற்பிட்டி எம்.எச்.எம் சியாஜ் ) இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட 70 இலட்சம் ரூபா பெறுமதியான 1346 கிலோ பீடி இலைகளுடன் 4 சந்தேக நபர்கள் நேற்று (30) கைது செய்யப்பட்டுள்ளனர் . கற்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் ...

மேலும்..

தம்பலகாமம் படுகொலை தொடர்பில் 5 பொலிசாருக்கு ஆயுள்தண்டனை

தம்பலகாமம் பகுதியில் 01.02.1998ஆம் ஆண்டு 8 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர். இது தொடர்பான வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றில் நடைபெற்று பின்னர் கொழும்பு உயர் நீதிமன்றில் நடைபெற்றுவந்த இந்நிலையிலேயே குறித்த தீர்ப்பு தற்போது வழங்கப்பட்டுள்ளது. குறித்த படுகொலையுடன் தொடர்புபட்ட 5 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு ...

மேலும்..

காத்தான்குடியில் போதைப்பொருளுடன் மென்பான முகவர் கைது

மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் 14,570 மில்லி கிராம் ஐஸ் போதை பொருட்களுடன் இருவரை மட்டக்களப்பு குற்ற விசாரணை பிரிவினர் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜி. கஜநாயக்கா தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாவட்ட குற்ற விசாரணை பிரிவினருக்கு ...

மேலும்..

நாட்டின் பல பாகங்களில் வெப்பநிலை குறித்த எச்சரிக்கை

நாட்டின் வடக்கு, கிழக்கு வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கொழும்பு, கம்பஹா, ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். மேலும், “மத்திய, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களின் பல ...

மேலும்..

3 தனியார் பேரூந்துகளிற்கு ஆப்பு

வவுனியாவிலிருந்து சேவையில் ஈடுபடும் 3 தனியார் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டு அவைகள் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மூன்றுக்கு மேற்பட்ட விபத்துக்களை ஏற்படுத்தியமை, வீதியில் போட்டித்தன்மையில் பயணித்தமை போன்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இவ் பேரூந்துகளின் வழித்தட அனுமதிப்பத்திரங்கள் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளது. வடமாகாண ...

மேலும்..