இலங்கை செய்திகள்

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் உயர்வு

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும்  வௌியிடப்பட்டுள்ளது.

மேலும்..

பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

நபர் ஒருவரை கடத்தியதாக சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றையும் அது தொடர்பான சந்தேக நபர்களையும் கைது செய்வதற்கு பொதுமக்களின் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர். பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நபர் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் ...

மேலும்..

அஸ்வெசும கொடுப்பனவின் போலித்தகவல் கண்டறிய விஷேட வேலை திட்டம்

போலியான தகவல்களை வழங்கி அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவுகளை பெற்றுக் கொள்ளும் பயனாளிகளை கண்டறிவதற்காக விசேட வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பான சுற்றுநிருபம் அனைத்து மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும்  போலியான தகவல்களை வழங்கி ...

மேலும்..

 10 ஆயிரம் பொலிஸ் பாதுகாப்புடன் மே தினம்

மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்கள் காரணமாக கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 10 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும் மக்களை பேரணிகளுக்காக ...

மேலும்..

குறைக்கப்பட்ட சீமெந்து விலை

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் சீமெந்து விலையை குறைக்க சீமெந்து நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி 50 கிலோ கிராம் சீமெந்து மூட்டையின் விலையை 50 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விலை திருத்தத்தின் படி ஒரு சீமெந்து மூட்டை ஒன்றின் விலை ...

மேலும்..

சினோபெக் எரிபொருட்களின் புதிய விலைகள்

சினோபெக் நிறுவன எரிபொருட்களின் விலைகளில் திருத்தங்கள் மேற்கொண்டுள்ளது. நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் லங்கா ஐஓசி நிறுவனங்கள் தமது எரிபொருட்களின் விலைகளில் திருத்தத்தை மேற்கொண்டிருந்த நிலையில் சினோபெக் நிறுவனம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளது. இதற்கமைவாக கீழ் உள்ளவாறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும்..

ஜனாதிபதியின் மே தின செய்தி

உரிமைகள் மற்றும் கோரிக்கைகளுக்கான போராட்டத்தின் விளைவாக தொடங்கிய உலக தொழிலாளர் தினத்தின் 138 ஆவது வருடக் கொண்டாட்டத்தின் போது, ஒரு நாடாக நாம் ஒரு முக்கியமான கட்டத்தை எட்டியிருக்கிறோம். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி நாட்டை முன்னோக்கி கொண்டு செல்லும் சவாலை முறியடிக்க வேண்டிய ...

மேலும்..

அனைத்து குற்றச்சாட்டில் இருந்தும் விடுதலையான மஹிந்தானந்த

அமைச்சராக பணியாற்றிய போது சட்டவிரோதமாக சம்பாதித்த சுமார் 27 மில்லியன் ரூபாவுக்கு கொழும்பு கின்சி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை ...

மேலும்..

தேர்தல் தொடர்பில் வாக்காளர்களுக்கு விஷேட அறிவிப்பு

வாக்காளர் பதிவு விபரங்கள் தொடர்பாக தேர்தல் ஆணைக்குழு விசேட அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. 31.01.2007க்கு முன் பிறந்த பிரஜைகள் , வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என, உடனடியாக கிராம உத்தியோகத்தரிடம் விசாரிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இல்லையெனில், http://ec.lk/vrd என்ற இணையத்தளத்திற்குச் சென்று தங்களின் விபரங்கள் சரியாக ...

மேலும்..

மர்மமான முறையில் கொல்லப்பட்ட சட்டத்தரணி

வீடொன்றில் தனியாக வசித்து வந்த திருமணமாகாத பெண் ஒருவரை படுக்கையறையில் வைத்து மர்மமான முறையில் படுகொலை செய்து சொத்துக்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கொஹுவல பொலிஸார் தெரிவித்திள்ளனர். தெஹிவளை, களுபோவில வீதியில் வசித்து வந்த 64 வயதுடைய சட்டத்தரணி ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட ...

மேலும்..

நீதியமைச்சருக்கு எச்சரிக்கை விடுத்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா

“சுதந்திர கட்சியை சீரழித்த மைத்திரிபால சிறிசேனவுடன் ஒன்றிணைந்துள்ள நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தனது நற்பெயரை இல்லாதொழித்துக் கொள்ள கூடாது என்பதை மாத்திரம் குறிப்பிட்டுக் கொள்ள விரும்புகிறேன்” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள இலங்கை மன்றக் கல்லூரியில் ...

மேலும்..

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் இரா.சாணக்கியனுக்கும் இடையில் விஷேட சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகருக்கும் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பானது நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட ...

மேலும்..

பரீட்சை முடியும் வரை பல்வேறு தடைகள்

நடைபெறவுள்ள க. பொ. த சாதாரண தரப் பரீட்சை தொடர்பான கருத்தரங்குகள், செயலமர்வு என்பவற்றை நடத்துவதற்கு இன்று நள்ளிரவு முதல் தடை விதிக்கப்படவுள்ளது. குறித்த பரீட்சை நிறைவடையும் வரை இந்த தடை அமுலில் இருக்கும் என இலங்கை பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. க. பொ. ...

மேலும்..

மருத்துவ பீடத்தை நிறுத்த கோரி பல்கலைக்கழக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள மருத்துவ பீடத்தை நிறுத்துமாறு கோரி, சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அதில் பங்கேற்ற மாணவர்கள் தீப்பந்தம் ஏந்தி, தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். மாணவர்கள் குறித்த பல்கலைக்கழகத்தின் முன்பாக ...

மேலும்..

மறக்க முடியாத சம்பவத்தை பகிர்ந்த குசல் மெண்டிஸ்

2017ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடரின் போது இந்தியாவுக்கு எதிரான போட்டி தான் விளையாடிய சிறந்த போட்டி என இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் தெரிவித்துள்ளார். இலங்கையின் பிரபல ஊடக உரையாடல் நிகழ்ச்சியில் நேற்று ...

மேலும்..