இலங்கை செய்திகள்

மே 18 வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க தீர்மானம்

இந்த வருடத்தில் இருந்து மே 18 இனப்படுகொலை வாரத்தை புதிய பரிணாமத்தில் முன்னெடுக்க வேண்டும், முள்ளிவாய்க்கால் நினைவேந்தலின் 15 ஆவது ஆண்டை பரவலாக மக்கள் மயப்படுத்த வேண்டும் என யாழில் சிவில் அமைப்புக்கள் கூடி ஆராய்ந்துள்ளன. யாழ்ப்பாணம் புனித தெரேசா தேவாலய முன்றலில் ...

மேலும்..

அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகளால் இலங்கை குருமார்களுக்கு ஆசீர்வாதம்

முன்னாள் பிரிடிஷ் யூரோப்பியன் கவுன்சில் பாராளுமன்றத்திற்கான முன்னாள் இலங்கைக்கான சிறப்பு தூதர் தக்கூர் நிரஞ்சன் தேவா ஆதித்யா அவர்களின் ஏற்பாட்டில் அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் மூத்த சுவாமிகள் கோவிந் தேவ் கிரிஜி மகாராஜ் அவர்கள் ஹோட்டல் கிங்ஸ்பரியில் சர்வமத தலைவர்கள் ...

மேலும்..

ஈஸ்டர் தாக்குதலின் பின்புலத்தில் ராஜபக்ஷக்கள் – இரா.சாணக்கியன்

இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டபோது சர்வதேச விசாரணைக்கு தயார் எனக் கூறியவர் இன்று 300 கணக்கான மக்கள் கொல்லப்பட்டதற்கு ஒரு சர்வதேச விசாரணையை செய்வதற்கு தயங்குகின்றார் என்றால் ஈஸ்டர் குண்டுவெடிப்பிற்குப் பின்புலத்தில் ராஜபக்ஷ குடும்பத்தினர் இருந்திருக்கலாம் என்ற சந்தேகத்தை இன்னும் உறுதிப்படுத்துகின்றது என ...

மேலும்..

தியத்தலாவை விபத்து தொடர்பில் இருவர் கைது

தியத்தலாவை  நரியாகந்தை ஓட்டப் பந்தய திடலில் இடம்பெற்ற Fox Hill Super Cross 2024’ கார் ஓட்ட பந்தயத்தில் ஏற்பட்ட விபத்து தொடர்பில் இரு போட்டியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களும் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆபத்தான  முறையில் ...

மேலும்..

மாணவர்களுக்கான அரிசி விநியோகம் இடைநிறுத்தம்

பாடசாலை மாணவர்களுக்கு விநியோகிப்பதற்காக வெயாங்கொடை பிரதேசத்தில் உள்ள அரச உணவுக் களஞ்சியசாலையில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள அரிசி தரமற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. பூச்சி சேதம் காரணமாக குறித்த அரிசி பாவனைக்கு தகுதியற்றதாக மாறியுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் ...

மேலும்..

தியத்தலாவை விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு

தியத்தலாவையில் இன்று இடம்பெற்ற ‘Fox Hill Super Cross 2024’ கார் பந்தய விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த மேலும் 20 பேர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்தூவ தெரிவித்தார். பந்தயத்தில் ...

மேலும்..

கல்முனையில் 28வது நாளாக தொடர் போராட்டம் – தீர்வு கிட்டுமா ?

(கஜனா சந்திரபோஸ்) அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப்பெற்ற பிரதேச செயலக பிரிவுகளை வர்த்தமானிபடுத்த வேண்டிய பொறுப்பு உள்நாட்டில் உள்ள அமைச்சுக்கு உரித்துடையது எனவும் நடைமுறையில் இது மாறுபட்ட விடயமாக காணப்படுவதாகவும் உடனடியாக அமைச்சரவை தீர்மானத்தை வர்த்தமானி படுத்த வேண்டும் எனவும் கல்முனை வடக்கு பிரதேச ...

மேலும்..

மூடப்படும் மதுபானசாலைகள்

இலங்கையில் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கமைய ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படவுள்ளன. மேலும் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையான காலப்பகுதி வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த ...

மேலும்..

யாரையும் கைவிடப்போவதில்லை – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தையும் மக்களையும் வலுப்படுத்தும் வேலைத்திட்டத்தில் அரசாங்கம் யாரையும் கடந்து செல்லவோ விட்டுவிடவோ போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் பாகுபாடின்றி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எனவே நாட்டின் வளர்ச்சியடைந்து வரும் பொருளாதாரத்தின் நன்மைகள் அனைவருக்கும் ...

மேலும்..

பதவியை இராஜினாமா செய்த தென்மாகாண ஆளுநர்

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளித்துள்ளார். மே மாதம் 02 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனது இராஜினாமா கடிதத்தை அவர் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும்..

பா.உ வேலுகுமாரை தாக்க முயற்சி

பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமாரை தாக்க இ.தொ.க உப தலைவர் செல்லமுத்துவின் அடியாட்கள் முயற்சித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது. புசல்லாவை அருள்மிகு ஸ்ரீ மஹா கணபதி ஆலயத்தின் அடிக்கல் நாட்டு விழா இன்று (21) காலை ...

மேலும்..

யாழில் வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி

யாழ் -  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலை அபிவிருத்திப்பணிக்கான நடைபவனி இன்று  நடைபெற்றது. ஊர்காவற்றுறை வைத்தியசாலை நோயாளர் விடுதி ஒன்றை கட்டுவதற்கான நன்கொடைகளை கொடையாளிகளிடமிருந்து பெற்றுவதற்கான விழிப்புணர்வின் நிமித்தமும் மக்களுக்கான சுகாதாரம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த நடைபவனி இடம்பெற்றது. ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையும் யாழ். ...

மேலும்..

பிரதான போதைப்பொருள் வர்த்தகரின் உதவியாளர் கைது

போதைப்பொருள் வர்த்தகரான "பயாகல தோரா"வின் பிரதான உதவியாளரான "பயாகல சுட்டு" பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை பயாகல - கலமுல்ல பகுதியில் வைத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன்போது அவரது உள்ளாடையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 ...

மேலும்..

ஸ்ரீலங்கன் விமான சேவையின் பயணப் பாதைகளில் மாற்றம்

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் நிலவும் போர் பதற்றம் காரணமாக முன்னெச்சரிக்கையாக ஸ்ரீலங்கன் விமான சேவை தமது விமானப் பயணப் பாதைகளை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கமைய ஐரோப்பிய நாடுகளுக்கான விமான நேரங்கள் மாற்றப்பட்டுள்ளன. லண்டன் செல்லும் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னதாக ...

மேலும்..

நாட்டில் 40,000 ஆசிரியர் பற்றாக்குறை -நிவர்த்தி செய்யுமாறு கோரிய ஸ்டாலின்

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். மேல், கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை ...

மேலும்..