இலங்கை செய்திகள்

யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட யாழ் ஏ-9 வீதியின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளது. நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஓமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நொச்சிமோட்டை பாலத்திற்கு அருகாமையில் உள்ள வீதியும் ஓமந்தை நகருக்கு அண்மித்த வீதியும் முற்றாக நீரில் மூழ்கியிருந்த நிலையில், ...

மேலும்..

உயர்தரப்பரீட்சை மீண்டும் ஒத்திவைப்பு

சீரற்ற வானிலை காரணமாக கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சை மேலும் மூன்று நாட்கள் பிற்போடப்படுவதாக பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது. அதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம் திகதி புதன்கிழமை மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

மேலும்..

வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 7 உடல்கள் இதுவரை மீட்பு

வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்ட உழவு இயந்திரத்தில் இருந்து காணாமல் போனவர்களில் இதுவரை 07 ஜனாஸாக்கள் மீட்கப்பட்டுள்ளன. அம்பாறை மாவட்டம் காரைதீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவடிப்பள்ளி சின்னப்பாலம் அருகே உழவு இயந்திரத்தின் ஊடாக சம்மாந்துறை பிரதேசத்திற்கு விடுமுறைக்கு வீடு திரும்பிக்கொண்டிருந்த மதரஸா ...

மேலும்..

திருகோணமலைக்கு அருகே 190 KM தொலைவில் நிலைகொண்டுள்ள பெங்கால் (Fengal) புயல்..!

தென்மேற்கு வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை நவம்பர் 26, 2024 அன்று இரவு 11.30 மணியளவில் திருகோணமலைக்கு தென்கிழக்கே சுமார் 190 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டது. இது இன்று (நவம்பர் 27) மேலும் தீவிரமடைந்து நாட்டின் கிழக்கு ...

மேலும்..

சீரற்ற காலநிலையால் ஒருவர் மரணம் 77,670 பேர் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக 15 மாவட்டங்களில் 22,532 குடும்பங்களைச் சேர்ந்த 77,670 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஒருவர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அத்தோடு, 821 குடும்பங்களைச் சேர்ந்த 2,770 பேர் ...

மேலும்..

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஜப்பானின் நரிட்டா, டுபாய் மற்றும் சென்னையிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகைதந்த 3 விமானங்கள் இந்தியாவிற்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. இந்த மூன்று விமானங்களும் இன்று பிற்பகல் கட்டநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் அதற்கமைய, ...

மேலும்..

தீவிரம் அடையும் சூராவளி…!!

வங்காள விரிகுடாவில் உருவாக்கியுள்ள புயல் மேலும் தீவிரம் அடைந்து கிழக்கு மாகான கரையோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தற்பொழுது உள்ள நிலவரப்படி இப்புயலானது திங்கள் கிழமை அதிகாலை 2 மணியளவில் கல்முனை, மட்டகளப்பு பிரதேச அருகாமையில் நகர்ந்து செல்லவுள்ளது. தற்போது நகர்ந்து வரும் ...

மேலும்..

மீன்பிடி படகில் 344kg ஐஸ் 124kgகொக்கெய்ன் மாலைதீவில் கைதான இலங்கையர்கள்

இலங்கை மீன்பிடி படகொன்றில் 344kg ஐஸ் மற்றும் 124kg கொக்கெய்ன் போதைப்பொருளுடன் 5 இலங்கையர்கள் மாலைதீவு கரையோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.ரூ. இதன் பெறுமதி 370 கோடிக்கும் அதிக தெரு மதிப்பாகும் இலங்கை கடற்படைக்கும் மாலைதீவு கடலோரக் காவல்படைக்கும் இடையிலான வெற்றிகரமான புலனாய்வுப் ...

மேலும்..

ரூ.1 கோடியே 40 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணத்துடன் இருவர் கைது

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ரூ.1 கோடியே 40 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.   கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய ...

மேலும்..

A/L பரீட்சையில் தொலைபேசி பாவனைக்கு கட்டுப்பாடு ஆசிரியர்களும் பயன்படுத்த முடியாது!

2024 க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சைகளின் போது கண்காணிப்பாளர்கள் மாத்திரமே பரீட்சை நிலையங்களில் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள பரீட்சைகள் ஆணையளார் அமித் ஜயசுந்தர, உதவி அதிபர்கள் அல்லது ஊழியர்கள் இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் ...

மேலும்..

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை ஒக்டோபர் 04 இல்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. உயிர்த்த ஞாயிறு தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்களை இலக்கு வைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியது தொடர்பாக 25 சந்தேக நபர்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒக்டோபர் 04 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிமன்றம் ...

மேலும்..

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதி

வடக்கில் உள்ள மக்கள் மாவீரர் நாளை அனுஷ்டிக்க அனுமதித்துள்ள போதிலும், தடை செய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகள் தொடர்பான இலச்சினைகள், சீருடைகள், படங்கள் போன்றவற்றை காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் உள்நாட்டுப் போரின் போது உயிரிழந்த தமது உறவுகளை நினைவு கூருவதை அரசாங்கம் தடுக்காது என அமைச்சர் ...

மேலும்..

கோடி ரூபா பெறுமதியான அரியவகை மருத்துவ மீன் விற்பனைக்கு

ஆழ்கடலில் அரிதாக கிடைக்ககூடிய நீலக்கிளவல்லா அல்லது நீலதூனா என்றழைக்கப்படும் மருத்துவ குணம் நிறைந்த மின் வகை கிழக்கிலங்கையின் காரைதீவு மீனவர்களிடம் சிக்கியுள்ளது. காரைதீவு மீனவர்களின் தூண்டிலில் சுமார் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான 49 கிலோ எடையுள்ள நீல தூனா அல்லது உள்ளூரில் நீல ...

மேலும்..

காத்தான்குடியில் பாலஸ்தீன விடுதலை மாநாடு

"வி ஆர் வன்" (We are One) அமைப்பினரால் மாபெரும் பாலஸ்தீன விடுதலை மாநாடு ஒன்று நடாத்தப்படவுள்ளது. இதற்கமைய காத்தான்குடி ஹிஸ்புல்லா கலாச்சார மண்டபத்தில் மாலை 7:30 மணியளவில் குறித்த மாநாடு முன்னெடுக்கவுள்ளனர். இதன்போது சமூக ஆர்வலர்கள், புத்திஜீவிகள் மற்றும் அரசியல்வாதிகளும் கலந்து கொண்டு ...

மேலும்..

மட்டக்களப்பில் தமிழர் பிரதேசத்தில் மேலுமொரு ஆக்கிரமிப்பு விகாரை ?

தமிழர் பிரதேசத்தில் யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு அடுத்ததாக தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்துவருகின்ற மட்டக்களப்பு மாவட்டத்தினை சிங்கள மயமாக்கும் நோக்கத்தின் ஒரு அங்கமாக எல்லைக்கிராமமான கிரான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள வடமுனை கிராம சேவகர்பிரில் உள்ள நெலுகல் மலை எனப்படுகின்ற மலையில் மாவட்டத்தின் இரு ...

மேலும்..