இலங்கை செய்திகள்

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன் நியமிப்பு

இலங்கையின் முதலாவது விளையாட்டு ஒம்புட்ஸ்மன்னாக டபிள்யூ. ஏ.சூலானந்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இலங்கை நிர்வாக சேவையில் (ஓய்வு பெற்றவர்) சிறப்பு தரத்தில் தேர்ச்சி பெற்றவர் என்று விளையாட்டு அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம் ...

மேலும்..

மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா மூலம் பெண் முயற்சியாளர்களுக்கு உதவி

நாட்டின் பல பாகங்களிலுமுள்ள பெண் ஒப்பனை கலைஞர்கள் மற்றும் சிறு கைத்தொழில் செய்யும் பெண்களை இணங்கண்டு அவர்களின் முன்னேற்றத்திற்காக "மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிளப் ஒப் லங்கா" (Makeup Artist clup of lanka) மூலம் பல்வேறு உதவிகளை செய்யவுள்ளதாக அதன் தலைவி ...

மேலும்..

க.பொ.த உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பிலான அறிவிப்பு

கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்குரிய இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பரீட்சைகள் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு ...

மேலும்..

ஓடிக்கொண்டிருந்த பேருந்து ஓட்டுநர் இருக்கையில் இறப்பு 

நுவரெலியாவிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிச் சென்ற நாவலப்பிட்டி  இலங்கை போக்குவரது சபைக்கு சொந்தமான பேருந்தின் சாரதி சாரதி ஆசனத்தில் அமர்ந்த நிலையிலேயே உயிரிழந்ததாகவும், பஸ் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாகவும் லிதுல பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாவலப்பிட்டி லங்காம டிப்போவில் பணியாற்றிய சுரங்க அருணசிறி அத்தநாயக்க ...

மேலும்..

நெடுந்தீவில் குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல்

குமுதினி படுகொலையின் 39ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றையதினம் (மே15) காலை முதல் நெடுந்தீவில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது. காலை 9.30 மணிக்கு மாவிலித்துறைமுகப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி வளாகத்தில் முதன்மை நினைவுச் சுடரினை 7 மாத பச்சிளம் குழந்தையை பறிகொடுத்து தானும் படுகாயம் ...

மேலும்..

கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தொடர்பில் ஜனாதிபதியுடன் விசேட கலந்துரையாடல்

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் அவரின் செயலாளர் ஆகியோருடன் கல்முனையிலிருந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தலைமையிலான குழுவினர் விசேட சந்திப்பு ஒன்றை மேற்கொண்டுள்ளனர். குறித்த சந்திப்பானது நேற்று (14)ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றுள்ளது. இதன்போது கல்முனை வடக்கு ...

மேலும்..

ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பதற்றமான சூழல் .

இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான பிரஜை சக்தி அமைப்பு இன்று  காலை ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது. போராட்டம் தொடங்கியதும் பொலிஸார் பதாதைகளை அகற்றியதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் அப்பகுதியில் பெரும் பதற்றமான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் ஆர்ப்பாட்டக்காரர்கள் ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி குறித்து அச்சம் தேவையில்லை

கொரோனா காலப் பகுதியில் அஸ்ட்ராசெனிகா (AstraZeneca) தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என தேசிய ஒளடத ஒழுங்குப்படுத்தல் அதிகார சபையின் தலைவர் விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கொன்றில் அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பக்க விளைவுகளை ...

மேலும்..

காரைதீவில் முன்னாள் தவிசாளர் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை அனுஸ்டிக்கும் பொருட்டு முள்ளிவாய்க்கால் நினைவுக் கஞ்சி வழங்கும் செயற்பாடு காரைதீவில் இன்று காலை இடம்பெற்றது. காரைதீவு பிரதேச சபை  முன்னாள் தவிசாளர் ஜெயசிறில் தலைமையில் குறித்த கஞ்சி வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டு காரைதீவு சந்தை ...

மேலும்..

ஓமந்தை இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டது.

கொரோனா காலப்பகுதியில் வவுனியா ஓமந்தை பகுதியில் அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச்சாவடி அகற்றப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து நாடாளாவிய ரீதியில் ஊரடங்குச்சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை உட்பட பல்வேறு பகுதிகளில் தற்காலிக இராணுவ சோதனைசாவடிகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புச் ...

மேலும்..

க.பொ.த தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய முதியவர்

தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் ஒருவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. பாணந்துறை - கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த நிமல் சில்வா என்ற முதியவரே  இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார். இவர் ஒரு ...

மேலும்..

பாண்டிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களுக்கு தடை உத்தரவு

கல்முனை பாண்டிருப்பு பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி தயாரிக்க முற்பட்டவர்களை தடுப்பதற்கு நூற்றுக்கணக்கான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். இன்று காலை 8.30 மணிக்கு இடம்பெற்றுள்ளதுடன் இச்சம்பவத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் மாவட்ட அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ...

மேலும்..

தீவக பாடசாலையில் மின்சார சிக்கல் – சட்டென தொலைபேசியை துண்டித்த வலய கல்வி பணிப்பாளர்.

தீவக பாடசாலையில் ஏழு மாதங்களாக மின்சாரம் இல்லை. ஏன் என வலய கல்வி பணிப்பாளரிடம் தொலைபேசிஊடக வினவியபோது தொலைபேசியை துண்டித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. யாழ் தீவக வலயத்திற்கு உற்பட்ட பாடசாலை ஒன்றின் மின்சாரம் துண்டிக்கப்பட்டு 7 மாதங்கள் கடந்த நிலையிலும் மின்சார ...

மேலும்..

தாமரைக் கோபுரத்தில் சாகசம் புரிந்தவர் வைத்தியசாலையில் அனுமதி

கொழும்பு தாமரைக் கோபுரத்தில் பராசூட் சாகசத்தின் போது வெளிநாட்டவர் ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று மதியம் அவர் தாமரை கோபுரத்தின் உச்சியில் இருந்து பாய்ந்த போது அவரது பராசூட்டை திறப்பதில் ஏற்பட்ட தாமதத்தால் குறித்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்த வெளிநாட்டவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ...

மேலும்..

குழந்தையின் உயிரை பறித்த கரட்

அநுராதபுரம் – சாலியவெவ பகுதியில் கரட் தொண்டையில் சிக்குண்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குழந்தையின் தாய், சமைப்பதற்காக கரட்டை துண்டுகளாக வெட்டி மேசை மீது வைத்துள்ள நிலையில் மேசையிலிருந்த கரட் துண்டொன்றை குறித்த குழந்தை உட்கொண்டுள்ளது. கரட் துண்டு குழந்தையின் ...

மேலும்..