இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4 ஆயிரம் ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவது ஏன்?
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சம் கோரும் இலங்கை மக்களை தடுக்கும் விதமாக இலங்கை மீன்பிடி படகுகளுக்கு 4,200 ஜி.பி.எஸ் கருவிகளை ஆஸ்திரேலிய அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.
இலங்கை தலைநகர் கொழும்புவில் கடற்தொழில் கண்காணிப்பு மையத்தை திறந்து வைத்த ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் கிளாரி ஓ’நீல் இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 5 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்பிலான கருவிகள் சுமார் 4 ஆயிரம் படகுகளுக்கு வழங்கப்படுவதன் மூலம் கண்காணிப்பு மையத்திலிருந்து படகு பயணிக்கும் இடம் கண்காணிக்கப்படும்.
கடல்சார் விழிப்புணர்வு, ஆட்கடத்தல் தடுப்பு, சட்டவிரோத அல்லது அறிவிக்கப்படாத மீன்பிடி செயல்கள், தீவிரவாத செயல்கள் தடுப்பு, குற்ற கும்பல்கள் படகுகளை பயன்படுத்துவதை தவிர்க்க இந்த கண்காணிப்பு அமைப்பு (monitoring system) இலங்கை அரசுக்கு உதவும் ...
மேலும்..