கொவிட்-19 நோய்த்தொற்றானது மானிலமெங்குமுள்ள பலருக்கும் குடும்பங்களுக்கும், குறிப்பாக மனநல பாதிப்புக்குள்ளானோர், சில பழக்கங்களுக்கு அடிமையானோர் போன்றோருக்கு பெரும் சவாலாக உள்ளது.
அதனாற்றான், இக் கொவிட்-19 நோய்த்தொற்றுக் காலத்தில் மக்களைக் கவனித்துக்கொள்வதற்கும், மனநல ஆரோக்கியம் மற்றும் சில பழக்க சூழ்நிலைக்கு ஆளானோர் போன்றவர்களுக்கான ஆதரவளித்தலுக்கும் வருடாந்தம் 176 மில்லியன் டொலர்களை அரசு வழங்குகிறது.
மேலதிகமான இந்நிதியானது மனநலம் மற்றும் சில பழக்கவழக்கங்களுக்கு அடிமையானோர் தொடர்பான உடனடித் தேவையை நிவர்த்தி செய்யவும், பின்வரும் துறைகளை மேம்படுத்தவும், அதிக தேவையுள்ள இடங்களுக்கான புதிய விரிவாக்கத் திட்டங்களுக்கும் உதவியாக அமையும். அவையாவன:
சிறுவர் மற்றும் இளையோருக்கான சேவைகள் உட்பட சமுக சேவைகள்;
உளநலம் மற்றும் நீதி சேவைகள்
வீடற்ற அல்லது வீடிழப்புக்கு ஆளாகக்கூடிய நிலையிலுள்ள அதிகமான மனநல பாதிப்புக்குள்ளானோர் மற்றும் போதைப் பழக்கங்களுக்கு அடிமையானோருக்கான வீடுகளை வழங்குதல்,
'ஓபியோய்ட்' எனப்படும் பழக்கத்துக்கு அடிமையானோருக்கான சேவை உள்ளிட்ட சமுகத்தில் உள்ள ஏனைய போதைப் பழக்கங்களுக்கான சேவை,
பூர்வகுடி மக்கள், அவர்களின் குடும்பங்கள் மற்றும் சமுகங்களுக்கான மேலதிக ஆதரவு,
மனநலம் பாதிப்புற்றோர் மற்றும் போதைகளுக்கு அடிமையானோருக்கான சிகிச்சைக்கென மேலதிக வைத்தியசாலைப் படுக்கைகளை ஒதுக்குதல்.
பெரியவர்களுக்கு:
(ConnexOntario for Adults)
1-866-531-2600
Connexontario.ca
15 வயதுக்கு மேற்பட்ட இளையோருக்கு:
(Bounce Back for 15+)
1-866-345-0224
Bouncebackontario.ca
15 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு:
(Kids Help Phone for under 15)
1-800-668-6868
Kidshelpphone.ca
உயர்பள்ளிக் கல்வியை நிறைவுசெய்த மாணவர்களுக்கு:
(Post Secondary Students)
1-866-925-5454
அல்லது குறுஞ்செய்தி அனுப்புவதற்கு (GOOD2TALKON) 686868
மேலும்..