உலகச் செய்திகள்

ரோஹிங்கியா இனப்படுகொலையை ஐ.நா. முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: மனித உரிமை அமைப்பின் கோரிக்கை…

மியான்மரில் நிகழும் ரோஹிங்கியா இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என ஐ.நா.விடம் கோரிக்கை விடுத்துள்ளது மலேசியாவில் இயங்கும் ரோஹிங்கியா மனித உரிமைகள் அமைப்பு. ஐ.நா. பொது சபையின் 75வது கூட்டத்தொடர் நடக்கும் சூழலில், இக்கோரிக்கையினை அந்த அமைப்பு முன்வைத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியம், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு, தென்கிழக்காசீய நாடுகளின் கூட்டமைப்பு, உலக நாடுகள் மற்றும் ஐ.நா. உள்ளிட்டவை ரோஹிங்கியா விவகாரம் குறித்த அழுத்தத்தை ஐ.நா. பொது சபை கூட்டத்தில் கொடுக்க வேண்டும் என இந்த மனித உரிமைப்பு முறையிட்டுள்ளது. 1. மியான்மரில் ரோஹிங்கியா இனத்தினர் மீதும் ...

மேலும்..

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை…

மியான்மர் நாட்டில் சிக்கி இருக்கின்ற தமிழக மீனவர்களை மீட்க வைகோ கோரிக்கை அயல் உறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்களுக்கு மறுமலர்ச்சி தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் நேற்று (25.09.2020) மின்னஞ்சலில் எழுதிய கடிதம்: “சென்னை கhசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, கடந்த ஜூலை 23 ...

மேலும்..

கொரோனா நோயாளர்கள் 3345ஆக அதிகரிப்பு!..

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 3 345ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திலிருந்து வருகைத்தந்த ...

மேலும்..

இறையாண்மை விதிவிலக்களிப்பு சட்டத்தை நீக்குக ! சிறிலங்கா தேசத்தை கனடா நீதிமன்றத்தில் நிறுத்துவோம் !! – நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிக்கை !

இலங்கைத்தீவில் சிங்கள ஆக்கிரமிப்பாளர்களால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழ்உறவுகளுக்கு நீதிவேண்டி நெடுநடைப் பயணம் மேற்கொண்டிருந்த டேவிட் தோமஸ், மகாஜெயம் மகாலிங்கம், விஜிதரன் வரதராஜா, யோகேந்திரன் வைசீகமகபதி, யோகேசுவரன் நடேசு, குலேந்திரசிகாமணி வேலுச்சாமி, விஜயகுமார் நமசிவாயகம் ஆகியோரது இனஉணர்வுக்கும், கடின உழைப்புக்கும், நெஞ்சுரத்துக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது தலைசாய்த்து மரியாதை வணகத்தினை தெரிவித்துக்க கொள்கின்றது ...

மேலும்..

தமிழகம் முழுவதும் 3 நாட்களில் 1.26 லட்சம் மரங்களை நடவு செய்த விவசாயிகள்!!!(PHOTOS)

மரம் தங்கசாமி ஐயாவின் நினைவு நாளை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் வெறும் மூன்றே நாட்களில் 1 லட்சத்து 26 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நட்டு ஆச்சரியப்படுத்தியுள்ளனர். தமிழக விவசாயிகள் மத்தியில் மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் ...

மேலும்..

விவசாயி மகன் ஜப்பான் பிரதமரானார்!!!!

ஜப்பானின் புதிய பிரதமராகயோஷிஹிடே சூகா தெரிவாகியுள்ளார். சுகாதார நிலைமையை கருத்திற்கொண்டு பிரதமர் பதவியிலிருந்து சின்ஷோ அபே அண்மையில் விலகியிருந்தார். இதனையடுத்து ஜப்பான் லிபரல் ஜனநாயகக் கட்சியின் தலைமை பொறுப்பினை ஏற்ற யோஷிஹிடே சூகா, தற்போது அடுத்த பிரதமராக தெரிவாகியிருக்கின்றார். 77 வயதுடைய இவர், முன்னாள் பிரதமர் ...

மேலும்..

கொரோனாவினால் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய 4 ஆயிரம் அகதிகளுக்கு அனுமதி மறுப்பு!!!

ஆஸ்திரேலியா அரசு மீண்டும் அகதிகள் திட்டத்தின் கீழ் நாட்டுக்குள் அகதிகளை அனுமதிக்க வேண்டும் என அகதிகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா பெருந்தொற்று சூழல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் சர்வதேச எல்லைகளை மூடிய ஆஸ்திரேலிய அரசு வெளிநாட்டினர் ...

மேலும்..

ஆஸ்திரேலியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள முஸ்லீம் அகதிகளுக்கு ஹலால் உணவு மறுக்கப்படுகின்றதா?

ஆஸ்திரேலிய அரசால் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களுக்கு கடந்த ஓராண்டுக்கு மேலாக அங்கீகாரம் பெற்ற ஹலால் உணவை வழங்கப்படுவதில்லை என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் ஆணையத்திடம் முஸ்லீம் அகதிகளும் தஞ்சக்கோரிக்கையாளர்களும் முறையிட்டுள்ளனர். நவுரு மற்றும் பப்பு நியூ கினியாவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த ...

மேலும்..

மத்திய கிழக்கிலிருந்து மேலும் 664 பேர் இன்று நாடு திரும்பினர்!!!

மத்திய கிழக்கு நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்களில் மேலும் 664 பேர் இன்று அதிகாலை கட்டுநாயக்க மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையங்களை வந்தடைந்துள்ளனர். கட்டாரின் டோஹாவிலிருந்து 81 பேரும், ஐக்கிய அரபு இராச்சியத்தின் துபாயிலிருந்து 293 பேரும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை ...

மேலும்..

இந்தோனேசியாவில் நூற்றுக்கணக்கான ரோஹிங்கியா அகதிகள் படகில் தஞ்சம் !!!

இந்தோனேசியாவின் ஏசெஹ் மாகாணத்தில் கடலில் 6 மாதங்களாக தத்தளித்து வந்ததாகக் கூறப்படும் சுமார் 300 ரோஹிங்கியா அகதிகள் தஞ்சமடைந்திருக்கின்றனர். ரோஹிங்கியா அகதிகள் சென்ற மரப்படகினை ஏசெஹ் மாகாணத்தில் உள்ள Lhokseumawe கடல் பகுதி அருகே உள்ளூர் மீனவர்கள் கண்டனர் என இந்தோனேசிய காவல்துறை தெரிவித்துள்ளது. பின்பு, ...

மேலும்..

தீக்குளித்து உயிரிழந்த ஆஸ்திரேலிய தடுப்பு முகாம் அகதிக்கு மனநலச் சிக்கல்: விசாரணையில் அம்பலம்?

ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த ஈரானிய அகதி தீக்குளிப்பதற்கு முன்பு உளவியல் ஆலோசகரை சந்திக்க எழுத்துப்பூர்வமாக அனுமதி கோரியதாக விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவரது கோரிக்கை தீக்குளிக்கும் நாள் வரை பரிசீலீக்கப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் Omid Masoumali எனும் 24வயது அகதி, நவுருத்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பில் பார்வையிட ...

மேலும்..

பெருகும் கொரோனா: மலேசியாவுக்குள் நுழைய இந்தியர்ளுக்கு தடை !!!

மலேசியாவில் கொரோனாவை பரவலைத் தடுக்கும் விதமாக, முன்னதாக செப்டம்பர் 7ம் தேதி முதல் மலேசியாவுக்குள் நுழைய  இந்தியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாட்டவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.  தற்போது இத்தடைப்பட்டியலில் அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், பிரேசில், ஸ்பெயின், இத்தாலி, சவுதி அரேபியா, ரஷ்யா, வங்கதேசம்  உள்ளிட்ட நாடுகளும் ...

மேலும்..

ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் ‘தடுப்பு மையங்களில் அலைப்பேசிகளுக்கு தடைவிதிக்கும் மசோதா’: வலுக்கும் எதிர்ப்பு?

ஆஸ்திரேலிய குடியேற்றத் தடுப்பு மையங்களில் வைக்கப்பட்டுள்ளவர்களிடமிருந்து அலைப்பேசிகளை பறிமுதல் செய்வது தொடர்பான மசோதா ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தினால் கருத்தில் கொள்ளப்பட இருக்கிறது. புலம்பெயர்வு சட்டத்தில் ஏற்படுத்தக்கூடிய இம்மாற்றம், குடியேற்றத் தடுப்பு முகாம்களில் அலைப்பேசிகளையும் சிம் கார்டுகளையும் தடை செய்வதற்கான அதிகாரத்தை ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ...

மேலும்..

இஸ்ரேல், நேபாளத்தில் சிக்கியிருந்த 229 பேர் இலங்கை திரும்பினர்!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக, இலங்கைக்கு வர முடியாமல் நேபாளம், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் சிக்கியிருந்த இலங்கையர்கள் குழுவொன்று நாட்டை வந்தடைந்துள்ளது. இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காகச் சென்றிருந்த 203 பேரை ஏற்றிய ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸிற்குச் சொந்தமான விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க சர்வதேச விமான ...

மேலும்..

ஆங்கில கால்வாய் வழியாக ஐக்கிய இராச்சியத்தை நோக்கி வரும் குடியேறிகள், அகதிகள்: ஆஸ்திரேலிய பாணியில் தடுக்க வலியுறுத்தல் ..

சட்டவிரோத பாதைகள் வழியாக குடியேறிகள் ஐக்கிய இராச்சியத்துக்குள் நுழைவதைத் தடுக்க ஆஸ்திரேலியாவின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டும் என ஐக்கிய இராச்சிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜேக்கப் யெங் தெரிவித்துள்ளார். ஐக்கிய இராச்சியத்துக்குள் வர முயலும் அதிகப்படியான சிறிய சட்டவிரோத படகுகளை தடுப்பதற்கு ஐக்கிய இராச்சிய உள்துறை செயலாளர் ப்ரீத்தி பட்டேல் எடுக்கும் முயற்சிகளை வரவேற்றுள்ள அவர், பிரான்சிலிருந்து ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் போலி தஞ்சக்கோரிக்கையாளர்களின் தஞ்சக்கோரிக்கையை நிராகரித்து அவர்களை உடனடியாக பிரான்சுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று தெரிவித்துள்ளார். “ஐக்கிய இராச்சியத்துக்குள் வரும் சிறிய படகுகள் சட்டவிரோதமானவை, ஏற்றுக்கொள்ள முடியாதவை, பாதுகாப்பற்றவை. சமீபத்தில், படகில் கடக்க முயன்றவர்கள் ...

மேலும்..