உலகச் செய்திகள்

ஆஸ்திரேலியாவில் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரம் விண்ணப்பங்கள்: 15 சதவீதமானோருக்கே விலக்களிப்பு.

கடந்த மார்ச் 20 முதல் ஜூலை 31 வரை ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய பயண விலக்குக்கோரி 87 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளதாக ஆஸ்திரேலிய எல்லைப்படை தெரிவித்துள்ளது. இதில் வெறும் 15 சதவீதமானோருக்கே ஆஸ்திரேலியாவுக்குள் நுழைவதற்கான பயண விலக்கு வழங்கப்பட்டுள்ளது. அதாவது, சமர்ப்பிக்கப்பட்ட 87,600 ...

மேலும்..

சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் நாளை முன்னிட்டு லண்டனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!

அனைத்துலக காணாமல் ஆக்கப்பட்டார் தினத்தினை முன்னிட்டு லண்டனில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது. குறித்த கவனயீர்ப்பு போராட்டமானது லண்டன் நகரில் அமைந்துள்ள என்ற இடத்தில் இன்று (30.08.2020) மதியம் 1.30 தொடக்கம் மாலை 3.00 மணிவரை இடம்பெற்றது நாடு கடந்த தமிழீழ அரசினால் ஏற்பாடு செய்யப்பட்ட ...

மேலும்..

இலங்கைக்கும் நீண்டது சீன -அமெரிக்க முறுகல்?

சீன நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க அரசாங்கம் தொடர்ச்சியாக நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில், இலங்கையில் கொழும்பு துறைமுக நகர நிர்மாணப்பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனம் உட்பட சீன 24 நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கா எடுத்துள்ள புதிய நடவடிக்கையின் இந்த சீன நிறுவனங்களுக்கு ...

மேலும்..

அமெரிக்காவில் ஜனாதிபதி வேட்பாளரான ஆசிய பெண்

அமெரிக்காவில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பிடன், செனட் உறுப்பினரான ஆசிய - அமெரிக்க பெண்ணான கமிலா ஹரிஸை தனது துணை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்துள்ளார். இந்திய - ஜமைக்கா பாரம்பரியத்தின் கலிபோர்னியா செனட்டராக கமிலா ஹரிஸ் நீண்ட காலமாக பணியாற்றி ...

மேலும்..

பெருகும் கொரோனா தொற்று: ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பில் உள்ள அகதிகளின் நிலை என்ன

பப்பு நியூ கினியா எனும் தீவு நாட்டில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் உள்ள அகதிகளின் பாதுகாப்பை ஆஸ்திரேலிய அரசு உறுதிச் செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய மனித உரிமைகள் சட்ட மையம் வலியுறுத்தியுள்ளது. பப்பு நியூ கினியாவில் கொரோனா தொற்று பரவினால் அது அந்நாட்டில் உள்ள சுகாதார கட்டமைப்பை சீர்குலைக்கூடும் என பப்பு நியூ கினியாவின் பெருந்தொற்று கட்டுப்பாட்டாளர் எச்சரித்துள்ள நிலையில் அங்குள்ள அகதிகளின் நிலைக்குறித்து அச்சம் எழுந்துள்ளது. தற்போதைய நிலையில், பப்பு நியூ கினியாவில் உள்ள ஆஸ்திரேலிய முகாமில் 175 அகதிகளும் நவுருத்தீவு முகாமில் 185 அகதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர். கடந்த இரு வாரங்களாக, அகதிகள் வைக்கப்பட்டுள்ள பப்பு நியூ கினியாவின் தலைநகரான Port Moresby-ல் வேகமாக கொரோனா தொற்று பரவி வருகின்றது. முன்னதாக, கொரோனா பரவலை பப்பு நியூ கினியாவின் சுகாதார கட்டமைப்பைக் கொண்டு கையாள்வது போராட்டம் மிகுந்ததாக இருக்கும் என பப்பு நியூ கினியா பிரதமர் ஜேம்ஸ் மராபே எச்சரித்திருந்தார். பல ஆண்டுகள் தடுப்பில் கழித்த நாங்கள் கொரோனா தொற்றால் எளிதாகப் ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்…

செப்டம்பரில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி பள்ளிகளை பாதுகாப்பாக மீளத் திறப்பதற்கான எமது அரசாங்கத்தின் திட்டத்தை முதல்வர் டக் போர்ட்டும் அமைச்சர் லெச்சேயும் அறிவித்தனர். முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வளங்களை பள்ளிகளுக்கு வழங்கும் இத்திட்டத்தில் மாணவர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மானிலத்திலுள்ள பொது நிதியுதவி பெறும் அனைத்து ஆரம்ப நிலைப் பள்ளிகளும் வாரத்தில் ஐந்து நாட்களுக்கு மானிலத்தில் மீண்டும் திறக்கப்படும். பெரும்பாலான உயர்பள்ளிகள் பகுதிநேர மாதிரியைத் தழுவி ஆரம்பிக்கப்படும். சராசரி 15 மாணவர்களைக் கொண்ட வகுப்புகளில், பள்ளி நாட்களில் குறைந்தபட்சம் பாதி நாட்கள் மாணவர்கள் சமூகமளித்திருத்தல் வேண்டும். குறைந்த ஆபத்து உள்ள உயர்பள்ளிகள் வாரத்தில் ஐந்து நாட்கள் மீண்டும் திறக்கப்படும். எப்போதும் எமது அரசாங்கம் பெற்றோரின் தேர்வுக்கு முன்னுரிமை அளிப்பதால், பெற்றோர்களே தங்கள் குழந்தைகள் நேரில் பள்ளி செல்வதா இல்லையா என்ற முடிவை எடுக்கும் அதிகாரம் உடையவர்கள் ஆவர். செப்டம்பரில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதற்கு ஆதரவாகவும் ஒன்ராறியோவின் இரண்டு மில்லியன் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை மேம்படுத்தவும் அரசாங்கம் 300 மில்லியன் டொலர்களை முதலீடு செய்கிறது

மேலும்..

10 ஆயிரம் இலங்கையர் வேலை இழப்பு; நிர்க்கதியானோரை அழைத்துவர முடிவு…

மத்திய கிழக்கு உள்ளிட்ட நாடுகளிலுள்ள இலங்கையர்களில் சுமார் 10 ஆயிரம் பேர் வேலைவாய்ப்புகளை இழந்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதி பொது முகாமையாளரும் ஊடகப் பேச்சாளருமான மங்கள ரன்தெனிய தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- "கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட முடக்க ...

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்கின்றன…

ஒன்ராறியோ சுகாதார தலைமை அதிகாரியுடன் எமது அரசாங்கம் மேற்கொண்ட ஆலோசனைக்கிணங்க, எதிர்வரும் வெள்ளிக்கிழமை, ஜூலை 31ஆம் திகதியன்று, ரொறன்ரோ நகரமும் பீல் பிராந்தியமும் மூன்றாம் கட்டத்துக்கு நகர்வதென முடிவெடுக்கப்பட்டுள்து. ஒன்ராறியோ மானிலத்தில் மேலும் பல வணிக மற்றும் பொது இடங்களைத் திறந்து வைக்கும் மேற்படி முடிவானது, இப்பகுதிகளின் சுகாதார தரவுகளின்படி குறைவான நோய்ப்பரம்பல், நோய்த்தொற்றை சமாளிக்க போதியளவு வைத்தியசாலை மற்றும் சுகாதார வசதிகள், அதிகரிக்கப்பட்டுள்ள மருத்துவ சோதனைகள் போன்றவற்றை அடிப்படையாக் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீளத் திறந்து வைப்பதன் மூன்றாம் கட்ட விதிமுறைகளின்படி, அடுத்த கட்டத்துக்குள் நகரும் ஒன்ராறியோவின் பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடும்போது கடைப்பிடிக்க வேண்டியவை பின்வருமாறு அமையும்: உள்ளக ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 50 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது. வெளியரங்க ஒன்றுகூடல்களின்போதான வரையறை அதிகப்படியாக 100 பேர் வரை அதிகரிக்கப்படுகிறது. ஒன்றுகூடுபவர்களின் எண்ணிக்கை தனிமனித இடைவெளி விதிமுறைக்ளுக்கு அமைவாக இருத்தல் வேண்டும். விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர்.

மேலும்..

விஜய் தணிகாசலம், மானில சட்டமன்ற உறுப்பினர் | யோர்க் பல்கலைக்கழகம் மார்க்கம்…

பொது நிதி உதிவியின் கீழ் யோர்க் பிராந்தியத்தில் அமையவிருக்கும் முதலாவது பல்கலைக்கழகமான யோர்க் பல்கலைக் கழகத்தின் மார்க்கம் மத்திய பல்கலைக்கழக வளாகத்துக்கான (Markham Centre Campus) திட்டத்தை ஆதரப்பதில் ஒன்ராறியோ அரசு பெருமை கொள்கிறது. யோர்க் பிராந்தியத்தில் அதிகரித்துவரும் உயர்பளளிக் கல்விக்குப் ...

மேலும்..

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை குறித்து ட்ரம்ப்- புடின் பேச்சு!

ஆயுதக் கட்டுப்பாடு, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை ஆகியவை குறித்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் ஆகிய இருவரும், தொலைபேசியில் உரையாடியுள்ளனர். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கான பொறுப்பு, அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு ...

மேலும்..

ஜூலை கலவரத்தை நினைவுபடுத்தியும் நீதிகோரியும் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம்…

இலங்கை அரசினால் 1983 ஜூலை 23ஆம் திகதி திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட தமிழின அழிப்புக்கு எதிரான தினத்தை நினைவூட்டும் முகமாகவும் மற்றும் தொடர்ச்சியான தமிழின அழிப்புக்குமான கண்டனத்தை இலங்கை அரசாங்கத்துக்கு தெரிவிக்கும் வகையில் பிரித்தானியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது. பிரித்தானியாவின் ஹைட்பார்க் கார்டன்ஸ், ...

மேலும்..

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு லண்டன் வழங்கிய உலக மகா விருது…

உலக அளவிலான கொரோனா களத் தொண்டில் சிறந்தப் பங்களிப்பை வழங்கிய கடல் கடந்தத் தன்னார்வத் தொண்டு நிறுவனமான குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு, லண்டன் தொண்டு இயக்கம் சர்வதேச மனித நேய விருதளித்துக் கௌரவித்துள்ளது. சர்வதேச அளவில் நலப்பணிகளை ஊக்குவிக்கும் தன்னார்வத் ...

மேலும்..

கந்தளாய் பகுதியைச் சேர்ந்த ஒருவர் சவூதியில் மரணம்…

திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பகுதியைச் நபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக சவூதி அரேபியாவில் இன்று(29)  உயிரிழந்துள்ளதாக சவூதி அரேபியாவிலுள்ள இலங்கை தூதரம் ஊடாக உயிரிழந்துள்ள நபரின் மனைவிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கந்தளாய், பேராறு பகுதியைச் சேர்ந்த அப்துல் ஹையூன் 53 வயதுடைய ஒருவரே சவூதியில் ...

மேலும்..

வழமைக்கு திரும்ப தயாராகும் மெக்ஸிகோ சிட்டி!

மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில், கார் போக்குவரத்து மற்றும் பொது போக்குவரத்து மீதான கட்டுப்பாடுகள் அடுத்த வாரம் நீக்கப்படுகின்றது. அத்துடன், 340,000 தொழிற்சாலை தொழிலாளர்கள் கடுமையான சுகாதார நிலைமைகளின் கீழ் பணிக்கு திரும்ப அனுமதிக்கப்படுகின்றனர். இதேவேளை, வீதிச் சந்தைகள், வணிக வாளகங்கள், உணவகங்கள் மற்றும் ...

மேலும்..

கனடாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொவிட்-19 தொற்றால் 405பேர் பாதிப்பு- 34பேர் உயிரிழப்பு!

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 405பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 34பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஒட்டுமொத்தமாக 97,530 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 7,994பேர் மொத்தமாக ...

மேலும்..