உலகச் செய்திகள்

ஐரோப்பாவில், கொரோனாவிற்கான முதலாவது தடுப்பூசிப் பரிசோதனை, பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டது.

ஐரோப்பாவில், கொரோனா வைரஸிற்கான முதலாவது தடுப்பூசி பரிசோதனை பிரிட்டனில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வகையில் நேற்று வியாழக்கிழமை முதலாவது தடுப்பூசி முதல் நோயாளிகளுக்கு செலுத்தப்பட்டுள்ளது. ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இந்த சோதனையில், இரண்டு நோயாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதுடன் 800க்கு மேற்பட்டவர்கள் இந்த ஆரம்ப ...

மேலும்..

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பில் வெற்றியை நெருங்கிவிட்டோம் – ட்ரம்ப் உறுதி

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பு ஊசியை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ஏறக்குறைய வெற்றியை நெருங்கிவிட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகின் பல நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவில் பாரிய உயிரிழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கான ...

மேலும்..

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவுடன் கைகோர்க்கும் அவுஸ்ரேலியா – உலக சுகாதார நிறுவனத்துக்கு நேரடி அழைப்பு

கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைகளில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அனைத்து உறுப்பினர்களும் பங்கெடுக்க வேண்டுமென அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் உலகளாவிய ரீதியில் பாரிய சேதங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், உலகின் பல நாடுகளும் மனித மற்றும் பொருளாதார அழிவுகளை ...

மேலும்..

இரண்டு பூனைகளுக்கு கொரோனா தொற்று!

இரண்டு பூனைகளுக்கு முதன் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நிவ்யோர்க்கில் உள்ள இரண்டு பூனைகளுக்கே இவ்வாறு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரண்டு பூனைகளுக்கும் சிறியளவிலான அறிகுறிகளே தென்படுகின்றமையினால் அவற்றை விரைவில் குணப்படுத்த முடியும் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். அத்துடன், குறித்த ...

மேலும்..

உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் – உலக உணவு திட்ட அமைப்பு!

கொரோனா வைரஸ் தாக்கத்தை அடுத்து ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு தட்டுப்பாடு இரட்டிப்பாகும் என ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவு திட்ட அமைப்பு தெரிவித்துள்ளது. உணவுத் தட்டுப்பாட்டினை எதிர்கொள்ளும் மக்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து ...

மேலும்..

சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பும் நோக்கம்- ட்ரம்ப் அறிப்பு

கொரோனா வைரஸ் பரவல் குறித்த உண்மைகளை அறிவதற்காக சீனாவுக்குப் புலனாய்வு அதிகாரிகளை அனுப்பிவைக்க விரும்புவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவிய முறை, அதனால் பாதிக்கப்பட்டோர் தொகை, உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆகிய உண்மைத் தகவல்களைக் கூறாமல் சீனா மூடிமறைப்பதாக ...

மேலும்..

கொரோனா காலப்பகுதியில் மக்கள் மனங்களைக் கவர்ந்த பொழுதுபோக்குகள்…

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் பல நாடுகள் முடக்கப்பட்டுள்ளன. மேலும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகளை மட்டுப்படுத்துமாறோ அல்லது முற்றாக தடை செய்யுமாறோ பல நாடுகள் அறிவுறுத்தியுள்ளன. இந்நிலையில் மக்கள் பல்வேறுபட்ட பொழுதுபோக்குகளில் தம்மை ஈடுபடுத்தி, குறித்த காலப்பகுதியினை கடத்தி ...

மேலும்..

ஊரடங்குச் சட்டத்தால் உணவின்றித் தவிக்கும் நாளாந்த கூலிவேலை செய்யும் இலங்கைத் தமிழ்க் குடும்பங்களுக்கான உதவிகள்…

அவசரகால மற்றும் ஊரடங்குச் சட்டங்களால் முழுமையாகப் பாதிக்கப்பட்டு பசியால்  வாடும்  இலங்கைத் தமிழ் தினசரிக் கூலித்தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக எம்மால் முடிந்த உதவிகளை செய்ய ஒவ்வொரு புலம்பெயர் தமிழரும் கடமைப்பட்டுள்ளோம். அந்தவகையில் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகிய நாம் செய்யும் உதவித் திட்டங்களுக்கு எமது உறுப்பினர்கள் பலர் தமது பங்களிப்புகளை செய்துள்ளனர். தாமாகவே இதில் அக்கறை செலுத்தி தமது நண்பர்களிடமும் நிதி திரட்டி கொடுத்துள்ள இருவரை இங்கு குறிப்பிடவேண்டும். திரு து.இராமச்சந்திரன் $1300/= சேர்த்துத் தந்துள்ளார். திரு சுப்பிரமணியம் புவனேஸ்வரன் சிறு சிறு துளியாகச் சேர்த்து $ 560/= கொடுத்துள்ளார். இந்த இருவருக்கும் கனடா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் நன்றியைத் தெரிவிக்கின்றேன். இதுவரை ஆறரை இலட்சம் ...

மேலும்..

கனடா-அமெரிக்கா எல்லையை திறக்கும் காலம் மேலும் நீடிப்பு

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கனடா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான எல்லையை திறப்பதற்கான கால எல்லையை மேலும் நீடிக்க முடிவெடுத்திருப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். அந்தவகையில் இரு நாடுகளுக்கும் இடையிலான தற்போதைய எல்லைக் கட்டுப்பாடுகளை மேலும் 30 நாட்களுக்கு நீட்டிப்பதற்கு கனடாவும் ...

மேலும்..

உயர் கல்வி, பயற்சி நெறிகளுக்காக வெளிநாடு சென்ற இலங்கையர்களை அழைத்து வருவது பற்றி அரசு கவனம்…

உயர் கல்வி மற்றும் பயற்சி நெறிகளுக்காக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வருவது குறித்து வெளிநாட்டலுவல்கள் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பில் வெளிநாடுகளிலுள்ள தூதரகங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "உயர் கல்விக்காக வெளிநாடுகளில் ...

மேலும்..

ஜப்பானில் அவசரகாலநிலை மேலும் நீடிப்பு!

ஜப்பானில் எதிர்வரும் மே 6ஆம் திகதி வரை அவசரகால நிலை நீடிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் ஷின்சோ அபே அறிவித்துள்ளார். அங்கு, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் பிரதமரால் ரோக்கியோ உள்ளிட்ட 7 மாகாணங்களுக்கு அவசரகால நிலை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் வைரஸ் நோயின் தாக்கம் ...

மேலும்..

வங்கதேச கடலில் 2 மாதங்களாக தத்தளித்த 396 அகதிகள் மீட்பு: 32 பேர் உயிரிழப்பு

மலேசியாவுக்கு படகு வழியாக சென்றடையும் முயற்சியில் கடலில் தத்தளித்த 396 ரோஹிங்கியா அகதிகள், வங்கதேச கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ள நிலையில் 32 அகதிகள் உயிரிழந்திருக்கின்றனர். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 396 அகதிகள் மோசமான- மிகவும் ஆள் நெருக்கடிமிக்க படகில் இரண்டு மாதங்களை கழித்ததாகக் கூறப்படுகின்றது. ...

மேலும்..

உலகம் முழுவதும் இதுவரை இல்லாத அளவில் ஒரேநாளில் அதிக உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் காரணமாக உலகமே நிலைகுலைந்து போயுள்ள நிலையில் அமெரிக்காவில் கோரத் தாண்டவம் ஆடிவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் நேற்று மட்டும் 2 ஆயிரத்து 500 பேர் வரை உயிரிழந்துள்ளனர். மேலும் 30 ஆயிரம் பேர் புதிதாக தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளமை அடையாளம் ...

மேலும்..

கொரோனா அச்சத்திற்கு இடையே மலேசியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட 1,038 இந்தோனேசியர்கள்

மலேசியாவில் சட்டவிரோத குடியேறிகளாக கருதப்பட்ட 1,038 இந்தோனேசிய தொழிலாளர்களை மலேசிய அரசு நாடுகடத்தியிருக்கிறது. மலேசியாவின் கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சிறப்பு விமானம் மூலமாக இந்தோனேசியாவின் ஜகார்த்தா, மற்றும் மேடான் நகருக்கு இவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தற்போது நாடுகடத்தப்பட்டுள்ளவர்கள், வேலைக்கான விசாயின்றியும் விசா காலம் கடந்தும் மலேசியாவில் வேலை செய்ததன் காரணமாக கைது செய்யப்பட்டவர்கள். இவர்கள் நாடுகடத்தப்படுவது வழக்கமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கை என்றாலும், தற்போதைய நாடுகடத்தல் குடிவரவுத் தடுப்பு முகாம்களில் உள்ள மக்கள் நெருக்கத்தைக் குறைக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கொரோனா கட்டுப்படுத்தும் விதமாக, மலேசியாவில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடு நடைமுறையில் உள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

மேலும்..

கொரோனா தடுப்பு – அமெரிக்காவுக்கு பாடம் சொல்லும் சீனா

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் அமெரிக்கா தனது கடமைகளை சரிவர நிறைவேற்ற வேண்டுமென சீனா வலியுறுத்தியுள்ளது. சீனாவில் ஆரம்பிக்கப்பட்ட கொரோனா வைரஸ் பரவலானது உலகின் ஏனைய நாடுகளுக்கு பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் திறம்பட செயற்பட உலக சுகாதாரம் தவறிவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ...

மேலும்..