உலகச் செய்திகள்

இத்தாலி, ஸ்பெயினுக்கு மீட்சி கிட்டுகிறது: உலகம் முழுவதும் 18 இலட்சத்து 50 ஆயிரத்துக்கும் மேல் பாதிப்பு!

உலகம் முழுவதும் தீவிரமாகப் பரவி மனித அழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸால் ஏற்படுத்தப்படும் மரணங்கள் நேற்று சற்றுக் குறைவடைந்துள்ளன. இந்த வைரஸால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் உயிரிழப்புக்கள் நேற்றைய நாளில் குறைந்துள்ளன. சீனாவில் ...

மேலும்..

கொரோனாவுக்கு இலக்கான பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் வீடு திரும்பினார்!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று வீடு திரும்பியுள்ளார். பிரித்தானியா, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் இரு வாரங்களுக்கு ...

மேலும்..

இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்த செயற்கைகோள் படத்தை வெளியிட்டது நாசா

கொரோனாவால் இயற்கையில் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து நாசா செயற்கைகோள் படத்தை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வரும் நிலையில், அதனால் உலக மக்கள் பலரும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர். எனினும் இதனால் இயற்கையில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, சுற்றுச்சூழல் மாசு ...

மேலும்..

முடிவின்றி தொடரும் அச்சுறுத்தல் – இத்தாலியில் நீடிக்கப்படுகிறது நாடளாவிய முடக்கம்

கொரோனா வைரஸ் காரணமாக இத்தாலியில் அமுல்படுத்தப்பட்டுள்ள நாடளாவிய முடக்கம் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு அதிகளவில் முகங்கொடுத்த நாடுகளில் இத்தாலியும் உள்ளடங்குகிறது. குறித்த வைரஸ் பரவலால் நாடளாவிய ரீதியில் நாளாந்த ஆயிரக்கணக்கானோர் மரணித்து ...

மேலும்..

கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டாம் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பல நாடுகள் ஊரடங்கை தளர்த்துவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோன வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்துள்ள நிலையில், உலகின் பல நாடுகளில் ...

மேலும்..

மருத்துவ உபகரணங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதித்தது அமெரிக்கா!

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தீவிரமடைந்துவரும் நிலையில் வெளிநாடுகளுக்கு பல்வேறு மருத்துவ உபகரணங்களை ஏற்றுமதி  செய்வதற்கு அந்நாடு தடை விதித்துள்ளது. கொரோனா அங்கு கோரத் தாண்டவம் ஆடிவரும் நிலையில் உலக அளவில் கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளதுடன் மரணித்தவர்களின் பட்டியலில் இரண்டாவது ...

மேலும்..

சீனாவில் இரண்டாவது தாக்குதலுக்குத் தயாராகும் கொரோனா- சீன ஜனாதிபதி எச்சரிக்கை!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாகப் பரவிவரும் நிலையில் சீனாவிலும் அதன் இரண்டாவது பரவல் ஏற்படக்கூடிய ஆபத்து இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவின் அதிகாரம்மிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ நிலைக்குழுவில் கலந்துகொண்டு பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து ...

மேலும்..

கொரோனா பெருந்தொற்று: ஒரு இலட்சத்தை நெருங்கும் மனிதப் பேரழிவு!

உலக நாடுகளை உலுக்கிவரும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 15 இலட்சத்தைக் கடந்துள்ளது. இதுவரை, 15 இலட்சத்து 18 ஆயிரத்து 773 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மரணப் பதிவுகள் 88 ஆயிரத்து 505 ஆக அதிகரித்துள்ளது. உலகின் அநேகமாக நாடுகளில் ஊரடங்கு உத்தரவுகள் ...

மேலும்..

கொரோனா வைரசுக்குச் சூட்டிய ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை கைவிடுகிறது அமெரிக்கா!

கொரோனா வைரஸ் உலகளாவிய தொற்றாக மாறிவிட்டதாலும் அதைக் கட்டுப்படுத்த சீனாவின் உதவி வேண்டும் என்பதாலும் ‘வுஹான் வைரஸ்’ என்ற அடைமொழியை விட்டுவிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அமெரிக்கா, தனக்குத் தேவையான முகக் கவசங்கள் உள்ளிட்ட 50 சதவிகித தனிநபர் பாதுகாப்பு உபகரணங்ளுக்கு சீனாவை ...

மேலும்..

இயல்பு நிலைக்கு திரும்பியது சீனாவின் வூகான் நகரம்

கொரோனா வைரஸ் முதலில் பரவ ஆரம்பித்த சீனாவின் வூகான் நகரில் ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது. வீடுகளில் அடைபட்டு கிடந்த மக்கள் இரண்டரை மாதங்களுக்குப் பின்னர் ஊரை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீனாவில் கொரோனா உயிரிழப்புகள் குறைவடைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கும் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் மெல்ல மெல்ல ...

மேலும்..

உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருந்து தவறிழைத்துவிட்டது- ட்ரம்ப் விடுத்துள்ள எச்சரிக்கை!

கொரோனா தொற்று விவகாரத்தில் உலக சுகாதார நிறுவனம் சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில், குறித்த நிறுவனத்துக்கு வழங்கப்படும் நிதியை இரத்துச் செய்யப்போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், கொரோனா வைரஸ் குறித்து பல ...

மேலும்..

மோசமான கட்டத்தில் இத்தாலி, ஸ்பெயின்: உலகம் முழுவதும் ஒரேநாளில் 2000இற்கும் மேல் உயிரிழப்பு!

உலகம் முழுவுதும் தீவிரமாகப் பரவிவரும் கொரோனா வைரஸால் கடந்த 24 மணிநேரத்தில் 2000இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.   இந்த வைரஸால் இதுவரை 4 இலட்சத்து 22 ஆயிரத்து 829 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 18,907 பேரை வைரஸ் மாய்த்துள்ளது. இதில் இத்தாலி ஏற்கனவே ...

மேலும்..