மரண அறிவித்தல்
திரு சீனியர் இராசா (ஓய்வுபெற்ற- காங்கேசந்துறை சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர்)
யாழ். மயிலிட்டி மயிலியோடையைப் பிறப்பிடமாகவும், இளவாலை வடக்கு வேரவலை வசிப்பிடமாகவும், சுன்னாகத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட சீனியர் இராசா அவர்கள் 24-06-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சீனியர் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புத்திரரும், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற பாக்கியம்(அன்னம்) அவர்களின் அன்புக் கணவரும், இரவீந்திரன்(செயலாளர்- கல்வி பண்பாட்டலுவல்கள், மற்றும் விளையாட்டுத்துறை, இளைஞர் விவகார அமைச்சர் வடமாகாணம்), ரஜனி(சுன்னாகம்), இராமச்சந்திரன்(பொறியிலாளர்- லண்டன்), ரிஷிந்திரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், காலஞ்சென்றவர்களான கதிரிப்பிள்ளை, சின்னத்தம்பி, பார்வதி, லட்சுமி, இராசதுரை, துரைச்சாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், ரோகினி(ஆசிரியர்- சைவப்பிரகாச வித்தியாசாலை, வவுனியா), ஆனந்தகுமார்(கோட்டைக் கல்விப்பணிப்பாளர்- தெல்லிப்பழை), அருணா(முன்னாள் ஆசிரியை – மத்திய கல்லூரி வசாவிளான்- லண்டன்), மலர்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும், சங்கீர்த்தன்(பொறியிலாளர்- மாத்தறை), லவகீர்த்தன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர மாணவர்), பவகீர்த்தன்(வவுனியா தமிழ் மகாவித்தியாலய உயர்தர மாணவர்), வேதாகுலன்(யாழ் இந்துக்கல்லூரி உயர்தர மாணவர்), இலாவண்யா(யாழ்/வேம்படி மகளிர் உயர்தரபாடசாலை உயர்தரமாணவி), அருண்ராம், அபிராம், அபிநயா(லண்டன்), அஜீர்த்தனன், சஜீர்த்தனன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 27-06-2017 அன்று பருத்தியோலை வீதி, மயிலணி, சுன்னாகம் என்னும் இடத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சுன்னாகம் கொத்தியாலடி இந்துமயானத்தில் பூதவுடல் தகனம்செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
குடும்பத்தினர் |