31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அமரர் அடைக்கலம் அமிர்தநாதன் (சித்த வைத்தியர்)

தோற்றம்: 12-03-1932   -   மறைவு: 04-12-2016
மன்னார் விடத்தல் தீவை பிறப்பிடமாகவும்,மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரை வதிவிடமாகவும் கொண்ட சித்த வைத்தியர் ‘அடைக்கலம் அமிர்தநாதன்’  அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி அழைப்பிதழும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வருகைதந்து ஆறுதல் கூறிய மன்னார்,யாழ் மறைமாவட்ட ஆயர்கள்,குரு முதல்வர்,அருட்தந்தையர்கள்,அருட்சகோதரிகள்,பாராளுமன்ற சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர்,பிரதி சபாநாயகர்,அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள்,பாராளுமன்ற உறுப்பினர்கள்,வடமாகாண முதலமைச்சர்,கட்சித்தலைவர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், உள்ளுராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள்,கிராம மட்ட அமைப்புக்களின் பிரதி நிதிகள், அரச,அரச சார்பற்ற அமைப்புக்களின் பிரதி நிதிகள், பாடசாலை அதிபர்கள்,ஆசிரியர்கள் அனைவருக்கும் எமது குடுமு;பம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
மேலும் தொலைபேசி மூலமாக ஆறுதல் கூறியதோடு பல வழிகளில் உதவி புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திப்பிரார்த்தனை சனிக்கிழமை (07-01-2017)     மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரது இல்லத்தில் நடை பெற்று   அதனைத் தொடர்ந்து இடம் பெறும் மதிய போசன நிகழ்விலும் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு வேண்டிக் கொள்கின்றோம்.
இவ் அழைப்பை தனிப்பட்ட அழைப்பாக ஏற்று அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
தகவல்:-
-மகன்-
செல்வம் அடைக்கலநாதன்
-வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்-
(பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவர்)
தொடர்புகளுக்கு:-0777760795
நிகழ்வுகள்
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகரில் உள்ள அன்னாரது இல்லத்தில்
திகதி : 07-01-2017
இடம் : மன்னார் தோட்டவெளி
தொடர்புகளுக்கு
செல்வம் அடைக்கலநாதன்
கைப்பேசி : 0777760795