மரண அறிவித்தல்
அமரர் கந்தையா கனகசபை
அமரர் கந்தையா கனகசபை
அப்பர் பலாங்கொடை எஸ்டேட், பலாங்கொடை (முன்னாள்) 20.11.2016 அன்று கொழும்பில் காலமானார்.
இவர் காலஞ்சென்ற திரு.திருமதி. பலாங்கொடை கந்தையா அவர்களின் அன்பு மகனும், காலஞ்சென்ற சிவஜோகநாயகி சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும், பிரபானந்தா, ஸ்ரீயானந்தா, ரேணுகா தேவி மற்றும் கிரிதானந்தா அவர்களின் அன்புத் தந்தையும், தசீன் பிரபானந்தா, ரேணுகா ஸ்ரீயானந்தா, வேலாயுதம்பிள்ளை ரவிராஜ் மற்றும் தீபகுமாரி, கிரிதானந்தா அவர்களின் மாமனாரும், சிந்துஜா ஸ்ரீயானந்தா, பைரவி ஸ்ரீயானந்தா, ஸ்ரீராம் ஸ்ரீயானந்தா, யோகிஷாந் ரவிராஜ், கேஷணா ரவிராஜ், கௌதம் கிரிதானந்தா மற்றும் ஆர்த்தி கிரிதானந்தா ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
அன்னாரின் பூதவுடல் அஞ்சலிக்காக 22.11.2016 (செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி வரை பொரளையில் உள்ள ஏ.எப் ரேமண்ட் மலர்ச்சாலையில் வைக்கப்பட்டு 23.11.2016 (புதன்கிழமை) காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை சமயக் கிரியைகளைத் தொடர்ந்து பொரளை கனத்தை மயானத்தில் 11.30 மணி முதல் 12.00 மணிக்குள் தகனக் கிரியைகள் நடைபெறும்.