31ம் நாள் நினைவஞ்சலி

அமரர் தமோதரம்பிள்ளை யோகம்மா

தோற்றம்: 20 ஓகஸ்ட் 1939   -   மறைவு: 1 ஒக்ரோபர் 2017

யாழ். தாவடி வடக்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்டிருந்த தாமோதரம்பிள்ளை யோகம்மா அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.

எப்போது வீடு வருவீர் அம்மா?

வீட்டை விட்டு போன அம்மா
வீடு திரும்பவில்லை இன்னும்
நாட்டை விட்டு போனபோதும்(நோர்வே)
வீடு திரும்பி வந்தீர்களே அம்மா
இன்று மட்டும் என்ன கோபம்?

பல விழி கொண்டு உனைத்தேடுதம்மா
உங்கள் துயிலறை, உங்கள் தனி அடுப்பு,
உங்கள் தனிக்கதிரை, உங்கள் யன்னல் ஓரம்!

வியாழக்கிழமை நாள் சரியில்லை
சனிக்கிழமை போவோம்(ஹொஸ்பிற்றல்)
என அடம்பிடித்தீர்களே அம்மா….!
வீட்டில் வைத்திருக்க பயத்திலல்லவோ
கொண்டுசென்றோம் அம்மா
அதுதான் உங்கள் கோபமோ அம்…மா..!

மூத்தமகள், பிள்ளைகள் வருயினம் என்றவுடன்
வரும்வரை காத்திருந்து வந்த
நொடிப்பொழுதில் உயிர் துறந்தீரே!
தவறு விட்டோம் நாங்கள்
சின்ன மகனும் உனைப்பார்க்க வருகின்றார்
எனச் சொன்னார்களே அன்று!
செய்தியைச் சொல்வதால் ஏதும் நடந்திடுமென
எண்ணியதால்தான் தவிர்த்தோம் நாங்கள்
ஆனால் சொல்லியிருந்தால்
இன்னும் இரண்டு நாட்கள் அதிகம்
எங்களுடன் இருந்திருப்பீரே அம்மா!

கற்ற மருத்துவர்கள் தெரிந்தும்
செப்பவில்லையே எமக்கு அவர்கள்!
தெரிந்திருந்தால் வீட்டில் வைத்தே பார்த்திருப்போமே
ஆயுளுக்கு உடனிருக்க…..!
தடையது விதித்ததுவே அரச மருத்துவச்சட்டம்
அது கூட திருத்தப்படவேண்டிய சட்டம்!
ரேவதி நீயும் நில் என தடுத்தாயே அம்மா!
அதைக்கூட செய்வதற்கு முடியாமல்
போனதற்கு தடுத்தது சட்டம்!

வெளியில் நிற்பதாகக் கூறி
வீடு வந்தோம் நாங்கள்
பொய்சொல்லி வந்தோம்
என்பதற்கான தண்டனையா?
பொய் உடம்பு என நிருபித்தது
கூவின சத்தம் அணைந்ததனால்
கூடு தனித்து நிற்குதம்மா!
கூடியிருந்தவர் தவிக்கின்றோம் அம்மா!

தாயே தவித்துக் கொண்டிருக்கும்
பிள்ளைகள், மருமக்கள்,
பேர்ப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகளுக்கு ஒரு கணம்
விழிதிறந்து உன் திருமுகம் காட்டி மறுபடியும்
உறங்க முடியாதா அம்மா….?!

அன்னாரின் வீட்டுக்கிருத்தியக்கிரியை 01-10-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது தாவடி இல்லமான சிவசுந்திரபதியில் நடைபெற்று பின்னர் ஆத்மசாந்திப் பிராத்தினை 07-10-2017 சனிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் ஹற்றன் இல்லமான யோகமஹாலில் நடைபெறும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தொடர்புகளுக்கு
சுந்தரேஸ்வரி(மகள்) — இலங்கை
கைப்பேசி : +94772269873
சிவானந்தன்(மகன்) — இலங்கை
கைப்பேசி : +94777729551
சிவகௌரி(மகள்) — இலங்கை
கைப்பேசி : +94767588587
சிவயோகநாதன்(மகன்) — பிரித்தானியா
கைப்பேசி : +442089524119
சிவகுமரன்(மகன்) — நோர்வே
கைப்பேசி : +4793253567