1ஆம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர்.திரு.செல்லத்துரை ஜெயராஜா (SK) (ஒய்வு பெற்ற களஞ்சியப் பொறுப்பாளர் நீர்ப்பாசனத்திணைக்களம்)
அடைமழையாய் அன்பு தந்தீர் அனுபவமாய் அறிவு தந்தீர்,
ஆயிரம் உறவுகள் உமக்காக ஆலயங்களெல்லாம் உம் வாசல்,
இறை பக்தி இதயமெங்கும் இடர்கள் கண்டு துவளா மனது,
வஞ்சனைகள் யார்க்கும் செய்ததில்லை
வசைபாடும் பழக்கமும் இருந்ததில்லை,
இசை ரசனையோ ஓராயிரம் இனம் மீது அளவில்லாப் பற்று,
பிறர் வாழ்வை உயர்த்தும் வள்ளலே பிரிவினை கண்டு அஞ்சிடுவீர்,
பிரிந்து விட்டீரே உலகை விட்டு, மறந்திட முடியாத மாமனிதர்
மனதெல்லாம் உங்கள் நினைவே, முற்றத்து மல்லிகைகூட உம்
முகம் பார்த்திட ஏங்குகிறதே, பழகிட உம் போல் யாருண்டு
களஞ்சிய பொறுப்பாளராய் பொறுப்புக்கள் பல சுமந்தீர்,
பண்பினால் வென்றிடும் ஜெயராஜா எனும் பெயர் கொண்டவரே,
நல்லுள்ளம் பிடித்ததனால் அழைத்துவிட்டான் இறைவன்,
நட்பினில் சிறந்த உங்கள் ஆத்மா சாந்தி பெற பிரார்த்தனைகள் கோடி…
திதி (11.10.2017) புதன்கிழமை கல்முனை உடையார் வீதியில் உள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் ஆத்மசாந்தி பிரார்த்தனைகளிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இவ் வண்ணம்: குடும்பத்தினர்,
இல:50,உடையார் வீதி,
கல்முனை-02.