மரண அறிவித்தல்
திரு அருணகிரி கந்தையா (செட்டியார்)
வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட அருணகிரி கந்தையா ( செட்டியார் ) அவர்கள் (19/04/2016) செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் காலஞ்சென்ற கந்தையா – இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வடிவாம்பிகையின் பெறாமகனும் காலஞ்சென்றவர்களான தம்பியப்பா சரவணமுத்து தம்பதியினரின் அன்பு மருமகனுமாவார்.
இலட்சுமி அவர்களின் பாசமிகு கணவருமாவார்.
குமாரதாசன் (சின்னராசன்), வசந்தாதேவி, கமலாதேவி, குகதாசன் (குகன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சகுந்தலா (வவா), உமாதேவன், ஸ்ரீதரலிங்கம், சிவரதி ஆகியோரின் பாசமிகு மாமனாருமாவார்.
தம்பியாபிள்ளையின் பெறாமகனும் ஞானதீபம் சகுந்தலாதேவி, சிவஒளி முர்த்தி கோமதி, கலாமதி நிலாமதி ஆகியோரின் அன்பு சகோதரனுமாவார்.
தரணியா, தர்சிகா, சிவகரன், வாசகன், அஜிதா, கஜித்திரா , சகானா, சுலச்சன், அஜிசன், ஆர்த்திகா, கபிசன் , கிசானி, மிருசன் ஆகியோரின் அன்பு பேரனுமாவார்.
ஆதவன், சிந்துரா ஆகியோரின் பூட்டனும் காலஞ்சென்றவர்களான பூரணம், செல்லத்துரை, இராசம்மா, விசாலாட்சி (கனடா) காலஞ்சென்ற கார்த்திகேசு ஆகியோரின் மைத்துனருமாவார்.
காலஞ்சென்றவர்களான கனகசபாபதி, சிவஞானம், சொக்கலிங்கம் ஆகியோரின் சகலனுமாவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்