மரண அறிவித்தல்
கந்தையா இராசேந்திரம்
விநாயகர் வீதி,நல்லூர் வடக்கைப் பிறப்பிடமாகவும் கலைமணி வீதி கட்டைப்பிராயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா இராசேந்திரம் அவர்கள் இன்று (01.11.2016) காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகரத்தினம் தம்பதிகளின் மருமகனும், நீலாய தாட்சியின் அன்பு கணவரும், அமரர் அன்னலட்சுமி, அமரர் இராசையா, அமரர் மயில்வாகனம், அமரர் சிவக்கொழுந்து, மனோன்மணி கெங்கநாதன், ஆகியோரின் பாசமிகு சகோதரனும், அமரர் சுந்தரலிங்கம், அமரர் செல்வராசா, கந்தகுரு(லண்டன்), ஆகியோரின் அன்பு மைத்துனரும், அனிதா(கொலண்ட்), வனிதா (ஜேர்மனி), கலையரசி,கலைவாணி9ஜேர்மனி), ஸ்ரீவாணி(பிரான்ஸ்), ஜெயவாணி(கிளி.இரணைதீவு றோ.த.க.பா) ஆகியோரின் பாசமிகு தந்தையும், சிவசிதம்பரம், பாலகுமார், தேவகாந்தன்(மின் இணைப்பாளர்), விநாயகமூர்த்தி, செல்வகரன், ரவீந்திரன்(ஆசிரியர் வவுனியா தாவிக்குளம் அ.த.க.பா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும் றொபின், சிந்தியா, லெவின், சியான், நிலான், சதுர்ஜன், யஷ்மி, அபிஷ், யாதர்ஷ், அப்ஷரா, கஷ்மி, ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (03.11.2016) வியாழக்கிழமை 2 மணியளவில் செம்மணி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இந்த தகவலை உற்றார்,உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.