மரண அறிவித்தல்

சிற்பகலாநிதி. செல்லையா சிவப்பிரகாசம்

தோற்றம்: 21 - 06 - 1928   -   மறைவு: 09 - 07 - 2016

அளவெட்டியைப் பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணம், 2ஆம் குறுக்குத் தெரு, இல:111ஐ வதிவிடமாகவும் கொண்ட சிற்ப, சித்திரகலாநிதி கலாபூஷணம் செல்லையா சிவப்பிரகாசம் (ஓய்வு பெற்ற சித்திர ஆசிரியர் – யாழ் மத்திய கல்லூரி) 09.07.2016 அன்று கொழும்பில் காலமானார்.

சிற்பச் சித்திர கலாநிதி செல்லையா சிவப்பிரகாசம் அவர்களின் வாழ்க்கை குறிப்பு

யாழ்.மத்திய கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும் யாழ். இராமநாதன் நுண்கலைத்துறையின் விரிவுரையாளருமான சிற்பச் சித்திர கலாநிதி கலாபூசனம் செல்லையா சிவப்பிரகாசம் கடந்த சில மாதங்களாக நோய்வாய்ப்பட்ட நிலையில் 09.07.2016 அன்று இறைவனடி சேர்ந்தார்.

இலங்கையில் மிகப் பிரசித்தி பெற்ற சிற்பச் சித்திர கலைஞரான இவரது சிற்பங்களில் ஒன்றாக யாழ் முத்திரைச் சந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலை வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. அத்துடன் உலகளாவிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தன் ஆலயத்தினை முழுமையாக அலங்கரித்து நிற்கும் சிற்பங்களும் ஓவியங்களும் இக்கலைஞனின் கைவண்ணத்தினால் நிறைந்தவை .

யாழ் மத்திய கல்லூரி நிறுவுனரான அதிபர் வண.ஜேம்ஸ் லின்ச்சின் சிலை, வவுனியா பண்டாரவன்னியன் சிலை, அண்மையில் யாழ்.மணிக்கூட்டு கோபுரத்தைச் சுற்றி நிறுவப்பட்ட தமிழ் மன்னர்களின் சிலை வவுனியா நூலக வளாகத்தில் உள்ள சரஸ்வதி சிலை, வவுனியா புகையிர நிலையத்தில் உள்ள பெண்ணின் சிற்பம், யாழ். மாநகரசபையில் உள்ள சேர்.பொன்.இராமநாதனின் சிலை, வெண்கலத்தினால் செய்யப்பட்ட அல்பிறட் துரையப்பாவின் சிலை என இருபத்திரண்டுக்கும் மேற்பட்ட பிரபலங்களின் சிலைகளை அமைத்த பெருமை இவருக்கு உண்டு.

செல்லையா சிவப்பிரகாசம் (1928.06.21) இல் யாழ்ப்பாணம் அளவெட்டியில் பிறந்தார். 1952 ஆம் ஆண்டில் இருந்து 1966ம் ஆண்டு வரை கொழும்பு அரசினர் நுண்கலைக் கல்லூரியில் சித்திரம் சிற்பம் ஆகிய இரண்டினையம் கற்று சித்திர டிப்ளோமா என்ற பட்டத்தையும் பெற்றவர்.

யாழ்.மத்திய கல்லூரியில் சித்திர ஆசிரியராகப் பணியாற்றியதுடன் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் சித்திரப் பாடத்துறையை ஆரம்பித்தபோது அங்கும் சித்திரப்பாட விரிவுரையாளாராகப் பணியாற்றினார். இவர் ஜனாதிபதியின் தேசிய விருதான கலாபூஷணம் விருது உட்பட பதினைந்துக்கும் மேலான தங்கப்பதக்கங்களைப் பெற்றிருக்கின்றார்.

ஆரம்பக் கல்வியை அளவெட்டி ஞானோதயாவிலும் தொடர்ந்து தெல்லிப்பளை மகாஜனாவிலும் கல்வி கற்ற இவர் கொழும்பு நுண்கலைக் கல்லூரியில் சிற்பம் ஓவியம் ஆகிய கலைகளை கற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

15ற்கும் மேற்பட்ட தங்கப்பதக்கங்களுக்கு சொந்தக்காரனான இவர் 1996 இல் ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவினால் சிற்பக் கலாநிதி பட்டம் பெற்றவர். மேலும் சிற்பக்கலாமணி, சிற்பச் சக்கரவர்த்தி, திருத்தொண்டர் மாமணி, ஆளுநர் விருது, ஜனாதிபதி விருது, ஆகியவற்றை பெற்றவர். கலைஞரது இறுதி நிகழ்வுகள் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு கல்கிசை மகிந்த மலர்சாலையில் இருந்து பொதுமயானத்தில் நடைபெறும்.

இவர் ஓய்வுபெற்ற ஆசிரியையான அன்னலட்சுமியின் கணவரும் பொறியியலார் துஷியந்தன் வைத்தியக் கலாநிதி அனுஷியந்தன் ஆகியோரின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

DSCF1168-1024x768

DSCF1170-1024x768

DSCF1203-1024x768

DSCF1238-1024x768

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (11.07.2016)
இடம் : கல்கிசை பொது மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 071 275 9856