மரண அறிவித்தல்
செல்வி கருப்பையாப்பிள்ளை ஜெயலட்சுமி
திருச்சி மாவட்டம், வெள்ளக்கல்பட்டி கிராமம் பூண்டுலோயாவை சேர்ந்த செல்வி K. ஜெயலட்சுமி (23.05.2016) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற திரு.திருமதி P.R.M கருப்பையா பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாவார்.
அன்னார் Monara Tex (Aswin’s) முருகையா, காலஞ்சென்றவர்களான துரைராஜா, சண்முகநாதன் (கொழும்பு – 12, பண்டாரநாயக்கா மாவத்தை), பாலசுப்ரமணியம் (கொழும்பு gree lame), நடராஜமூர்த்தி (பூண்டுலேயா), முன்னாள் பிரதேச சபை தலைவர் ஆனந்தராஜா, காலஞ்சென்ற சீதாராம் தேவி, சென்னை கமலேஸ்வரியின் பாசமிகு சகோதரியுமாவார்.
மாரிமுத்து காலஞ்சென்ற தியாகராஜா, ராஜேஸ்வரி, உமையபார்வதி, சாரதாதேவி ஆகியோரின் மைத்துனியுமாவார்.
ஷரன், அபிஷான், மதுஷிகா, நித்தியா, நிவேதா ஆகியோரின் அத்தையுமாவார்.
சென்னை தாமரைச் செல்வி, அமெரிக்கா சிவப்பிரதா, சேஷான் ஆகியோரின் சித்தியும், சென்னை உதயச்சந்திரன், அமெரிக்கா வினோத்குமார் ஆகியோரின் சின்ன மாமியாருமாவார்.
அன்னாரின் பூதவுடல் பொரளை ஜெயரத்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு (25.05.2016) இன்ற புதன்கிழமை பிற்பகல் 2மணியளவில் ஈமக்கிரியைகள் நடைபெற்று பொரளை கனத்தை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்
தகவல்
குடும்பத்தினர்