மரண அறிவித்தல்
திருமதி கந்தவனம் வள்ளிநாச்சி
யாழ். நவிண்டிலைப் பிறப்பிடமாகவும், அல்வாயை வசிப்பிடமாகவும் கொண்ட கந்தவனம் வள்ளிநாச்சி அவர்கள் 30-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
கந்தவனம்(சைவப்பா- இளைப்பாறிய ஆசிரியர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விக்னேஸ்வரி(விக்கி), கலாநிதி சுப்பிரமணியம்(மணியம், பொறியியலாளர்- அவுஸ்திரேலியா), உலகநாயகி(காந்தி- லண்டன்), பொன்னம்பலம்(அப்பன், கணக்காளர்- லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், சின்னதங்கநாச்சன், நடராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவபாலன்(கணக்காளர்- கொழும்பு), சந்திரகுமார், மந்தாகினி(கணக்காளர்- அவுஸ்திரேலியா), பானுமதி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சியாமளன், சிறிவத்சன், துவாரகன், ஹரிபிரசாந், கிறிஸ்சிகேசன், சிராணி, சிறிஸ் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் மாவடி வளவு நவிண்டிலிலுள்ள அவரது இல்லத்தி்ல் நடைபெற்று பின்னர் எள்ளங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்