மரண அறிவித்தல்
திருமதி பரமேஸ்வரி சிவராசா
யாழ். வேலணை வங்களாவடியைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணத்தை வதிவிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவராசா அவர்கள் 22-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற விஸ்வலிங்கம், செங்கமலம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சாந்தலிங்கம், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற சிவராசா(சாத்தர்) அவர்களின் அன்பு மனைவியும், புஸ்பராணி(கனடா), தயாபரநாதன்(யாழ்ப்பாணம்), விஜயராணி(மல்லிகா- கனடா), காலஞ்சென்ற இந்திராணி, சத்தியநாதன்(சத்தி- பிரான்ஸ்), திலீபநாதன்(திலீபன்- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும், சோமலிங்கம்(கனடா), பவானி(ஆசிரியை- கொட்டடி நமசிவாய வித்தியாலயம்), ஸ்ரீகாந்தன்(கனடா), விஜிதா(பிரான்ஸ்), குகப்பிரியா(பிரியா- பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும், ஜனகன், சுவேதன், அபிமன், பாமினி, பரதன், கம்சா, நிக்கோலா, தயாநிசன், வர்ஷினி, ஆரோக்கியமாதா, லுவிந்தன், யனுக்ஷன், லூட்சிகா, சுவிந்தன், இந்துஜன், தனேஸ்வரி, வித்தியகலா, தக்ஷனா, சிவகாந்தா, உஷா, தினேஸ், ஹம்சாயினி, சஜந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும், தானுகா, ஜயனுகா, பிரணவன், ஆரபி, விசாகன், அகரன், ஆதுஷன், ஆதிரன், அநநியா, சாளரன், காவியன், தாரகன், பவிஷா, பவீன், திசானி, திவானி, திஷ்விகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். வீட்டு முகவரி: |
தகவல் |
குடும்பத்தினர் |