மரண அறிவித்தல்

திருமதி பராசக்தி பகவத்சிங்கம்

சத்திரந்தை, களமிபூ, காரைநகரை பிறப்பிடமாகவும் புது வீதி, காரைநகரை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி பராசக்தி பகவத்சிங்கம் (06.02.2016) சனிக்கிழமை சிவபதமடைந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சண்முகம் வேலுப்பிள்ளை – இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா – பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.

பகவத்சிங்கத்தின் (கோண்டாவில் அரச களஞ்சிய முன்னாள் பொறுப்பாளர்) அன்பு மனைவியும், தங்கேஸ்வரி (கனடா), உஷா (கனடா), புஸ்பகலா (லண்டன்), விக்கினேஸ்வரி (லண்டன்), தனஞ்செயன் (மின் இணைப்பாளர் – அரச அபிவிருத்தி கூட்டுத்தாபனம்) ஆகியோரின் பாசமிகு தாயாருமாவார்.

கேதீஸ்வரன் (கனடா), பிரகலாதீஸ்வரன் (கனடா), ரமேஷ்குமார் (லண்டன்), விமலேந்திரன் (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாருமாவார்.

பிரியங்கா, அஜந்தன், ஜெயந்தன், கஜனி, மாதினி, சாயினி, கேசவி, சஞ்ஜித், மதுஷன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியாருமாவார்.

கனகரத்தினம், மனோன்மணி ஆகியோரின் அன்பு சகோதரியும், துரைசிங்கம், பராசக்தி, காலஞ்சென்ற சிவசக்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (09.02.2016) செவ்வாய்க்கிழமை காலை 9மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (09.02.2016)
இடம் : சாம்பலோடை இந்து மயானம்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 021 490 2346
கைப்பேசி : 077 914 6881