மரண அறிவித்தல்
திருமதி மதியரசன் பிரபாவதி
பிள்ளையார் கோவில் வீதி,கிண்ணையடி,வாழைச்சேனையை பிறப்பிடமாகவும் இல.02-7/1 அக்கம் நிவாஸ,ஹேக்கித்த வத்தளையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி மதியரசன் பிரபாவதி 11.07.2017 அன்று கிண்ணையடி வாழைச்சேனையில் காலமானார். அன்னார் சரவணமுத்து,நாகரத்தி ஆகியோரின் அன்பு மகளும் கந்தையா மெய்யம்மாள் ஆகியோரின் அன்பு மருமகளும் கந்தையா மதியரசனின் அன்பு மனைவியும் அனுஷிகா,தனுஷிகா ஆகியோரின் அன்பு தாயாரும் மகாலிங்கம்(சவுதிஅரேபியா) ,யோகலிங்கம்,நொதிஸ்வரன்,கேதிஸ்வரன்(மலேசியா), வடிவேல், சுந்தரலிங்கம், விமலநாதன், தேவநந்தினி (சவுதி அரேபியா),புவநந்தினி,பேரின்பநாயகி,தயாவதி,தயாழினி ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
அன்னாரின் பூதவுடல் 13.07.2017 நாளை வியாழக்கிழமை மாலை 4.00 மணியளவில் வாழைச்சேனை கிண்ணையடி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.இவ்வறிவித்தலை உற்றார்,உறவினர்,நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
மதி (கணவர்)