மரண அறிவித்தல்

திருமதி மேரிமாகிறற் வென்சன்சிலாஸ்

நாரந்தனை தெற்கு, ஊர்காவற்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி மேரிமாகிறற் (அழகம்மா) வென்சன்சிலாஸ் (25.05.2016) புதன்கிழமை காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குருசு – சூசானம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான யோசேப் ஆனந்தம் தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.

காலஞ்சென்ற வென்சன்சிலாஸின் (யேசு) அன்பு மனைவியுமாவார்.

சுபாஸ், சுசி, றீகன், தீபன், றெஸ்மினி ஆகியோரின் பாசமிகு தாயாரும், சசிகரன் (கண்ணன்) அன்பு மாமியாருமாவார்.

அன்னாரின் பூதவுடல் இன்று (28.05.2016) சனிக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் அவரது இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட்டு புனித இராயப்பர் – சின்னப்பர் தேவாலயத்தில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு பின்னர் நாரந்தனை சேமக்கலையில் நல்லடக்கம் செய்யப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்
குடும்பத்தினர்.

நிகழ்வுகள்
தகனம்
திகதி : (28.05.2016)
இடம் : நாரந்தனை சேமக்கலை
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்
தொலைபேசி : 077 424 0771