மரண அறிவித்தல்
திருமதி ரோகினி சிவராசா
யாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட ரோகினி சிவராசா அவர்கள் 14-01-2017 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், இராசையா, காலஞ்சென்ற நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ஐயாத்துரை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவராசா அவர்களின் அன்பு மனைவியும், பிரியா அவர்களின் அன்புத் தாயாரும், கருணாகரனின் (ஆசிரியர் – யா/சாவகச்சேரி மகளீர் கல்லூரி) அன்பு மாமியாரும், சச்சிதானந்தன்(ஜேர்மனி), கருணாகரன்(ஜேர்மனி), நித்தியானந்தன்(ஆசிரியர் – சாவகச்சேரி இந்துக்கல்லூரி), அருளானந்தன்(கனடா), சுபாதினி(விரிவுரையாளர் – தேசிய கல்வியியல் கல்லூரி, கோப்பாய்) ஆகியோரின் அன்புச் சகோதரியும், குமாரலதா (ஜேர்மனி), நந்தினி(ஜேர்மனி), நந்தரூபி(யா /கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரி), கிருபாஜினி (கனடா), சத்தியேந்திரம் பிள்ளை (உப பீடாதிபதி, தேசிய கல்வியல் கல்லூரி), தங்கராசா, செல்வராசா(பிரான்ஸ்), இராசபூபதி, நடேசபிள்ளை, இராஜேஸ்வரி (கனடா), சிவப்பிரகாசம் (லண்டன்), நவரத்தினம் (ஜேர்மனி), ராதாதேவி ஆகியோரின் மைத்துனியும், ஆஜிசன், அபிசன், ஆஜிஷா ஆகியோரின் அன்பு பேர்த்தயும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இன்று (16-01-2017) திங்கட்கிழமை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.