மரண அறிவித்தல்
திருமதி வரதராணி பூரணேஸ்வரன்
அளவெட்டியை பிறப்பிடமாகவும் யாழ்ப்பாணத்தை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி வரதராணி பூரணேஸ்வரன் (20.04.2016) இன்று சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மாணிக்கப்பிள்ளையார் – தையல்நாயகி தம்பதியரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தியாகராசா – பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளுமாவார்.
காலஞ்சென்ற பூரணேஸ்வரனின் அன்பு மனைவியுமாவார்.
ரஞ்சினியின் (ஜேர்மனி) பாசமிகு சகோதரியும், றஜித்தன் (கஜன் – சிங்கப்பூர்), பூரண்யா (பூஜா) ஆகியோரின் பாசமிகு தாயாரும், ரஜீவின் அன்பு மாமியாருமாவார்.
துவாரகன் (ஜேர்மனி), கஸ்தூரி (ஜேர்மனி), கார்த்தீகன் (ஜேர்மனி) ஆகியோரின் ஆசை பெரியதாயாருமாவார்.
அதிஸ்ரா, அதிசயன், ஹரிஷ் (ஜேர்மனி), அமீரா (ஜேர்மனி), ஆதிஷ் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பேர்த்தியாருமாவார்.
அன்னாரின் சமாதிக்கிரியைகள் இன்று (21.04.2016) வியாழக்கிழமை மாலை 3மணியளவில் அவரது தற்காலிக இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக அளவெட்டி வடக்கு இந்துமயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்
தற்காலிக முகவரி
29/25, உடையார் ஒழுங்கை,
ஐயனார் கோயிலடி,
தட்டாதெரு, யாழ்ப்பாணம்