மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் தம்பு
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, கைதடி நுணாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திரு ஆறுமுகம் தம்பு அவர்கள் இன்று (09.05.2016) திங்கட்கிழமை மாலை கைதடி நுணாவிலில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.
அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகம் – சின்னப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும்,
காலஞ்சென்ற ராஜேஸ்வரி மற்றும் அன்னபாக்கியத்தின் பாசமிகு கணவரும்,
லோகேஸ்வரி (கனடா), குகதாசன் (இந்தியா), அமரர் புவனேந்திரன், சக்திதாசன் (இலங்கை), ரவீந்திரநாதன் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்.
ஹத்தரீன் (இந்தியா), கமலாதேவி (இலங்கை), ரொஷானி (கனடா) ஆகியோரின் அன்பு மருமக்களும்,
யூட், ஜேசுதாஸ், பிரதீபா, அமரின் சியானா, ராஜ்குமார், சசிகரன், ரஜித்தா, விஜயக்கோன், குனேந்தினி, லலித்குமார், நந்தராஜ், ரீனா, ரஜன், ஆகியோரின் பாசமிகு பேரனும்,
ஜோசுவா, ஹம்சன் கோட் பிரியன், மேரி பிறிஜிற், அர்லின் ஆகியோரின் பாசமிகு பூட்டனுமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை (10.05.2016) செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக குச்சப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்,
சக்திதாசன் (மகன்)