மரண அறிவித்தல்
திரு ஆறுமுகம் தேவராசா
யாழ். அளவெட்டி வடக்கு முருக்கடியைப் பிறப்பிடமாகவும், அளவெட்டி மேற்கு விசவெட்டியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் தேவராசா அவர்கள் 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், ஆறுமுகம் கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
பராசக்தி அவர்களின் அன்புக் கணவரும்,
சந்திரவதனி(சுவிஸ்), விக்னேஸ்வரன்(அவுஸ்திரேலியா), பார்த்தீபன்(அவுஸ்திரேலியா), நிசான்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
செல்வராசா(சுவிஸ்), தீபா(அவுஸ்திரேலியா), சுதா(அவுஸ்திரேலியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அபிராமி, அஸ்வினி, அஸ்விதா, சுவாதிகா, காவியா, சேயோன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 25-06-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் தம்மள இந்துமயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்