மரண அறிவித்தல்
திரு கணபதிப்பிள்ளை பொன்னையா
கைதடி மேற்கைப் பிறப்பிடமாகவும், கைதடி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை பொன்னையா நேற்று (21.03.2016) திங்கட்கிழமை காலமானார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான திரு.திருமதி கணபதிப்பிள்ளை – கதிராசிப்பிள்ளை தம்பதியரின் புதல்வரும் நாகரத்தினம் அவர்களின் அன்பு கணவருமாவார்.
காலஞ்சென்றவர்களான திருமதி பொன்னம்மா இராமநாதன், செல்வி தங்கம்மா மற்றும் திருமதி சிவலஷ்மி முத்துக்குமாரசுவாமி, திருமதி பாலசுப்ரமணியம் செல்லம்மா (ஜேர்மனி), நாகேந்திரம் (பிரான்ஸ்), காலஞ்சென்ற தெய்வேந்திரம் மற்றும் செல்லத்துரை (சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகேதரருமாவார்.
ஆ.முத்துக்குமாரசுவாமியின் (சுவிஸ்) மைத்துனரும், தயாபரன் (லண்டன்), விக்கினேஸ்வரன் (பிரதிப் பணிப்பாளர் தியாகி அறக்கொடை நிறுவனம்) ஆகியோரின் அன்புத் தந்தையாருமாவார்.
திருமதி எழினி விக்கினேஸ்வரன் (அபிவிருத்தி உத்தியோகத்தர் நன்நடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் அரச சிறுவர் பொறுப்பேற்பு இல்லம் கைதடி ), திருமி இந்திராதேவி (லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனுமாவார்.
அபிஷா, ஆத்ஷா, ஆத்விகா, அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (22.03.2016) செவ்வாய்க்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக ஊரியான் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்