மரண அறிவித்தல்
திரு கதிர்காமு பத்மநாதன்
யாழ். புத்தூர் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி தனங்கிளப்பை வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமு பத்மநாதன் அவர்கள் (12-05-2016) வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமு சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும்,
சந்திரா அவர்களின் அன்புக் கணவரும்,
சதீஸ்கரன்(கனடா), தர்ஷிகா(சுவிஸ்), தயூரன்(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மாணிக்கம், காலஞ்சென்ற சின்னத்துரை, அன்னம்மா, காலஞ்சென்ற இலட்சுமி, மகேஸ்வரி, இரத்தினம், கனகசபை, செல்வராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
அனுஷியா(கனடா), நித்தியானந்தம்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மகேஸ்வரி, சிவராமலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், மங்கையற்கரசி, ருக்குமணி, செல்லம், நவரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யதீஸ்(கனடா), அனுசன்(கனடா), அஸ்மிதா(கனடா), அபிநயா(சுவிஸ்), ஆகாஷ்(சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனத்திற்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்