மரண அறிவித்தல்
திரு குஞ்சர் சின்னப்பு
யாழ். வரணி இயற்றாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட குஞ்சர் சின்னப்பு அவர்கள் 14-10-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற குஞ்சர், சின்னன் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, கண்ணி தம்பதிகளின் பாசமிகு மருமகனும், வள்ளிப்பிள்ளை அவர்களின் ஆருயிர்க் கணவரும், மகேஸ்வரி(சுவிஸ்), மனோகரன், கமலாகரன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும், காலஞ்சென்றவர்களான குழந்தை, சின்னப்பிள்ளை ஆகியோரின் அன்புச் சகோதரரும், நாகராஜா(சுவிஸ்), சுமிதா, றதினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும், சின்னத்தங்கம், சரஸ்வதி, இராசம்மா, தங்கராஜா ஆகியோரின் அன்பு மைத்துனரும், கந்தசாமி, வேலாயுதம், சரஸ்வதி ஆகியோரின் அன்பு மாமனாரும், நிசா, நிபிதன், அஸ்விகா, அபிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக்கிரியை 17-10-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைப்பெற்று பின்னர் வரணி இயற்றாலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும். இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். |
தகவல் |
மனைவி, பிள்ளைகள் |